பங்குப்பெற்ற நிகழ்வுகள் 2018 - இந்தியா

தூத்துக்குடியில் காவல்துறை நிகழ்த்திய படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 23 மே 2018 அன்று புதுச்சேரியில் சாலை மறியல் போராட்டம்



திராவிடர் விடுதலைக் கழகம் புதுச்சேரியின் பிரதான சாலைகளில் ஒன்றான புஸ்ஸி வீதியில் நடத்திய சாலை மறியல் போராட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் புதுச்சேரி தலைவர் லோகு.அய்யப்பன், கவிஞர் மாலதி மைத்ரி, எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகளின் தலைவர்களும் தொண்டர்களும் கலந்துகொண்டனர். அப்போது மத்திய மற்றும் தமிழக அரசுகளுக்கு எதிராகக் கண்டனக் கோஷங்களை எழுப்பிய அவர்கள், பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் உருவ பொம்மைகளை எரித்தனர். அதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்தது போலீஸ். 


தி இந்து லிட் ஃபார் லைஃப் தமிழ்த் திருவிழா - ஞாயிறு, 7 ஜனவரி 2018, காலை 9:30 முதல், லேடி ஆண்டாள்பள்ளி, சேத்துப்பட்டு, சென்னை 


நண்பகல் 12 மணி முதல் 12.45 வரை ‘தமிழ்ச் சிறுகதைகளின் அரசியல் முகங்கள்’ என்ற அமர்வில் ‘முற்போக்கு இலக்கியம்’ குறித்து எழுத்தாளர் பா.செயப்பிரகாசமும் ‘திராவிட இலக்கியம்’ குறித்து எழுத்தாளர் இமையமும் பேசினார்கள்.

பா.செயப்பிரகாசம் பேசியதாவது "முற்போக்கு என்பது ஒப்பீடு சார்ந்தது. தமிழ்ச் சிறுகதையின் ஒவ்வொரு 10 ஆண்டுகளையும் எடுத்துக்கொண்டால், நமது எழுத்தாளர்கள் விடுதலைப் போராட்ட அரசியல், யதார்த்தவாதம், பெண்ணியம், தலித்தியம் என ஒவ்வொரு கருத்தியலை தங்கள் கதைகளில் பேசி வந்திருக்கிறார்கள். அப்படிப் பார்த்தால், ஒரு சாமானியனின் வாழ்க்கையில் நிலவும் அரசியலை தமிழில் முதன்முதலில் பேசியது புதுமைப்பித்தனின் ‘பொன்னகரம்’ சிறுகதையே".

நிகழ்ச்சி உரையை இங்கு காணலாம்.


பள்ளிக்கூடம் புதினம் அறிமுக நிகழ்வு





இன்குலாப் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் - 01 டிசம்பர் 2018, சென்னை









தூத்துக்குடி மாவட்ட மைய நூலகத்துடன் வாசகசாலை இணைந்து வழங்கும் ‘இலக்கிய சந்திப்பு’ - மே 2018

தெக்கத்தி ஆத்மாக்களின் கதையை எழுத்தில் பதிவு செய்தவர்களில் ஒருவரான, மூத்த எழுத்தாளர் ஐயா செயப்பிரகாசம் அவர்களின் ”காற்றடிக்கும் திசையில் இல்லை ஊர்” என்ற சிறுகதைத் தொகுப்பு குறித்து கலந்துரையாடல்


தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாவீரர் நாள் நிகழ்ச்சி - 27 நவம்பர் 2018



தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் 27 நவம்பர் 2018 செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்ச்சி மற்றும் முற்றத்தின் ஆறாம் ஆண்டு தொடக்க நிகழ்ச்சிக்கு பழ. நெடுமாறன் தலைமை வகித்தார்.


முற்றத்தில் தமிழ் ஆர்வலர்கள் ஏராளமானோர் மெழுகுவர்த்தி ஏந்தி வீர முழக்கங்கள் எழுப்பி அஞ்சலி செலுத்தினர். இதில், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நன்றி: தினமணி - 28 நவம்பர் 2018


உணர்ச்சிப்பாவலர் காசி ஆனந்தன் நூல்கள் வெளியீட்டு விழா!




22.11.2018, வியாழன் மாலை 5.00 மணி அளவில் சென்னை மேற்கு மாம்பலம் சந்திரசேகர் திருமண அரங்கில் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் எழுதிய ”தமிழன் எதிரி தமிழன்” பெண்பா ஆகிய நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.

தமிழர்தேசிய இயக்கத்தின் தலைவர் திரு. பழ நெடுமாறன் அவர்களின் தலைமையில் நடந்தேறும் இவ்விழாவில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தலைவர் திரு.வைகோ அவர்கள் நூல் வெளியீட்டு சிறப்புரை யாற்றினார்கள்.

இயக்குநர் புகழேந்தி தங்கராசு, அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், இயக்குநர் கெளதமன், வழக்கறிஞர் த.பானுமதி, எழுத்தாளர் சூரியதீபன் (பா.செயப்பிரகாசம்) உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினார்கள்.

இவண் : இந்திய ஈழத்தமிழர் நட்புறவு மையம்




'நூற்றாண்டு தமிழ்ச் சிறுகதைகள்: தருணங்கள், சாதனைகள், எதிர்காலம்’ விழா -  ஜனவரி 2018

‘தமிழ்ச் சிறுகதைகளின் அரசியல் முகங்கள்’ என்ற அமர்வில் ‘முற்போக்கு இலக்கியம்’ குறித்து எழுத்தாளர் பா.செயப்பிரகாசமும் பேசினார்.

பா. செயப்பிரகாசம்: முற்போக்கு என்பது ஒப்பீடு சார்ந்தது. தமிழ்ச் சிறுகதையின் ஒவ்வொரு 10 ஆண்டுகளையும் எடுத்துக்கொண்டால், நமது எழுத்தாளர்கள் விடுதலைப் போராட்ட அரசியல், யதார்த்தவாதம், பெண்ணியம், தலித்தியம் என ஒவ்வொரு கருத்தியலை தங்கள் கதைகளில் பேசி வந்திருக்கிறார்கள். அப்படிப் பார்த்தால், ஒரு சாமானியனின் வாழ்க்கையில் நிலவும் அரசியலை தமிழில் முதன்முதலில் பேசியது புதுமைப்பித்தனின் ‘பொன்னகரம்’ சிறுகதையே.

நன்றி: இந்து தமிழ் 


புதுச்சேரியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் 14வது மாநில மாநாடு: 21 - 24 ஜூன் 2018

பிறந்தது கரிசல் மண்ணில் என்றாலும் வாழ்வது புதுச்சேரியில் என்ற வகையில் மாநாடு வெல்லட்டும் என்று வாழ்த்த 95 வயது இளைஞர் கி.ரா. (கி.ராஜநாராயணன்) வந்திருந்தார். அவரோடு நெருக்கமான மூத்தப்படைப்பாளி பா.செயப்பிரகாசம் மற்றும் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் மாநாட்டில் பங்கேற்றும் வாழ்த்தியும் சிறப்பு செய்தனர்.

அண்மையில் காலம் சென்ற தமிழறிஞர், இரண்டுமுறை சாகித்ய அகாடமி விருது பெற்ற மா.லெனின் தங்கப்பா அவர்களின் படைப்புகள் குறித்த ஆய்வரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியை எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் தொடங்கிவைக்க பேராசிரியர்களும், எழுத்தாளர்களும் பங்கேற்றனர்.


காஸ்யபன், செயப்பிரகாசம் அருகில் தோழர் எஸ்எபி



தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் நியூ செஞ்சூரி புக் ஹவுஸ் நடத்திய எழுத்தாளர்களுக்கான விருது வழங்கும் விழா டிசம்பர் 2018
















நிகழ்ச்சி உரையை இங்கு காணலாம்.





கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

மலேயா கணபதி

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?