கி.ரா - 95

அன்புடையீர்!

வணக்கம். கி.ரா. என்னும் இலக்கிய ஆளுமை தமிழ் உலகம் இதுவரை கண்டிராத ஓர் ஆபூர்வம். இந்த நதிமூலம் 1923இல் உற்பத்தியாகி, தீராநதியாய் ஓடிக்கொண்டிருக்கிறது. 2017, செப்டம்பர் 16 இல், தன் 95ஆவது வயதில் காலெடுத்து வைக்கிறது. இன்றும் வாசிப்பும் எழுத்துமாய்த் தமிழ், தமிழ்ச்சமூகம் என வற்றாது இயங்கிக்கொண்டிருக்கிறது. எனவே, கி.ரா.வின் 95ஐக் கொண்டாடுவோம்.

கொண்டாட்டத்தின் ஒரு நிகழ்வாக, அவருடைய படைப்புலகம் குறித்த ஓர் ஆய்வு நூலை உருவாக்க முயல்வோம். இது கி.ராவில் தோய்ந்த ஆளுமைகளின் கட்டுரைத் தொகுப்பாக அமையும். இந்த நோக்கில் ஒருங்கிணைப்புக் குழுவினர் முன்னெடுப்பாகச் சில தலைப்புகளைத் தொகுத்துள்ளோம். தலைப்புகள் அனைத்தும் அனைவரின் பார்வைக்கும் பங்களிப்புக்கும் உரியவை என்பதால் இத்துடன் இணைத்துள்ளோம். இவை தவிர, வேறொரு தலைப்பில் எழுத விரும்பினாலும் நீங்கள் எழுதி அனுப்பலாம். சூலை இறுதிக்குள் கட்டுரைகளை - ‘யுனிக்கோடில்’ கீழ்க்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்க வேண்டுகிறோம்.

* jpirakasam@gmail.com * drpanju49@yahoo.co.in * vengadasouprayanayagar@gmail.com

இவண், ஒருங்கிணைப்புக் குழுவினர்: பா.செயப்பிரகாசம் - பேசி: 94440 90186, க.பஞ்சாங்கம் - பேசி: 90030 37904, சு.ஆ.வெங்கிட சுப்புராய நாயகர் - பேசி: 99440 64656

கி.ரா - 95 தலைப்புகள்

1.    கி.ரா. எழுத்துக்களில் அதிகாரத்திற்கெதிரான குரல்களின் வெளிப்பாடு.
2.    குழந்தை இலக்கியத்திற்குக் கி.ரா.வின் கொடை.
3.    கி.ரா. எழுத்துக்களில் நிலக் காட்சிகள்.
4.    கி.ரா. எழுத்துக்களில் இனவரைவியல் கூறுகள்.
5.    பண்பாட்டு மானுடவியல் நோக்கில் கி.ரா.வின் படைப்புகள்.
6.    இயற்கையை எழுதுதலும் கி.ரா.வின் படைப்புகளும்.
7.    கோபல்ல கிராமம் : புலம்பெயர்தலின் வலியும் வாழ்வும்.
8.    விவசாயத்தின் அழிவை முன் அறிவிக்கும்    கி.ரா.வின் படைப்புலகம்.
9.    கி.ரா. படைப்பு வழி அறியலாகும் பல்வேறு எடுத்துரைப்பு உத்திகள்.
10.    மொழியியல் நோக்கில் கி.ரா.வின் படைப்பு மொழி.
11.    இரசம் ஒன்றே , அது காமரசம் - என்ற போஜராஜன் கூற்று , கி.ரா. படைப்பில் புலப்படும் பாங்கு.
12.    இரசம் ஒன்றே , அது கருணைரசம் - என்ற பவ பூவதியின் கூற்றிற்கு ஏற்ப கி.ரா.வின் படைப்புகளில் புலப்படும் கருணைரசம்/ மானுட நேயம்.
13.    தமிழ் அகராதியியல் வரலாற்றில் கி.ரா.வின் கரிசல் காட்டு அகராதி.
14.    கதைசொல்லி இதழும் கிராவும்.
15.    புதுச்சேரி நாட்டுப்புற இயலுக்குக் கி.ரா.வின் பங்களிப்பு - அதன் தனித் தன்மைகள்/ வகைமைகள்.
16.    கி.ரா.வும் கடித இலக்கியமும்
17.    நாட்டுப்புறக் கதைத் தொகுப்பில் புலப்படும் கி.ரா.வின் தனிச் சிறப்புக் கூறுகள்.
18.    கி.ரா.வின் படைப்புகளில் விளிம்பு நிலைக் கதைமாந்தர்கள் (ஊமையன், திருநங்கை, பிச்சைக்காரர்கள்)
19.     கி.ரா.வின் பெண் கதை மாந்தர்கள் -  பெண்ணிய நோக்கில்.
20.     கி.ரா.வின் படைப்புக்களில் புலப்படும் தொன்மக் கூறுகள்.
21.    கி.ரா. படைத்துக் காட்டும் கரிசல் மக்களின் வாழ்வியல் நிலைமைகள்/வறுமைக் காட்சிகள்.
22.    கி.ரா.வும் தமிழிசையுலகமும்.
23.    மார்க்சிய இலக்கியக் கோட்பாட்டு நோக்கில் கி.ரா.வின் படைப்புகளின் செல்நெறி.
24.    மனிதர்களின் நடத்தையியல் கி.ரா.விடம் படைப்பாக உருமாறும் நுட்பம்.
25.     மக்களின் பேச்சுமொழி கி.ரா.வின் படைப்பாக உருமாறுதல் - இதுவரையான உரைநடை மொழி உடைப்பு.
26.    கி.ரா. எழுத்தில் வெளிப்படும் நகைச்சுவை உணர்வு.
27.    கி.ரா.வின் புனைவெழுத்துகளில்  புலப்படும் நாட்டுப்புறக் கூறுகள்.
28.    கி.ரா.வின் எழுத்துகளில் பின்நவீனத்துவக் கூறுகள்.
29.    கி.ரா. எழுத்துகளில் புலப்படும் தமிழ்ச் சமூகச் சாதியக் கூறுகள்.
30.    கி.ரா. எழுத்துகள் -  மரபுகளும் மீறல்களும்.
31.    கி.ரா.வுக்குப் பிந்திய கரிசல்படைப்புகளில் கி.ரா. எழுத்துக்களின் செல்வாக்கு.
32.    கதைக்குள் கதைகளும் கதைகளுக்குள் கதையும்.
33.    கி.ரா.வின் படைப்புவழிச் சொல்லாடல்களில் உள்ளுறை அர்த்தங்கள்.
34.    திரைப்பட உலகமும் கி.ரா.வின் கதை உலகமும்.
35.    திரட்டிய தரவுகளைப் புனைவெழுத்தாக்கும் திறம் - (எ.கா: கிடை குறுநாவல்)
36.    கட்டுரைகளிலும் கதை சொல்லும் கி.ரா.
37.    கி.ரா.வும் டி.கே.சியும்.
38.     கி.ரா.வின் புதிய சொல்லாக்கம்.
39.     கி.ரா. எழுத்தில் அமைந்துள்ள இடைப் பனுவல் கூறுகள் (Intertextual).
40.    கி.ரா.வின் உரைநடையில் காலந்தோறும் ஏற்பட்ட மாற்றங்கள்.
41.    கி.ரா. எழுத்துகளில் புலப்படும் சுயவாழ்வுக் கூறுகள்.
42.    கி.ரா. என்ற மக்கள் குரல்.

நன்றி: காலச்சுவடு - ஜூலை 2017


கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

படைப்பாளியும் படைப்பும்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ