தேர்தல் முடிந்துவிட்டது, அனைத்தையும் தீர்மானிக்கிற அரசியலை மக்கள் தீர்மானித்து முடித்து விட்டார்கள். பணம், சாதி, பகட்டு என்ற பொங்குமாங் கடல்கள் பெருக்கெடுக்க, மக்கள் மூழ்கி எடுத்து வந்தது முத்துக்களா, சிப்பியா என்பதை ஜனநாயகம் நிரூபணம் செய்யும். மழை பெய்து ஓடை, வாய்க்கால், ஆறுகளில் மண்டியும் ககிழியுமாய் வரும் புதுவெள்ளப் பெருக்கின் அழுக்கைச் சாப்பிட மீன்கள் எதிர்த்தேறிச் சாடிவரும். சாடி கூட்டம் கூட்டமாய் வலையில் அகப்படுவது போல, அழுக்கைச் சாப்பிட்டு அரசியலைத் தூய்மைப்படுத்தி விட்டார்களா மக்கள்? காலம் சொல்லும். நடத்து முடிந்த தேர்தலில் சாதி அணிவகுப்பு விசுவரூபம் எடுத்திருந்தது. ஒரு தொகுதியில் எந்தச் சாதி அதிகம் இருக்கிறதோ, அந்த சாதி வேட்பாளரை நிறுத்துவது என்பதுடன் கூடுதலாக, சாதிக் கட்சிகள் என்ற வெளிப்படையான அடையாளங்களுடன் அரசியல் கட்சிகள் ஒளிவு மறைவின்றி வாக்கு வேட்டை நடத்தின. தேர்தலில் அந்தந்தச் சமூகத்தினைச் சேர்ந்தவர்கள் கூட்டாக வாக்களித்துள்ளனர். சமூகம் என்ற வார்த்தை சாதியைக் குறிப்பதாகக் குறுகிவிட்டது. கழுதை தேய்ந்து கட்டெறும்பான க...
கருத்துகள்
கருத்துரையிடுக