சாதிய வன்முறைக்கு எதிரான தமிழ்ச் சமூகத்தின் கூட்டறிக்கை

தமிழ்ச்சமூகத்திற்கு ஒரு பணிவான வேண்டுகோள்!

'சாதி மிகுந்த அதிகாரத்தோடு இருப்பது இந்தியாவில்தான். சாதி இவ்வளவு தூரம் ஆதிக்கம் செலுத்துவதற்குக் காரணம், அதற்கு மத அங்கீகாரம் இருப்பதுதான்'' எனக் குறிப்பிட்டார் புகழ்பெற்ற வரலாற்றறிஞர் தாயின்பீ. மனுசாஸ்திரமும், வருணாசிரம தர்மமும் இந்து மதத்தில் சாதி அமைப்பைத் தாங்கிப் பிடிக்கும் அடித்தளங்களாக உள்ளன. அதனால்தான் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகியும் சாதியை ஒழிக்க முடியவில்லை. மனிதகுல வரலாறு வளரவளர, சாதி அமைப்பும் தன்னை நுணுக்கமாகப் புதிப்பித்து கொண்டே வந்துள்ளது.

இந்தியத் துணைக்கண்டத்தில் பூலே, அம்பேத்கர், பெரியார் போன்றோர் வீரியமிக்க, விடாப்பிடியான போரைக் கட்டவிழ்த்து விட்ட காரணத்தால், சாதியின் மேலாதிக்கம் சற்றே குறைந்திருந்தது. ஆனால் அண்மைக் காலத்தில் தமிழகத்தில் சாதிவெறி தன் கோரமுகத்தை மீண்டும் தீவிரமாகக் காட்டத் தொடங்கியுள்ளது.

தன் சாதிப் பெண்களைத் திருமணம் செய்யும் பிற சாதியினரை வெட்ட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டிகுரு தோள் தட்டுகிறார். கொங்கு வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த 'திடீர்' தலைவர் மணிகண்டன் என்ற நபர், சாதிமறுப்புத் திருமண எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கச் சொல்வதோடு, கொங்கு வேளாளர் சமுதாயப் பெண்களுக்குச் சொத்துரிமையே கூடாது எனக் கூக்குரலிடுகிறார். அதே போல், 'பிராமணாள் கபே', தேவர்பேரவையினர் போன்றோரும் தத்தம் சாதிப்பெருமிதத்தில் ஊன்றி நிற்கின்றனர்.

தாங்கள் ஆண்ட பரம்பரையைச் சேர்ந்தவர்கள் எனப் பெருமைப்பட்டுக் கொள்ளாத சாதியே தமிழ்நாட்டில் இல்லை. இந்தப் பின்னணியில்தான் அண்மையில் 'தலித்' இளவரசன், வன்னியர் இனத்தைச் சார்ந்த திவ்யாவைக் காதல் திருமணம் செய்து கொண்டதால், சாதிக்கு இழுக்கு நேர்ந்ததாக 2012 நவம்பர் 7 ஆம் நாள் தலித்துகள் வாழும் நாய்க்கன்கொட்டாயை ஒட்டிய பகுதிகளை எரித்துச் சாம்பலாக்கினர் வன்னிய இனத்தவர்.

தமிழகத்தில் இத்தகைய தீண்டாமைக் கொடுமை பல்லாண்டுகளாகப் பல்வேறு வடிவங்களில் தங்குதடையின்றி நடைபெற்று வருகிறது. சாதி இந்துக்கள் உள்ள பகுதியில் செருப்புப் போட்டுக் கொண்டு தலித்துகள் நடக்கக் கூடாது; மிதி வண்டியில் செல்லக்கூடாது; தலித் சத்துணவுப் பணியாளர் சமைத்த உணவைப் பிற சாதிக் குழந்தைகள் உண்ணக்கூடாது; பள்ளியிலும் , சமூகத்திலும் இரட்டைக்குவளை முறை; தலித் குழந்தைகள் பிறசாதிக் குழந்தைகளோடு பள்ளி ஆண்டு இறுதியில் ஒன்றாக நிழற்படம் எடுக்கக் கூடாது. மாறாகத் தலித் குழந்தைகள் மட்டும் தனியே படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நடைமுறை; தலித்துகள் நாய் அதிலும் குறிப்பாக ஆண்நாய் வளர்க்கக் கூடாது, தலித் ஊராட்சித் தலைவர்கள் இருக்கையில் அமரக்கூடாது; கொடியேற்றக் கூடாது; தலித்துகள் ஆலயத்திற்குள் நுழையக் கூடாது; அவர்கள் செத்தபிறகும் தனிச் சுடுகாட்டில்தான் புதைக்க வேண்டும் எனத் தினுசு தினுசாக தீண்டாமைக் கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல, திண்ணியத்தில் தலித்துகளை மனிதமலம் தின்ன வைத்த கொடுமை, கற்பனைக்கும் எட்டாத அயோக்கியத்தனம் ஆகும்.

இருபத்தியோராம் நூற்றாண்டில் இப்படி எல்லாம் நடப்பதைச் சிலர் நம்பக்கூட மறுக்கலாம். ஆனால் தருமபுரி நிகழ்ச்சி, அவர்களுக்கெல்லாம் ஒரு பாடமாகும். திவ்யா-இளவரசன் திருமணத்தைச் சாக்கிட்டு, காதல் திருமணத்தையும், சாதிமறுப்புத் திருமணத்தையும் கிண்டலும், கேலியும் செய்யும் அறிக்கைகள் வெளியாகின்றன. தலித்துகள் நாகரிகமாக உடை அணிவதைக்கூட உள்நோக்கத்தோடு நக்கலிடும் போக்கு, பெரும் அதிர்ச்சியை உண்டாக்குகிறது.

காதல் திருமணங்கள் தோல்வி அடைந்து விட்டன என்பதை மெய்ப்பிக்கப் பொய்யான புள்ளி விவரங்கள் அள்ளி வீசப்படுகின்றன. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிராக நடத்தப்படும் பல குற்றச் செயல்கள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுவதில்லை. காவல் துறையிலுள்ள சாதிய மேலாதிக்க சக்திகள் வேண்டுமென்றே சாதாரண சட்டப்பிரிவுகளின் கீழ் பதிவு செய்கின்றன. அப்படியே உரிய சட்டபிரிவுகளின் கீழ் பதிவு செய்தாலும், சரியான சாட்சியங்களை முன் நிறுத்துவதில்லை; தக்க முறையில் வாதாடுவதும் இல்லை. அரசின் இத்தகைய அலட்சியப் போக்கின் காரணமாகத்தான் இச்சட்டத்தை இன்னும் வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தவிரவும் 'தமிழக்காவல் நிலையங்களில் கடந்த பல ஆண்டுகளாக 2,092 வன்கொடுமை வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த 336 வன்கொடுமை சம்பவங்களில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த 18 பெண்கள் உள்ளிட்ட 44 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் நீதி மன்றங்களில் 3,568 வன்கொடுமை வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் 1,020 வழக்குகளில் மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. (தீக்கதிர்4/12/2012) உண்மை நிலவரம் இவ்வாறிருக்க இதை மூடி மறைக்கும், திசை திருப்பும் வேலைகள்தான் வேகமாக நடைபெற்று வருகின்றன. ஒரு திருமணம் தோல்வி அடைய சாதி வேறுபாடு தவிர வேறு எவ்வளவோ காரணங்கள் உள்ளன. பெற்றோர் பார்த்து ஒரே சாதியில் செய்யப்படும் திருமணங்களின் தோல்வி விகிதம் இதைவிடப் பல மடங்கு இருப்பதைப் பலரும் அறிவர்.

இவற்றையெல்லாம் வசதியாக மறைத்து விட்டு, தலித்துகள் வசிக்கும் பகுதியில் பெண்கள் நடமாட முடியவில்லை; படிக்கும் பெண்களை தலித் இளைஞர்கள் ஈவ்டீசிங் செய்வதால், பெண்களின் படிப்புப் பாதியிலேயே நின்று விடுகிறது'. என்றெல்லாம் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர்.இராமதாஸ் சொல்வது எந்த அளவு ஒப்புக் கொள்ளத் தக்கது என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

திவ்யா-இளவரசன் உள்ளிட்ட சாதி மறுப்புத் திருமணங்களிலுள்ள மற்றொரு செய்தியும் குறிப்பிடத்தக்கதாகும். ஆண் உயர்சாதியாகவும், பெண் தாழ்ந்த சாதியாகவும் இருந்தால் ஏவப்படும் வன்முறையை விட, ஆண் தாழ்ந்த சாதியாகவும், பெண் உயர்ந்த சாதியாகவும் இருந்தால் ஏவப்படும் வன்முறை அதிகமாக இருக்கிறது. அதிலும் ஆண், பெண் இவர்களில் யாரேனும் ஒருவர் தலித்தாக இருந்துவிட்டால் வன்முறையின் வீரியம் பன்மடங்காக இருக்கும். பெண், சாதீய மேலாண்மையின் குறியீடாக இருக்கிறாள். மேலும் அவளது சொத்துரிமை, ஆணாதிக்கத்திற்கு ஒரு சவாலாக இருக்கிறது. எனவே சாதிப்பெருமை, சொத்து என இரண்டையும் ஒருங்கே இழக்க சாதீயமும் விரும்புவதில்லை; ஆணாதிக்கமும் விரும்புவதில்லை. எனவேதான் தாக்குதலின் தீவிரம் அதிகரிக்கிறது.

அதேபோல், 'தீண்டாமை ஒழிப்பு ' என்பதை மட்டும் தனியே வலியுறுத்துவது முழுமையான சீர்திருத்தம் ஆகாது. ஒட்டுமொத்த சாதிஒழிப்புதான் தீண்டாமையை நிரந்தரமாக நீக்கக்கூடியது. எனவே தீண்டாமை ஒழிப்பும், சாதி ஒழிப்பும் ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரிக்க முடியாத அளவு இயங்கியல் உறவு கொண்டவையாக உள்ளன.

தலித் தலித் அல்லாதோருக்கு இடையிலான மோதலில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் ஒரு கவசமாக இருந்து காத்து வருகிறது. எனவே இச்சட்டம் நீர்த்துப் போய்விடாமல், இன்னும்வலிமையானதாக மாற்றப்பட வேண்டும். அதே சமயம் இச்சட்டம் தவறான முறையில் பயன்படுத்தப்படாமல் தடுப்பதற்கு உரிய கண்காணிப்பு முறைகளையும் நடைமுறைப்படுத்த வேண்டும். இந்தச் சூழலில்தான் காதல் திருமணம் சாதி மறுப்புத் திருமணம் ஆகியவற்றுக்கு ஆதரவாகவும், பெண்களின் சொத்துரிமை பறிக்கப்படுவதற்கு எதிராகவும், தர்மபுரி சாதிவெறியாட்டத்திற்குத் துணை போனவர்களைக் கைது செய்ய வலியுறுத்தியும் தமிழ்ச்சமூகத்தின் சனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டியுள்ளது. சாதீயவாதிகளின் கூட்டணிக்கு மாற்று, சனநாயக சக்திகளின் ஒற்றுமையே ஆகும். அத்தகையோர் ஒற்றுமைய நாம் உயர்த்திப் பிடிப்போம்.

  • காதல் திருமணங்கள் , சாதி மறுப்புத் திருமணங்களை ஆதரிப்போம்!
  • பெண்களின் சொத்துரிமையைப் பறிக்கும் முயற்சிகளை முறியடிப்போம்!
  • தர்மபுரி சாதிவெறி வன்முறையில் ஈடுபட்டவர்கள் அனைவர் மீதும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989 பிரிவுகள் 3 (2 ) (3), 3(2)(4), 3(2)(5) போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உடனடியாகக் கைது செய்ய வேண்டும்!
  • அரசியல் சாசன சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட சாதி மறுப்புத் திருமணங்களுக்கு எதிராகப் பேசி, தாழ்த்தப்பட்டோர் மீதான வன்முறைகளைத் தூண்டும் வகையில் கூட்டங்கள் நடத்துவோர்களை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.

மேற்காணும் கோரிக்கைகளைக் கீழ்க்காணும் நாங்கள் ஆதரிக்கிறோம்; வழி மொழிகிறோம்!

பெயர்கள் அகரவரிசைப்படி:

அமரந்தா    (இலத்தீன் அமெரிக்க நட்புறவுக் கழகம்)

அ.மார்க்ஸ்                                  (பேராசிரியர், மனித உரிமை ஆர்வலர்)

அகரம் சதீஷ்                               (மானமும் அறிவும் வலை)

அதியமான்                                   (ஆதித்தமிழர் பேரவை)

அமுதன்                                         (ஆவணப்பட இயக்குனர்)

அய்யப்ப மாதவன்                      (கவிஞர்)

அரங்க.குணசேகரன்                  (தமிழக மக்கள் புரட்சிக் கழகம்)

அரிமா தோழர்                               (சுதேசி இயக்கம்)

அருண் சோரி                                (தமிழ்நாடு மக்கள் கட்சி)

அருள் எழிலன்                              (பத்திரிக்கையாளர்)

அழகிய பெரியவன்                      (எழுத்தாளர்)

அறிவன்                                            (இலக்கிய விமர்சகர்)

அன்பாதவன்                                   (கவிஞர்)

அன்வர் பாலசிங்கம்                    (எழுத்தாளர்)

ஆ.சிவசுப்ரமணியன்                   (சமூக ஆய்வாளர்)

ஆதி வள்ளியப்பன்                        (பூவுலகின் நண்பர்கள்)

ஆர்.ஆர்.சீனிவாசன்                      (ஆவணப்பட இயக்குனர்)

ஆளூர் ஷாநவாஸ்                        (ஆவணப்பட இயக்குனர்)

இரா.முருகவேள்                            (மொழிபெயர்ப்பாளர்)

இராசேந்திர சோழன்                     (எழுத்தாளர், மண்மொழி இதழ் ஆசிரியர்)

இறையரசன்                                     (பேராசிரியர், தமிழர் நல உரிமை இயக்கம்)

இ.சி.ராமச்சந்திரன்                          (பார்வை பண்பாட்டு இயக்கம்)

எவிடென்ஸ் கதிர்                          (சமூக செயற்பாட்டாளர்)

என்.ஜி.சுகுமாரன்                            (சமூக ஆர்வலர்)

எஸ்.என்.நாகராசன்                        (மூத்த மார்க்சிய அறிஞர்)

எஸ்.ராமலிங்கம்                              (அயோத்திதாசர் ஆய்வு நடுவம்)

எஸ்.வி.உதயகுமார்                        (மேலாண்மை ஆலோசகர்)

உமர்கயான்                                        (இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்)

க.அருணபாரதி                                  (தமிழ்த் தேச பொதுவுடைமைக் கட்சி)

கணியன் பாலன்                       (தமிழீழ இனப்படுகொலைக்கு எதிரான மக்கள் இயக்கம்)

கதிரவன்                                               (தமிழர் நட்பு கழகம், மும்பை)

கந்தையா                                             (மலையக தமிழர் இயக்கம்)

கருப்பசாமி                                          (தமிழ்த் தேச தொழில் முனைவோர் கூட்டமைப்பு)

பாலா                                                      (கார்ட்டூனிஸ்ட்)

கி.வெ.பொன்னையன்                      (தற்சார்பு விவசாயிகள் சங்கம்)

கிறிஸ்டினா சாமி                               (ஆம் ஆத்மி கட்சி)

குட்டி ரேவதி                                         (கவிஞர்)

குமணன்                                                  (தொழிலாளி இதழ் ஆசிரியர்)

கே.ஜி.சம்பத்குமார்                              (மென்பொருள் தொழிலதிபர்)

கொளத்தூர் மணி                                  (திராவிடர் விடுதலைக் கழகம்)

கோ.சுகுமாரன்                                        (மக்கள் உரிமை கூட்டமைப்பு)

கோச்சடை                                                (பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர்)

கோசின்ரா                                                 (கவிஞர்)

கோவை கு.ராமகிருட்டிணன்           (தந்தை பெரியார் திராவிடர் கழகம்)

கோவை ஞானி                                        (தமிழ் நேயம்  இதழ் ஆசிரியர்)

ச.பாலமுருகன்                                         (மக்கள் சிவில் உரிமைக் கழகம்)

சக்குபாய்                                                      (பேராசிரியர் - பெரியாரியலாளர்)

சங்கரநாராயணன்                                    (லோஹியா அகாடமி,   ஒரிசா)

சந்திரபோஸ்                                               (தியாகி இம்மானுவேல் பேரவை)

சம்பத்குமார்                                                  (தொழில் அதிபர்)

சி.மகேந்திரன்                                               (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)

சி.ராசன்                                           (கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம்,  பெங்களூரு)

சி.ஜே.ராஜன்                                 (மனித உரிமைகளுக்கான குடிமக்கள் இயக்க)

சிதம்பரன்.கி.                                                   (வழக்கறிஞர்)

சுப.வீரபாண்டியன்                                       (திராவிட இயக்கத் தமிழர் பேரவை)

சுப்ரபாரதிமணியன்                                      (எழுத்தாளர், கனவு இதழ் ஆசிரியர்)

செங்கோட்டையன்                                      (தலித் விடுதலைக் கட்சி)

செந்தலை கவுதமன்                                     (சூலூர் பாவேந்தர் பேரவை)

செந்தில்                                                              (சேவ் தமிழ்ஸ் இயக்கம்)

செந்தில்நாதன்                                                 (ஆழி பதிப்பகம்)

செல்வமணியன்                                             (தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சி)

செல்வராஜ் முருகையன்               (மனித உரிமை  ஆர்வலர்)

டேவிட் அமலநாதன்                         (தமிழ் சமூக கல்வி இயக்கம்)

தங்கராஜ்                                               (வழக்கறிஞர்)

தமிழ் வேங்கை                                      (ஐந்திணை பாதுகாப்பு இயக்கம்)

தமிழகன்                                                   (நதிகள் பாதுகாப்பு இயக்கம்)

தமிழச்சி தங்கபாண்டியன்                   (கவிஞர்)

தமிழ்நாடன்                                                 (கவிஞர்)

தமிழழகன்                                                    (உழைக்கும் மக்கள் குடியரசு இதழ் ஆசிரியர்)

தமிழேந்தி                                                      (கவிஞர்)

தாமரை                                                            (கவிஞர்)

தி.க.சி.                                                               (மூத்த எழுத்தாளர்)

தியாகு                                                             (தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்)

திருநாவுக்கரசு                                            (தாளாண்மை  உழவர் இயக்கம்)

திருநாவுக்கரசு                                             (நிழல்   இதழ் ஆசிரியர்)
 
திருமுருகன் காந்தி                                   (மே பதினேழு இயக்கம்)

துரை சிங்கவேல்                                         (மக்கள் ஜனநாயக குடியரசுக் கட்சி)

தேவிபாரதி                                                      (எழுத்தாளர்)

தொ.பரமசிவன்                                               (சமூக ஆய்வாளர்)

நாடோடி தமிழன்                                           (சமூக ஆர்வலர்,  மும்பை)

நிழல்வண்ணன்                                                (மொழிபெயர்ப்பாளர்)

நீலவேந்தன்                                                     (ஆதித்தமிழர் பேரவை)

நெடுஞ்செழியன்                                             (பேராசிரியர்)

ப.பா.மோகன்                                                   (மூத்த வழக்கறிஞர்)

பரந்தாமன்                                                         (தமிழர் தேசிய இயக்கம்)

பன்னீர் செல்வம்                                             (பொறியாளர்)

பா.செயப்பிரகாசம்                                           (எழுத்தாளர்)

பாமரன்                                                                 (எழுத்தாளர்)

பானுமதி                                                     (வழக்கறிஞர், மனித உரிமை மக்கள் கழகம்)

பி.டி.சண்முகசுந்தரம்                        (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-- மார்க்சிஸ்ட் லெனிஸ்ட்)

பிரபா.கல்விமணி                                            (மக்கள் கல்வி இயக்கம்)

பிரிட்டோ                                                             (மனித உரிமையாளர்,)

பிரேம்                                                                     (எழுத்தாளர்)

புவியரசு                                                                 ( கவிஞர்)

பூங்குழலி                                                             (சமூக செயற்பாட்டாளர்)

பெ.மணியரசன்                                           (தமிழ்த் தேச பொதுவுடைமைக் கட்சி)

பெருமாள் முருகன்                                          (எழுத்தாளர்)

பொதியவெற்பன                                               (எழுத்தாளர்)

பொள்ளாச்சி நசன்                                             (தமிழம் வலை)

பொன்.சந்திரன்                                                    (மக்கள் சிவில் உரிமைக் கழகம்)

பொன்னீலன்                                  (அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்க)

மதிவண்ணன்                                         (தமிழ்நாடு சாக்கிய அருந்தியர் சங்கம்)

மாலதி மைத்ரி                                         ( கவிஞர்)

மீ.த.பாண்டியன்                            (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (ம.லெ. மக்கள் விடுதலை))

முகம்மது அலி                                          (காட்டுயிர்   இதழ் ஆசிரியர்)

மோகன்ராசு                                           (தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்)

யமுனா ராஜேந்திரன்                         (எழுத்தாளர், இலண்டன்)

ராசாமணி                                                (குறுஞ்செய்தி வட்டம்,   KSV)

ராம்குமார்                                               (பொதுநல மாணவர் எழுச்சி இயக்கம்)

லெனா.குமார்                                         (யாதுமாகி பதிப்பகம்)

வளர்மதி                                                    (எழுத்தாளர்)

வாலாசா வல்லவன்                             (பெரியாரியலாளர்)

விடுதலை இராசேந்திரன்                  (திராவிடர் விடுதலைக் கழகம்)

விஜயகுமார்                                             (சமூக ஆர்வலர்)

வீரபாகு                                                        (மனித உரிமை ஆர்வலர்)

வேலிறையன்                                        (சமூக நீதித் தமிழ்த் தேசம் இதழ் ஆசிரியர்)

ஶ்ரீதர்                                                       (விழித்தெழு இயக்கம், மும்பை)

ஹென்றி டிபேன்                                   (மக்கள் கண்காணிப்பகம்)


ஒருங்கிணைப்பு:

கண.குறிஞ்சி                                        (மக்கள் நல்வாழ்வு இயக்கம்)

புகழேந்தி தங்கராஜ்                           (திரைப்பட இயக்குனர்)

அ.விஸ்வநாதன்                                (தொழில் முனைவோர் கூட்டமைப்பு)

கீற்று நந்தன்                                          (கீற்று இணைய ஆசிரியர்)

நன்றி: கீற்று

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

"இருளுக்கு அழைப்பவர்கள்” ஒரு பாவப்பட்ட மலை சாதிப் பெண்ணின் கதை

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ

பா.செயப்பிரகாசம் நூல்கள்

பா.செயப்பிரகாசம் அஞ்சலி - ச.தமிழ்ச்செல்வன்

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்