பங்குப்பெற்ற நிகழ்வுகள் 2016 - இந்தியா

மக்கள் கவிஞர் இன்குலாப் புகழஞ்சலிக் கூட்டம், 25-12-2016, ஊரப்பாக்கம் 
தலைமை: தோழர் நாகல்சாமி 
ஒருங்கிணைப்பு: தோழர் பா.செயப்பிரகாசம் 
வரவேற்பு: மூத்த மகன் செல்வம் 

பங்கேற்றோரில் உரை:
படத்திறப்பு: கவிக்கோ அப்துல்ரகுமான் 
தோழர் ஈரோடு தமிழன்பன் 
கவிஞர் கனல்மைந்தன்
பேரா கல்விமணி
கவிஞர் அறிவுமதி 
ஓவியர் புகழேந்தி
தோழர் வைகறை 
தொல். திருமாவளவன் 
தோழர் டி.எஸ்.எஸ்.மணி
தஞ்சைக் கவிராயர்
இயக்குனர் புகழேந்தி தங்கராஜ்
தோழர் வன்னியரசு 
பேரா கே.ஏ.ஜோதிராணி
தோழர் பாலகிருஷ்ணன் 
தோழர் மீ.த.பாண்டியன் 
ஊரப்பாக்கம் தோழர் நடராசன் 
மகள் மருத்துவர் ஆமினா பர்வீன் உள்ளிட்டோர்...

நன்றி: இளைய மகன் பேரா இன்குலாப் 
நிகழ்ச்சி ஏற்பாடு: குடும்பத்தினர் மற்றும் தோழர்கள்

இன்குலாப் மகன்



பேரா கல்விமணி

தொல். திருமாவளவன்

கவிக்கோ அப்துல்ரகுமான்

பா.செயப்பிரகாசம்





"மொழிப்போர்-50" மாநாடு, மதுரை 24.01.2016



1965ஆம் ஆண்டு மாபெரும் தமிழ்த் தேசிய எழுச்சியாக நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போரின் 50ஆம் ஆண்டு நிறைவையொட்டி, மதுரை, தமுக்கம் கலையரங்கில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் நடத்திய “மொழிப்போர்-50” மாநாடு 24.01.2016 அன்று நடைபெற்றது.

பேரியக்கத்தின் மதுரை தோழர் மூ.கருப்பையா முன்னிலையில், நடைபெற்ற “மொழிப்போர்” கருத்தரங்கில், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் ”1965ஆம் ஆண்டு மொழிப்போர்” குறித்து கருத்தாழமிக்க உரை நிகழ்த்தினர் (மாநாட்டு உரையை இங்கு படிக்கவும்).





கி.பி.அரவிந்தன் ‘ஒரு கனவின் மீதி’ நூல் சென்னை அறிமுக விழா - ஜனவரி 2016



ஈழப்போராட்ட முன்னோடி, கவிஞர், எழுத்தாளர், ஊடகவியலாளர்
கி.பி.அரவிந்தன் ‘ஒரு கனவின் மீதி’ நூல் சென்னை அறிமுக விழா

நோக்கவுரை: எழுத்தாளர். பா. செயப்பிரகாசம்
அறிமுக உரை:

  • தோழர் தியாகு
  • ஓவியர் சந்தானம்
  • கவிஞர். வ.ஜ.ச.ஜெயபாலன்
  • கலைமாமணி. திருமதி. சசிரேகா, காந்தளகம்


மனித உரிமைப் போராளி வழக்குரைஞர் பி.வி. பக்தவச்சலம் 9ம் ஆண்டு நினைவு விருது வழங்குதல் கருத்தரங்கம் - 24 செப்டம்பர் 2016, எழும்பூர் - சென்னை


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகிக்கு, சென்னையில் பி.வி.பீ அறக்கட்டளை சார்பில் 9ம் ஆண்டு நினைவு விருது வழங்கப்பட்டது. வாசுகி விருதையும் அதற்காக வழங்கப்பட்ட ரூ.50,000 நிதியையும் மாதர் சங்கத்திற்கே ஒப்படைத்தார். சங்கத்தின் மாநிலத் தலைவர் வாலண்டினா அவற்றைப் பெற்றுக்கொண்டார். வாசுகி தனது உரையில் குறிப்பிட்ட ‘அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு – ஆகிய சொற்கள் வெறும் பசப்பு’ என்ற பாடலை, சங்கத்தின் கயல் மேடையேறிப் பாடியதும் அவையோர் சிந்தனையை ஈர்த்தது. எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் நன்றி கூறினார்.'



கே.ஏ.குணசேகரன் நினைவேந்தல் கூட்டம் 31.1.2016
நன்றி: தமிழ்வலை





மக்கள் கலைஞர் – தன்னானே பாடகர் – திரை நடிகர் – எழுத்தாளர் – நாடக இயக்குனர் – நாட்டுப்புறவியல் ஆய்வாளர் - சேரிப்புறத்து கதை சொல்லி – தலித் அரங்கியலின் தந்தை – தலித் பண்பாட்டின் அடையாளம் – புதுவை பல்கலைக்கழக நிகழ்கலைத்துறை புல முதன்மையர் – பேராசிரியர் என பன்முக அடையாளம் கொண்ட கே.ஏ.குணசேகரன் நினைவேந்தல் கூட்டம் 31.1.2016 அன்று புதுவை பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்தது. எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் கே.ஏ.ஜி -யின் திருவுருவப்படத்தை திறந்து வைக்க புதுவை பல்கலை ஆங்கிலத்துறை பேராசிரியர் நடராஜன் மாலை அணிவித்தார்.


எழுதாளர் பா.செயப்பிரகாசம், பேராசிரியர் நா.நடராஜன், கவிஞர் சுகிர்தராணி, பேராசிரியர் திருநாகலிங்கம், பேராசிரியர் சூ.ஆம்ஸ்ட்ராங், பேராசிரியர் அ.அறிவுநம்பி, முனைவர் வீ.வாலசமுத்திரம், பேராசிரியர் அசுவகோஷ், கவிஞர் கு.உமாதேவி, தோழர் சிவா, நிகழ்கலைத்துறை பேராசிரியர் ஆறுமுகம், காந்திகிராமம் பல்கலைக்கழக பேராசிரியர் முத்தையா, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தைச் சார்ந்த வீரபாகு, முனைவர் பட்ட ஆய்வு மாணவர் பட்டாபி ஆகியோர் நினைவேந்தல் உரை நிகழ்த்தினர். கே.ஏ.ஜி -யின் பிள்ளைகளான மருத்துவர் அகமன், மருத்துவர் குணவதி ஆகியோர் இடையிடையே எழுச்சிப்பாடல் பாடினர். முகிலோசை லெபோரா, இசையாசிரியர் முகுந்தன் ஆகியோரும் பாடல் பாடினர்.


நாடகத்துறை பயிலும் ஏழை மாணவர்களுக்கும், சிவகங்கையில் படிக்கும் சிறுவர்களுக்கும் படிப்புதவி செய்யவும், கே.ஏ.ஜி விட்டுச் சென்ற கலை இலக்கிய அரசியல் பணியைத் தொடர்ந்து முன்னெடுக்கவும் ஏதுவாக அறக்கட்டளை ஒன்றை கே.ஏ.ஜி பெயரில் தொடங்கவும், நினைவு மலர் ஒன்றை வெளியிடவும் பலர் ஆலோசனை வழங்கினர். இறுதியாக அக்கா முனைவர் வீ.ரேவதி நன்றி கூறி கூட்டத்தை முடித்தார்.

நிகழ்ச்சி உரையை இங்கு படிக்கலாம்.

நூலை ஆராதித்தல் - பத்மநாப ஐயர் 75

பத்மநாப ஐயர் 75 — புத்தக வெளியீடு சென்னையில்.

வெளி ரங்கராஜன், ரவி சுப்ரமணியன், அழகிய சிங்கர், ரவிக்குமார், பாரவி ஆகியோர் நூல் மதிப்புரை வழங்குகிறார்கள் .

எல் .அய்யாசாமி, காலச்சுவடு கண்ணன், பா .செயப்பிரகாசம், ஏ.எஸ்.பன்னீர்செல்வம், ஆ .ரா .வெங்கடாசலபதி, க்ரியா ராமகிருஷ்ணன், ஜி .திலகவதி, மாலன், அரவிந்தன், க.பூர்ணசந்திரன், பழ .அதியமான் இரா.முருகன், அருண், நிழல் திருநாவுக்கரசுm அ .சாரங்கன், சுதா ராமலிங்கம், சி .மோகன், பி.ஆர். சுப்ரமணியன், ஜி .சுந்தர், சுதர்சன் செல்லத்துரை, இந்திரன், தளவாய் சுந்தரம் , சம்பத்குமார் மற்றும் பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கிறார்கள் .

விழாவில் தேசிய விருது பெற்ற 'யாழ்ப்பாணம் தெட்சணாமூர்த்தி' ஆவணப்படம் திரையிடப்படுகிறது .

இடம் : இக்சா மையம் அரங்கு, 70 இ பாந்தியன் சாலை எழும்பூர்.

நாள் : நவம்பர் 5, சனிக்கிழமை — மாலை 5.15 மணி


மக்கள் கவிஞர் தோழர் இன்குலாப் புகழஞ்சலி கூட்டம் - 17 டிசம்பர் 2016, தஞ்சாவூர் - பெசன்ட் அரங்கம்.










தினமணி - 20 டிசம்பர் 2016
பா.செயப்பிரகாசம் அவர்களின் அஞ்சலி உரை ஆடியோ இங்கு கேட்கலாம்.


கரிசல் படைப்பாளி பா.செயப்பிரகாசம் அவர்களின் படைப்பிலக்கிய விழா - 24 ஜூலை 2016, தஞ்சை



தஞ்சை இலக்கிய வட்டம்முடன், கனடாவின் கலைக்குரிசில் கலாமன்றமும் இவ்விழாவில் இணைந்து கொள்கின்றது. பா.செயப்பிரகாசத்தின் இலக்கியப் பணிகள், ஈழத்தமிழர் நலன்களுக்காக தொடர்ந்து அவர் எழுப்பிவரும் குரல், ஈழத்தின் கூத்துக் கலைகளின் வளர்ச்சிக்கான அவரது பங்களிப்பு இவைகளைப் பாராட்டி தஞ்சை இலக்கிய வட்டத்திற்கு ஒரு பாராட்டு மடலை அனுப்பி வைத்துள்ளது. இப்பாராட்டு மடல் நிகழ்வின்போது பா.செயப்பிரகாசம் அவர்களுக்கு வழங்கப்படும். கனடாவின் கலைக்குரிசில் கலாமன்றம், சர்வதேச ஒன்றியத்தின் கூத்துக்கலைச் செம்மல் ச.மிக்கேல்தாஸ் அவர்களுக்கு தஞ்சை இலக்கிய வட்டம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.









மக்கள் கவிஞர் இன்குலாப் புகழஞ்சலிக் கூட்டம், மதுரை, 18-12-2016












தலைமை: தோழர் மீ.த.பாண்டியன், தலைவர், தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம்
வரவேற்பு: தோழர் மு.தங்கப்பாண்டி, த.ம.ப.க, மதுரை 
படத்திறப்பு: தோழர் பி.வரதராசன், தலைவர், புரட்சிக் கவிஞர் மன்றம்
புகழஞ்சலி உரை: தோழர் பா.செயப்பிரகாசம், பேரா மு.இராமசாமி, நிஜ நாடக இயக்கம் - ஐ.செயராமன், புரட்சிக் கவிஞர் பேரவை புலவர் மறவர் கோ - கவிஞர் திண்டுக்கல் தமிழ்ப்பித்தன், கவிஞர் இன்குலாப் அவர்களின் மூத்த மகன் செல்வம், 
நன்றி: தோழர் க.இராம்குமார், த.ம.ப.க. 
மதுரை பாடல்: ஆ.பா.வானவில், தமிழ்ப்பித்தன்


போதி இலக்கிய சந்திப்பு - இன்குலாப் நினைவேந்தல் நிகழ்வு 18-12-2016, காரைக்குடி









யதார்த்த வகைமை என்ற இலக்கியச் சித்திரிப்புக்கு தலை வாரி, பொட்டுவைத்து, சிங்காரித்து, கூந்தலுள்ள சீமாட்டியாய் ஆக்கி அழகு செய்தது இவர் வேலை; எல்லை மீறல் அற்ற சித்தரிப்பு; மனதைச் சுண்டியிழுக்கும் அளவான உச்சரிப்பு; நம்மோடு நேரடியாகப் பேசும் வாஞ்சனையான உரையாடல்.

அவர் ஒருக்காலும் தன் பசி போக்கியவர் இல்லை. நான் இங்கு குறிப்பிடுவது ‘கும்பிப்’ பசி அல்ல; அந்தப் பசியும் பூமிப்பரப்பில் எங்கும் தலை காட்டக்கூடாது என நனவுப் பயணம் மேற்கொண்டவர் அவர். ஆனால் அங்கீகாரம், புகழ் என்ற தன் பசிக்கு இலக்காகாமல் அவர் நடந்தது இலட்சியம் பயணம். இந்தத் தன்பசியை போக்கிக் கொள்வது எப்படி என அதே வேலையாய் அலமந்து திரியும் பலரை, அரசியல் உலகில், இலக்கிய வீதியில் , சமூகத் தொண்டில் கண்டுகொண்டிருக்கிறோம். தன்பேர் பாடும் பசி அவர் அறியாதது. தன் நாவை தனக்காக அசைக்காது, எழுதுகோலை தன்மோக உழவிட கிஞ்சித்தும் இடமளிக்காது வாழ்ந்தார்.

இந்த வாழ்நாள் ஒழுங்கு சக தோழனான வீர.வேலுச்சாமிக்கு வாழ்நாள் முழுக்க அப்படியே தொடர்ந்தது

என் கால சக எழுத்துப் பயணியின் அனைத்து எழுத்துக்களும் என்னால் தொகுத்து, பரிசல் பதிப்பகம் பதிப்பித்துள்ளது.

“மண்ணின் குரல் வீர.வேலுச்சாமி படைப்புகள்” நூலின் வெளியீட்டு நிகழ்வு அழைப்பிதழ் இங்கே. அனைவரும் வருக...

- எழுத்தாளர் பா.செயப்பிரகாசம்



மக்கள் கலைஞர் கே.ஏ. குணசேகரனின் நினைவுத் தொகுப்பு நூல் வெளியீடு 31-12-2016 அன்று சென்னை கவிக்கோ அரங்கில் நடைபெற்றது. நூலினைத் தொகுத்திட்ட எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் தலைமையேற்க விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் தலைவர் தொல் .திருமாவளவன் நூலினை வெளியிட, மண்ணின் கலைஞர் கே.ஏ.ஜி- க்கு தகுதியான நினைவேந்தலாய் அமைந்தது.















வேம்பு வாசகர் வட்டம், கரிசல் எழுத்தாளர் அய்யா பா.செயப்பிரகாசம் அவர்களோடு 31-05-2016 அன்று ஒரு மணிநேரம் சந்திப்பு





ஊடகங்கள் இன்று நம் வாழ்க்கையை நிர்ணயம் செய்கிறது. இந்த சூழலில், எழுத்து என்ன செய்யவேண்டும் எனவும் சிந்தனை செய்தல், வாசித்தல், மற்றும் எழுதுதல் எவ்வாறு இருக்கவேண்டும் எனவும் வாசகர் வட்டத்தோடு பா.செயப்பிரகாசம் பகிர்ந்து கொண்டார்.


ரிவோல்ட் அமைப்பு சார்பாக 30 மே 2016 - நிறங்களின் நிஜங்கள், உடல் ஆயுதம் - நூல் ஆய்வரங்கம்












நிகழ்ச்சி காணொளியை இங்கு காணலாம்.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

படைப்பாளியும் படைப்பும்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ