உயிருக்கு உலை வைக்கும் அணு உலைகள் வேண்டாம்

அண்மையில் ஜப்பான் நாட்டில் சுனாமியால் புகுஷிமா அணு உலை விபத்து நடந்தேறியவுடன் கூடங்குளம் அணு உலையைத் திறக்க மத்திய அரசும் அணுசக்திக் கழகமும் விரைவு காட்டிய வேளையில் திரண்டெழுந்த மக்கள் புரட்சி பல மாதங்களாக இன்றும் நீடித்திருக்கிறது. பல்வேறு வடிவங்களில் பல தரப்பிலிருந்து இப்போராட்டங்களை ஒடுக்கச் செய்யப்படும் முயற்சிகள் இன்று வரை தோல்வியைச் சந்தித்துள்ளன.

கூடங்குளம் போராட்டத்தை ஒட்டியும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் போலி ஆய்வு முடிவுகள் குறித்தும் தீராநதி, காலச்சுவடு, சாளரம், பசுமைத் தாயகம் ஆகிய இதழ்களில் வந்த 5 கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 70 பக்கங்களுடன் வெளியான இக்குறுநூல் வெளிச்சம் அமைப்பால் இலவசமாக விநியோகிகப்பட்டுள்ளது.


இலங்கை இறுதிக்கட்டப் போரில் ராஜபக்சேயின் இனவெறி அரசுக்கு உதவி செய்ததன் வாயிலாக தெற்குப் பிராந்தியத்தில் சீனா வெகுவாக காலூன்றியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடும் கேரளாவும் முதல் பலி என்றும் அதற்கு இந்த கூடங்குளம் அணு உலை பெரிதும் உதவும் என்கிறார் பா. செயப்பிரகாசம்.

“அரசியல் இயக்கங்களை தூர நிறுத்தியதுதான் போராட்டக் குழு செய்த உன்னதமான செயல்” என்ற மதிப்பிடும் இக்கட்டுரை அணுசக்தியின் விளைவுகளை மக்களிடம் போராட்டக்காரர்கள் கொண்டு சேர்த்திருக்கிறார்கள் என்றும் கூறுகிறது.

பா. செயப்பிரகாசம் தனது மற்றொரு கட்டுரையில் அப்துல்கலாம், மன்மோகன், சிதம்பரம், பிரணாப் போன்றவர்களின் பிம்பந்தான் என்பதைத் தெளிவுப்படுத்துகிறார்.

விலை: இல்லை

பக்கம்: 70

வெளியீடு :
வெளிச்சம்,
கு. பால்ராஜ், வழக்கறிஞர்,
செயல்பாட்டாளர்கள் பொதுமேடை,
35 A, முடங்கியார் சாலை, ராஜபாளையம். செல்: 94434 56023

நன்றி: பன்மை - 20 மே 2012

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

மலேயா கணபதி

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌