மதுரை வடக்கு மாசி வீதியில் பேரா.துளசிராமசாமியின் ‘அரூசா’ அச்சகத்தின் படியில் அவர் நின்று கொண்டிருந்தார். நிஜ நாடக இயக்கம் பேரா.மு.ராமசாமியின் ‘விழிகள்’ மாத இதழும் அச்சாகியதால் மு.ரா.வும் இருந்தார். மதுரையில் கோயில்களுக்கும் சாமி வலங்களுக்கும் குறைவில்லை. முன் மாலையை லேசாய் அசைத்துத் தள்ளியபடி இரவு பின்னால் மெதுவாக வந்தது. அது குளிர்காலமில்லை. கோடைகாலம். மதுரைக் கோடையில் இரவு அப்படித்தான் ஆடி அசைந்து வரும். ‘பெட்ரோமாக்ஸ்’ – விளக்கு வெளிச்சத்தில் வடக்கு மாசி வீதியில், கிழக்கிலிருந்து மேற்காக ‘அம்மன்’ சப்பரத்தில் வந்து கொண்டிருந்தாள். ஒவ்வொருவரது கைகளும் கன்னங்களும் இதற்காகவே இருப்பது போல் கூப்புவதும் கன்னத்தில் போடுவதுமாய் இருந்தார்கள். “எவ்வளவு பெரிய தேர். எத்தனை பெரிய கூட்டம். இவ்வளவு பெரிய தேரில் அம்மன் உரு மட்டும் கண்ணுக்குத் தெரியலே. இந்த மனுசப்பயல்களைப் பார்த்து பயந்து ஒரு மூலையில் ஒடுங்கி உக்காந்திட்டா போல” - அவர் பேசினார். கூட்டத்திலிருந்து அவர் பேச்சு விலகியதாய்க் காணப்பட்டது. எதுவொன்றையும் பொதுப்புத்திப் பார்வையிலல்லாமல் புதிய கோணமாய் வெளிப்படுத்தும் திறன் கொண்டி...
பா.செயப்பிரகாசம் அவர்களின் கதைகளை மதிப்பிட்டு எழுதும் வாய்ப்பு இருபதாண்டுகளுக்கு முன்பு (2000'ல்) எனக்குக் கிடைத்தது. பல முக்கியமான எழுத்தாளர்களின் படைப்புலகங்கள் குறித்துக் கலைஞன் பதிப்பகம் ஒரு வரிசையை ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி நான் பா.செ படைப்புலகம் எழுதினேன் - களந்தை பீர் முகம்மது. கரிசல் காட்டுக்காரரான பா.செயப்பிரகாசம் தனது முதல் கதையை எழுத, மதுரை மண்ணே கை நீட்டி அழைத்துள்ளது. பள்ளிப் படிப்பில் மனதில் ஆழமாய்த் தைத்த சம்பவம் ஒன்றின் மூலம் ‘குற்றம்’ என்ற முதல் கதை 1971-ல் வெளியானது. ‘தாமரை’ தான் முதல் கதையின் மேடை. அன்று துவங்கிய இலக்கியப் பயணம் இடையிலே சிறிது தடைப்பட்டு நின்று, மீண்டும் பழைய பிரவாகமாகவே பெருகிவிட்டது. தாமரை, மனஓசை இதழ்களில் இவரின் அதிகமான கதைகள் வெளியாகி, பரபரப்பையும் விவாதங்களையும் உண்டாக்கியுள்ளன. பாமரர்களின் சார்பான (தொய்வுறாத) படைப்பாளியான பா.செயப்பிரகாசமோ தமிழ்நாடு அரசின் செய்தித் துறையில் மிகமிக உயர்ந்த பதவி வரை முன்னேறிச் சென்று தன் தகுதிகளை, ஆளுமையை நிருபித்துக் கொண்டவர். ஆனால் இலக்கிய உலகில் இவர் அறியப்பட்டதெல்லாம் நாளது வரை ஒரு படைப்பாளியாகத்...
ஓரிரு ஆண்டுகளுக்குள் முன்னும் பின்னுமாய் பல கொடிய நிகழ்வுகள் அரங்கேறிவிட்டன. 'ராகிங்' கொடுமைக்குத் தப்ப முடியாமல் போன அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் நாவரசு. பருந்துகளின் கொடூர நகங்களுக்குப் பிடிபடாமல் தப்பியோடிய கோழிக்குஞ்சு போல் மாணவி சரிகா. கணவன் கைப்பிடித்தும் கருக்கப்பட்ட மலர் பாண்டிச்சேரி பார்வதி ஷா. வாழ்க்கை - இவர்களுக்கு முடிந்து விட்டது - மீள முடியாத இவர்களின் வாழ்வு முடிவை மரணம் என்று சொல்வதை விட 'வன்கொலை' என்று சொல்வதே பொருத்தம். பார்வதி ஷாவின் கொலை பாண்டிச்சேரியை மட்டுமல்ல; மாணவர்கள் நாவரசு, சரிகா கொலை போலவே தமிழ்கூறும் நல்லுலகை உலுக்கி எடுத்திருக்கிறது. பார்வதி ஷா கொலை அம்பலப்படுத்துதலில், ஊடகங்கள், மக்கள் உரிமை அமைப்புகள், சமூக இயக்கங்கள் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றியிருக்கின்றன. பி.யூ.சி.எல் உறுப்பினர்கள் மற்றும் சமூக அக்கறை கொண்டவர்கள் சாலை மறியலைத் தொடங்குகிறார்கள். பொதுமக்களின் விழிப்புணர்வும் சமூக அக்கறையும் ஏதோ ஒரு புள்ளியில் சமூக நடவடிக்கையாக மாறக் காத்திருக்கின்றன. அது தொடங்கி வைக்கப்படுகிறது. குற்றவாளியான கமல் ஷா ...
நியூஸிலாந்து சங்கநாதம் தமிழ் ரேடியோ - 18 ஜனவரி 2013 பொங்கல் வாழ்த்து உரை மற்றும் தமிழ் மொழி, தமிழர் கலாச்சாரம், பொங்கல் கொண்டாட்டத்தின் பின்னணி பற்றி எழுத்தாளர் பா.செயப்பிரகாசம். வணக்கம். முதலில் நியூஸிலாந்து வாழ் தமிழர்களுக்கு எனது பொங்கல் வாழ்த்துக்கள். குறிப்பாய் தமிழ் கலை இலக்கிய வட்டத்தின் சங்கநாதம் வானொலி மூலமாக நாளை நடக்கவிருக்கும் பொங்கல் நிகழ்வுக்கு எனது வாழ்த்துக்கள். தமிழகத்தில் வாழும் ஒரு எழுத்தாளன் நான். எழுத்தாளன் என்பவன் முந்திய காலத்து ஞானிகள் போல சமூகத்தின் மனசாட்சியாக இயங்க வேண்டும் என்று கென்ய எழுத்தாளர் கூகி வா தியாங்கோ கூறுவார். தமிழ் சமூகத்தின் மனசாட்சியாய், தமிழகத்தின் மனச்சாட்சியாய் நான் உங்களுடன் இந்த பொங்கல் விழாவினை பகிர்ந்து கொள்ள விழைக்கிறேன். எந்த நாளில், எந்த சூழலில் நீங்கள் இந்த பொங்கல் திருநாளை எடுக்கிறீர்கள் என்பது மிக முக்கியமானது. நாம் ஒன்றும் இல்லை நமக்கென்று ஒன்றுமில்லை. ஏதிலிகளாய் உலக வீதிக்கு நடத்தப்பட்டுள்ளோம் நாம் என்றொரு நிலை இன்று இருக்கிறது. நமக்கென்று ஒரு காலம் இருந்தது. அது ஒரு காலம். அதுதான் பொங்கல் திருநாள், உழவர் திருநாள், அறு...
கருத்துகள்
கருத்துரையிடுக