பா.செயப்பிரகாசத்துக்கு விஜயா வாசகர் வட்ட விருது

உலகப் புத்தகத் தினத்தை முன்னிட்டு, கோவை விஜயா பதிப்பகத்தின் சார்பில்,  விஜயா வாசகர் வட்ட விருதுகள் வழங்கும் விழா கோவையில் 21 ஏப்ரல் 2019 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன் தலைமை வகித்தார். விஜயா பதிப்பகத்தின்  நிறுவனர் மு.வேலாயுதம் வரவேற்றார்.



விழாவில், எழுத்தாளர் ஜெயகாந்தன் விருது, எழுத்தாளர் பா.செயப்பிரகாசத்துக்கும்,  கவிஞர் மீரா விருது, கவிஞர் அம்சப்பிரியாவுக்கும், புதுமைப்பித்தன் விருது, எழுத்தாளர் கே.என்.செந்திலுக்கும், சக்தி வை.கோவிந்தன் விருது, தொட்டியம் அரசு நூலகர் வே.செல்வமணிக்கும், வானதி விருது மதுரை ஜெயம் புத்தக நிலையத்தின் உரிமையாளர் ஆர். ராஜ் ஆனந்துக்கும் வழங்கப்பட்டன.




விழாவில் விருது பெற்ற பா.செயப்பிரகாசத்துக்கு ரூ. 1 லட்சம் ரொக்கம், கவிஞர் அம்சப்பிரியா, எழுத்தாளர் கே.என்.செந்தில் ஆகியோருக்கு ரூ. 25 ஆயிரம், நூலகர் வே.செல்வமணி, புத்தக நிலைய உரிமையாளர் ஆர். ராஜ் ஆனந்த் ஆகியோருக்கு ரூ. 15 ஆயிரம் ரொக்கம் மற்றும்  பாராட்டு பத்திரங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், எழுத்தாளர் கீரனூர் ஜாகீர் ராஜா, பூ.சா.கோ. கலை, அறிவியல் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் ராமராஜன், பேராசிரியர் கரசூர் கந்தசாமி ஆகியோர் விருதாளர்களைப் பாராட்டிப் பேசினர். இதைத் தொடர்ந்து விருதாளர்கள் ஏற்புரை ஆற்றினர். முனைவர் உஷாராணி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.



நன்றி: தினமணி - 22 ஏப்ரல் 2019


கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

மலேயா கணபதி

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?