பங்குப்பெற்ற நிகழ்வுகள் 2019 - இந்தியா

புதுச்சேரி வானொலி - எழுத்துலக பிதாமகர் கி.ரா உடன் உரையாடல் பதிவு, புதுச்சேரி  - 28 ஜூலை 2019

கி.ரா.வின் முக்கிய தோழர்களில் இருவர் பா.செயப்பிரகாசம், அமரநாதன் உரையாடலைத் தொடங்க கி.ரா உடன் உரையாடல் பதிவு செய்பட்டது.


இந்த பதிவு அகில இந்திய வானொலி, புதுச்சேரி MW 246.9 M / 1215 KHz AM வானொலியின் முதன்மை அலைவரிசையில் 2.8.2019 அன்று இரவு 8.00 மணிக்கு ஒலிபரப்பானது.


ஆனந்த விகடன் ‘நம்பிக்கை விருது விழா - 2018’, சென்னை வர்த்தக மையம், 09.01.2019



சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான ‘ஆனந்த விகடன்’ இலக்கிய விருது, ‘மாயக்குதிரை’ எனும் நூலுக்காக தமிழ்நதிக்கு வழங்கப்பட்டது. எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் மற்றும் கவிஞர் அறிவுமதி ஆகியோர் விருது வழங்கினர்.

“ஈழம் தொடர்பான எல்லா எழுத்தாளர்களும் எல்லாக் கவிஞர்களும் இன்று மிகப்பெரிய சாதனையை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். ஈழத்து இலக்கியம், தமிழக இலக்கியத்துக்கு முன்னோடியாகத் திகழ்ந்துகொண்டிருக்கிறது. அந்த ஈழத்து இலக்கியத்தில் தமிழ்நதி ஒரு முன்னோடி நதி. நான் ஒரு சிறுகதை ஆசிரியன் என்கிற முறையில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம்.
 

புதுவை பல்கலைக்கழகம் - சுப்பிரமணிய பாரதியார் தமிழ்மொழி & இலக்கியப்புலம் நடத்திய தந்தை பெரியார் அறக்கட்டளைச் சொற்பொழிவு தலைமை உரை - 13 மார்ச் 2019

நிகழ்ச்சி உரையை இங்கு படிக்கலாம்.

அகரமுதல்வனின் 'உலகின் மிக நீண்ட கழிவறை' நூல் வெளியீட்டு விழா - 16 பிப்ரவரி 2019

நிகழ்ச்சி உரையை இங்கு காணலாம்.



படைப்பாளி, படைப்பு, வாசகன் - 26 மார்ச் 2019, திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி 

தமிழிலக்கிய மாணவர்களுடன்  கலந்துரையாடல்.


மீறல் இலக்கியக் கழகம் நடத்தும் விருதளிப்பு விழா மற்றும்கலாப்ரியா 50 படைப்புலக கொண்டாட்டம் 22.9.2019, புதுச்சேரி - லப்போர்த் வீதி, பி.எம்.எம்.எஸ் அரங்கு

இவ்விழாவின் முதல் நிகழ்வாக - மீறல் விருதுகள் வழங்கப்படவிருக்கின்றன.

இவ்விழாவின் 2-வது நிகழ்வாக ‘கலாப்ரியா - 50’ எனும் படைப்புலக கொண்ட்டாட்டம் நிகழவுள்ளது. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நவீன தமிழ் இலக்கியத்தில் தங்கத் தடம் பதித்து வரும் கவிஞர் கலாப்ரியாவை பெருமைப்படுத்துகிறது ‘மீறல்’




தலைமை : வண்ணதாசன்
சிறப்பு வாழ்த்துரை : கி. ராஜநாராயணன்
முன்னிலை : பி என் எஸ் பாண்டியன்
நினைவின் தாழ்வாரன் - பா.ஜெயபிரகாசம்
கலாப்ரியா கவிதைகள் - இளங்கோகிருஷ்ணன்
கலாப்ரியா கட்டுரைகள் - இளங்கோவன்
நினைவின் நதிகள் - கரு.பழனியப்பன்
கலாப்ரியா நாவல்கள் - ஆத்மார்த்தி
கலாப்ரியா கவிதை வாசித்தல் - வெ.ஹரிணி, ர.நவீன்குமார், ஆசு, கவிக் கவின்
ஏற்புரை : கலாப்ரியா

நிகழ்ச்சி  உரையை இங்கு காணலாம்.




மாநாடு பற்றிய கட்டுரையை இங்கு வாசிக்கலாம் & உரையை இங்கு காணலாம்.


 




விழாவில் கணவதி அம்மாளின் படத்தைத் திறந்து வைக்கிறார் தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ.நெடுமாறன். உடன் புதுவைப் பல்கலை துணைவேந்தர் குர்மீத் சிங், எழுத்தாளர் கி.ரா, நடிகர் சிவக்குமார், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம்

கி.ரா என்று தமிழ் வாசகர்களால் அழைக்கப்படும் கி.ராஜநாராயணனின் துணைவியார் கணவதி அம்மாளின் படத் திறப்பு விழா புதுவைப் பல்கலைக்கழகத்தின் சுப்பிரமணிய பாரதியார் தமிழியல் புலத்தில் நடைபெற்றது. விழாவில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் குர்மீத் சிங், கி.ராஜநாராயணன், நடிகர் சிவக்குமார், தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ.நெடுமாறன், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், புல முதன்மையர் க.இளமதி சானகிராமன், வழக்குரைஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். கணவதி அம்மாளின் படத்தை பழ.நெடுமாறன் திறந்துவைத்தார்.

விழாவில் கி.ரா ஏற்புரையாற்றினார். விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழியல் புலப் பேராசிரியர் பா.ரவிக்குமார் செய்திருந்தார். விழாவில் புல முதன்மையர் க.இளமதி சானகிராமன், பா.செயப்பிரகாசம், க.பஞ்சாங்கம், வெங்கடசுப்புராய நாயகர், நெல்லை சாந்தி, கவிஞர் சேஷாசலம், பக்தவத்சல பாரதி, சிலம்பு நா.செல்வராசு, சம்பத், கி.ரா.வின் புதல்வர் பிரபாகரன் ஆகியோர் உரையாற்றினர். சீனு.தமிழ்மணி, தமிழ்மொழி, அமரநாதன், புதுவை இளவேனில், பி.என்.எஸ்.பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். கி.ரா.வின் புதல்வர் பிரபாகரன் நன்றி கூறினார்.

நிகழ்ச்சி காணொளியை இங்கு பார்க்கலாம்.





நிகழ்ச்சி உரையை இங்கு காணலாம்.






முள்ளிவாய்க்கால் படுகொலை 10ஆம் ஆண்டு நினைவேந்தல் மாநாடு, 7 சூலை 2019

2019 சூலை 6 சனி, 7 ஞாயிறு ஆகிய நாட்களில் உலகத்  தமிழர் பேரமைப்பின் சார்பில் தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் முள்ளிவாய்க்கால் படுகொலை 10ஆம் ஆண்டு நினைவேந்தல் மாநாடு மிகச்சிறப்பாக நடைபெற்றது.

தமிழறிஞர்களும், அறிஞர்களும், கவிஞர்களும், எழுத்தாளர்களும், தலைவர்களும் மற்றும் திரளான மக்களும் இம்மாநாட்டில் உற்சாகமுடன் கலந்துகொண்டனர். 

07-07-2019 ஞாயிற்றுக்கிழமை மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் காலை 10 மணிக்கு தொடங்கின. முதலில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு முனைவர் இராம. சுந்தரம்  தலைமை தாங்கினார்.  வழக்கறிஞர் பானுமதி இக்கருத்தரங்கில் தொடக்கவுரையாற்றினார்.  புலவர்  துரை. மதிவாணன்,  பசுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். புலியூர் முருகேசன் தொகுப்புரை வழங்கினார்.

இந்த அரங்கில் பேரா. வீ.அரசு,  திருவாளர்கள் பா.செயப்பிரகாசம், கா.அய்யநாதன் ஆகியோர் உரையாற்றினர்.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

பா.செயப்பிரகாசம் நூல்கள்

நாம் எதிர்கொள்ளும் பண்பாட்டுச் சவால்கள்

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ