பங்குப்பெற்ற நிகழ்வுகள் - பிற நாடுகள்

அமரர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் அவர்களின் முதலாவது ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வும், நூல் வெளியீடும் - இலங்கை

பேராசிரியர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடியின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியும், நூல் வெளியீடும் 06.01.2019 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு காரைநகர் இந்துக் கல்லூரி நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் காரைநகர் பிரதேச சபைத் தவிசாளர் வி.கேதீஸ்வரதாசன் தலைமையில் இடம்பெற்றது.

பா.செயப்பிரகாசம்

பா.செயப்பிரகாசம்

‘கெனடி ஓர் பன்முக ஆளுமை’ உள்ளிட்ட இரு நூல்கள் வெளியிடப்பட்டதுடன் பேராசிரியர் ஞாபகார்த்த நினைவுரைகளும் இடம்பெற்றன.

இந் நிகழ்வில் விருந்தினராக யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன், ஓய்வு நிலைப் பேராசிரியர்களான ச.தில்லைநாயகம், செ.யோகராசா மற்றும்தகைசார் பேராசிரியரான ச.சத்தியசீலன்,பேராசிரியர் வே.தர்மரட்ணம்,பேராசிரியர் க.தேவராஜா,பேராசிரியர் தி.வேல்நம்பி, சிரேஷ்ட விரிவுரையாளர்களான கலாநிதி அமரசிறி விக்கிரமரட்ண,எதியோப்பிய பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் மெக்கனன் சிமே, ஆகியோரும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ந.ஸ்ரீகாந்தா, க.சுரேஸ்பிரேமச்சந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பலர் நினைவுரை ஆற்றினர்.

பா.செயப்பிரகாசம்

பா.செயப்பிரகாசம்

கடந்த இரு தசாப்தங்களில் காரைநகரில் அரங்கம் நிறைந்த முதலாவது நிகழ்வாக இந்நிகழ்வு பதிவாகின்றது. விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், அரச அலுவலர்கள், புலம்பெயர் நாடுகளிலிருந்து வருகைதந்தோர் பேராசிரியரின் நண்பர்கள் என அரங்கம் நிறைந்த அவையிலே நூல் வெளியீடும் நினைவஞ்சலியும் இடம்பெற்றது. இந் நிகழ்வு மறைந்த பேராசிரியரின் கனதியை பறைசாற்றி நின்றமை குறிப்பிடத்தக்கது.





நிகழ்ச்சி உரையை இங்கு காணலாம்.

இலங்கை பயண கட்டுரையை இங்கு படிக்கலாம்.

நன்றி: காரைநகர் 

University of Jaffna - 23 October 2002

Mr. R. Thirumavalavan, member of the Tamilnadu legislative assembly, Tamil poet Inqulab, vice chancellor of the University of Jaffna, film director from Tamilnadu Puhalenthi Thangaraj, writer P. Jeyapirakasam etc., addressed the meeting in the Kailasapthy Hall in the Jaffna University.

நன்றி: TamilNet


கி.பி.அரவிந்தன் தமிழர் வாழ்வியலின் ஒரு குறியீடு - பேர்ண், சுவிற்சர்லாந்து - 22 செப்டம்பர் 2015





பா.செயப்பிரகாசம்

ஈழப் போராட்ட முன்னோடி, கவிஞர், ஊடகவியலாளர் கி.பி.அரவிந்தன் அவர்களின் மறைவை ஒட்டி அவரது நண்பர்கள், தோழர்களால் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நூலான கி.பி.அரவிந்தன் - ஒரு கனவின் மீதி அறிமுக நிகழ்வு அண்மையில் சுவிற்சர்லாந்து நாட்டின் தலைநகர் பேர்ணில் அமைந்துள்ள ஞானலிங்கேச்வரர் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.
சிவராம் நினைவு மன்றம் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் நூலின் தொகுப்பாசிரியர்களுள் ஒருவரும் முற்போக்கு எழுத்தாளருமான தோழர் பா. செயப்பிரகாசம் கலந்து கொண்டு நூலை வெளியிட்டு வைத்தார். முதற் பிரதியினை பிரான்ஸ் நாட்டைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் மன்றத்தின் பணிப்பாளரும் மனித உரிமைப் போராளியுமான ச.வி.கிருபாகரன் பெற்றுக் கொண்டார்.

பா.செயப்பிரகாசம்

ஊடகவியலாளர் சண் தவராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், இலக்கியவாதி நயினை சிறி அவர்கள் நூலை அறிமுகம் செய்து உரையாற்றினார். கி.பி.அரவிந்தனின் அரசியல் சிந்தனைகள் தொடர்பில் அரங்கச் செயற்பாட்டாளர் திருமதி சிவாஜினி தேவராஜா அவர்களும் கி.பி.அரவிந்தன் அவர்களுடனான தனது அறிமுகம் என்ற தலைப்பில் ச.வி.கிருபாகரன் அவர்களும் உரையாற்றினர்.

பா.செயப்பிரகாசம்

தோழர் பா.செயப்பிரகாசம் தனது சிறப்புரையில், கி.பி.அரவிந்தன் அவர்களின்போராட்ட வாழ்வு ஏனையோருக்கு முன்மாதிரியான ஒன்று எனக் குறிப்பிட்டதுடன், தான் ஒரு மனிதனாகவும், தமிழனாகவும், சர்வதேச மனிதனாகவும் இருப்பதாலேயே அரவிந்தன் தொடர்பான நூலை வெளியிட முன்வந்ததாகவும் குறிப்பிட்டார்.

பா.செயப்பிரகாசம்

நூலை அறிமுகம் செய்த நயினை சிறி, ஈழப் போராட்டத்தை ஆய்வு செய்ய முயலும் எவரும் கி.பி.அரவிந்தன் - ஒரு கனவின் மீதி என்ற நூலைத் தவிர்த்து விட்டு அத்தகைய ஆய்வை முழுமையாகச் செய்துவிட முடியாது என்றார்.

சிவாஜினி தேவராஜா தனது உரையில், கி.பி.அரவிந்தன் தமிழர் வாழ்வியலின் ஒரு குறியீடு, தனது அரசியல் அனுபவத்தை இலக்கியமாக மாற்றிய அவர் அதற்காக கவிதையைத் தேர்ந்தெடுத்தார் என்றார்.

நூல் அறிமுகத்தைத் தொடர்ந்து தோழர் பா. செயப்பிரகாசம் அவர்களுடனான கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலின் போது ஈழப் போராட்டத்தின் பின்னடைவு தொடர்பில் விஞ்ஞானபூர்வமான ஆய்வு நடாத்தப்பட வேண்டும் என்ற விடயம் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நன்றி: தமிழ்வின்


பிரான்சில் நடைபெற்ற "இலங்கை அரசியல் யாப்பு" பிரெஞ்சு மொழியாக்க நூல் வெளியீடு - 04 நவம்பர் 2018



பா.செயப்பிரகாசம்

அரசறிவியல் துறை அறிஞர் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் திரு.மு.திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய "இலங்கை அரசியல் யாப்பு" பிரெஞ்சு மொழியாக்க நூல் வெளியீடு பிரான்சு புறநகர் பகுதியில் ஒன்றான லாக்கூர்னேவ் நகரத்தில் உள்ள Maison du people Guy Moquet என்ற மண்டபத்தில் 04.11.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 16.30 மணிக்கு வெளியிட்டு வைக்கப்பட்டது. ஆரம்ப நிகழ்வாக சுடர் ஏற்றல் நிகழ்வுடன் நடைபெற்றது. லாக்கூர்னோவ் மாநகரசபையின் ஆலோசகர் திரு.அந்தோனி ருசேல், மற்றும் கலைப்பிரிவு பொருளாதார மாநரமுக்கியஸ்தர்களுடன் லாக்கூர்னோவ் உறுப்பினர் ஆசிரியருமாகிய திரு.பரமானந்தம் அவர்களும் ஏற்றி வைத்தனர்.

பா.செயப்பிரகாசம்

பா.செயப்பிரகாசம்

பா.செயப்பிரகாசம்

லாக்கூர்னோவ் தமிழ்ச்சோலை மாணவர்களின் வரவேற்பு நடனத்தைத் தொடர்ந்து நூலாசிரியர் திரு.மு.திருநாவுக்கரசு அவர்களின் காணெளி மூலமான நூல் பற்றி உரை இடம் பெற்றது. அவரின் 20 நிமிடங்கள் வரையான உரையை பிரெஞ்சு மொழியில் திருமதி. நிசானி சிறீதரன் அவர்கள் வழங்கியிருந்தார். வாழ்த்துரையை நகரசபை ஆலோசகர் தமிழின விடுதலை உணர்வாளர் திரு.அந்தோனி றூசெல் அவர்கள் வாழ்த்துரையை வழங்கினார்.

பா.செயப்பிரகாசம்

எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் நூல் வெளியிட்டு உரையாற்றிட, கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தமிழர்களுடன் நல்லதொரு உறவை இன்று வரை பேணிவரும் பாரீஸ் மாநகரசபையின் லாகூர்னவ் பகுதி ஆலோசகர் திரு. அந்தணி ருசேல் நூலினைப் பெற்றுக்கொண்டு, காத்திரமான உரை நிகழ்த்தினார்.

சிறப்புரையை வழங்க தமிழ்நாட்டில் இருந்து தமிழ் மக்களுக்காய் குரல் எழுப்பி வரும் எழுத்தாளர் திரு பா.செயப்பிரகாசம் (சூரியதீபன்) அவர்கள் ஆற்றியிருந்தார். ஈழத்தமிழ் மக்களின் போராட்டம் உலகில் வாழும் ஒட்டுமொத்த தமிழர்களின் போராட்டம் என்பதையும், 2002ல்  யாழ் மண்ணில் நடைபெற்ற மாநிடத்தின் கூடல் நிகழ்வில் பங்கு பற்றியதும் தேசியத்தலைவரை சந்தித்து பெற்ற அனுபவங்கள் பற்றியும், இந்த நூல் வாசிக்கப்பட்டு பலரின் அனுசரணையுடன் பிரெஞ்சு மொழி பாண்டித்தியம் பெற்றவர்களின் மொழிபெயர்ப்புடன் வெளிவந்தமை மிகுந்த சந்தோசமும் திருப்தியும் ஏற்படுகின்றது என்றும் இங்கு வாழும் அடுத்த தலைமுறை இதனைக்கையில் எடுத்து அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் தெரிவித்து, இன்னும் பல விடயங்களையும் பகிர்ந்து கொண்டார்.

”ஈழத்துச் சொந்தங்கள் தமது வேதனையை, வெக்கரிப்பை தமக்குள் பேசிக் கொண்டிருப்பதில் சிறு பயனும் இல்லை.இந்த உலகத்துக்குக் காட்டவேண்டும். உலகுக்குச் சொல்வதற்கு ஒரு கண்ணாடி தேவை. இந்த பிரஞ்சு மொழிபெயர்ப்பின் மூலம் உலகத்தின் முன் முதல் கண்ணாடியை ஏந்தியுள்ளோம்” என்றார் பா.செயப்பிரகாசம்.

பா.செயப்பிரகாசம்

பா.செயப்பிரகாசம்

நன்றி: சங்கதி24



லெப்.கேணல் நாதன் கப்டன் கஜன் ஆகியோரின் 22 வது ஆண்டு வணக்க நிகழ்வு!! - பிரான்ஸ், 26 அக்டோபர் 2018


பிரான்ஸ் தலைநகர் பரிசில் வைத்து 26.10.1996 அன்று  சிறீலங்கா அரச கைக்கூலிகளின் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலக நிதிப்பொறுப்பாளர்  லெப்.கேணல் நாதன் மற்றும் ஊடகப்போராளியும் ஈழமுரசின் நிறுவன ஆசிரியருமான கப்டன் கஜன் ஆகியோரின் 22ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 26.10.2018 அன்று இம் மாவீரர்களின் கல்லறை அமைந்துள்ள பந்தன் துயிலும் இல்லத்தில் இடம் பெற்றது.

ஆரம்ப நிகழ்வாக பொதுச் சுடரினை லாக்கூர்நோவ் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் அ.புவனேஸ்வரராஜா  அவர்கள் ஏற்றி வைத்தார்.

அக வணக்கத்தைத் தொடர்ந்து குறித்த மாவீரர்களின் கல்லறைகள் மீது தமிழீழத் தேசியக் கொடி போர்த்தப்பட்டு மதிப்பளிக்கப்பட்டது.

பா.செயப்பிரகாசம்

கப்டன் கஜனின் சகோதரர்கள் மாவீர்களின் கல்லறைகளுக்கான ஈகைச்சுடரினை ஏற்றி மலர்மாலை அணிவித்தனர்.

தமிழகத்தில் இருந்து வருகை தந்திருந்த தமிழ் உணர்வாளர், எழுத்தாளர் திரு.பா.செயப்பிரகாசம் (சூரியதீபன்) அவர்களும், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகப் பொறுப்பாளர் திரு ப.பாலசுந்தரம் அவர்களும் உரையாற்றினர்.

பா.செயப்பிரகாசம்

பா.செயப்பிரகாசம்

நன்றி: சங்கதி24, புனிதபூமி


விடுதலைக்கன இன்றைய கனவும் நாளைய வெற்றியும் 
தமிழீழ சுதந்திர சாசனம் (Tamil Eelam Freedom Charter) - Lancaster Conference
Lancaster, Pennsylvania, USA - 11 May 2013

அமெரிக்காவில் வெளியிடப்பட்ட தமிழீழ சுதந்திர சாசனம்

அமெரிக்காவின் பென்சிலவேனியா நகரில், தமிழீழ சுதந்திர சாசனம் எனும் பெயரிலான அறிக்கை வெளியிடப்பட்டது.
2009ம் ஆண்டுக்கு பின்னரான ஈழவிடுதலைப் போராட்டத்தின் விடுதலைப்பாதையில்  இராஜதந்திர களத்தில் தமிழீழ சுதந்திர சானத்தின் முரசறைவு தமிழர் தரப்பின் வரலாற்று முக்கியமிக்கதொரு பெரும் அரசியல் முன்னகர்வாக, நாடு கடந்த தமிழீழ அரசால் முன்வைக்கப்படுகிறது.

இதற்கான அறிவிக்கைவிழா, மே 18-ம் தேதியன்று பென்சில்வேனியாவில் நடந்தது. இதில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் (தமிழகம்) பிரதிநிதி பேராசிரியர் சரசுவதி, முன்னுரை வழங்க, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், சுதந்திர சாசனத்தை வாசித்து முரசறைந்தார்.

தமிழீழ சுதந்திர சாசனமானது நிகழ்வுபூர்வமான தமிழீழ தேசத்தின் நிலைப்பாடுகளை விவரித்திருந்ததுடன், வெளியுறவு , பொருண்மியம் , மொழி, கல்வி, மருத்துவம் - உடல்நலன்சார், மேம்பாடு, சுற்றுபுறச்சூழல், குடியுரிமை ஆகியனவற்றின் தமிழீழ தேசத்தின் கொள்கை நிலைப்பாட்டையும் உள்ளடக்கியுள்ளது.

முள்ளிவாய்க்கால்  நினைவேந்தல் நிகழ்வுகளின் உச்சநிகழ்வாக அமைந்திருந்த தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு நிகழ்வில், தென்சூடானிய விடுதலை இயக்கத்தின் பிரதிநிதி Daniel Mayan, வங்கதேச விடுதலை இயக்க பிரதிநிதி Dr.Nabibulla, அமெரிக்காவின் முன்னாள் சட்டா அதிபர் (நா.தமிழீழ அரசாங்கத்தின் மேற்சபை உறுப்பினர்) Ramsay Clarke, பேராசிரியர் Francis Boyle ஆகியோர் கலந்துகொண்டனர்.

சென்னை அரசியல் அறிவியல் பேராசிரியர் மணிவண்ணன், பேராசிரியர் சிறிஸ்கந்தராஜா, கலாநிதி ஜெயராஜ் (USTIPAC அமைப்பு அமெரிக்கா), நாஞ்சில் பீற்றர் (FETNA அமைப்பு – அமெரிக்கா), பேராசியர் சந்திரகாந்தன், கலாநிதி இம்தியாஸ் (முஸ்லிம் பிரதிநிதி), தமிழக எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் ஆகியோரும் இம்மாநாட்டில் உரையாற்றினர்.

கடந்த 15ம் நாள் முதல் நடந்த இந்த முரசறைவு மாநாட்டில், தமிழர்கள் மற்றும் தமிழரல்லாத பல்வேறு துறைசார் ஆளுமையாளர்கள் பலர் பங்கெடுத்திருந்ததோடு 20க்கும் மேற்பட்ட ஆய்வுகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. பல்வேறு தலைப்புக்களில் விவாதங்களும் கருத்துப்பரிமாற்றங்களும் இடம்பெற்றன.

நிகழ்ச்சி உரையை இங்கே காணலாம் & இங்கு படிக்கலாம்.

ஈழம் - பிப்ரவரி 2018 

ஈழ பயண நிகழ்வை பற்றி இங்கு படிக்கவும்.



வட்டமேசை நிகழ்வில் பா.செயப்பிரகாசம் உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கவுள்ளார் - 16-02-2014

பிரபல மனித உரிமை ஆர்வலரும் தமிழ் இன உணர்வாளருமான பா.செயப்பிரகாசம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (16-02-2014) அன்று மாலை நேரம் 7.00 மணிக்கு லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்டமேசை நிகழ்வில் மக்களின் வினாக்களுக்கு பதில் அளிக்க உள்ளார். உங்கள் கேள்விகளுக்கான விடைகளை கேட்க ஆவலாக உள்ளீர்களா? நேயர்கள் உங்கள் வினாக்களை எழுத்து மூலமும் அல்லது (0044 20 31376284) தொலைபேசி ஊடாக குரல் மூலமூம் பதிவு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.



‘கி.பி அரவிந்தன்: ஒருகனவின் மீதி’ – நோர்வேயில் நடந்த நூல் அறிமுகம்

காலம்: 06.09.2015 (ஞாயிறு)
நேரம்மாலை 4 மணி
இடம்: Linderud பாடசாலை மண்டபம் - Statsråd Mathiesens vei 27, 0594 Oslo

‘கி.பி அரவிந்தன்:ஒருகனவின் மீதி’ எனும் நூல் ஈழப்போராட்ட முன்னோடி, கவிஞர், ஊடகவியலாளர், சிந்தனையாளர் எனத் தமிழ்ச் சூழலில் பன்முகப் பரிமாணங்களையும் வகிபாகத்தினையும் கொண்டிருந்த கி.பி அரவிந்தன் அவர்களின் நினைவுகளைத் தாங்கி தமிழகத்தில் உருவாக்கம் பெற்றுள்ளது.

இந்நூல் புலம்பெயர் நாடுகளில் முதன்முறையாக நோர்வேயில் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. தமிழ்3 வானொலியின் ஏற்பாட்டில் 06-09-15 ஒஸ்லோவில் இதன் அறிமுகநிகழ்வு இடம்பெற்றது.


கி.பி அரவிந்தன்: ஒருகனவின் மீதி

கி.பி அரவிந்தன்: ஒருகனவின் மீதி

ஆயுதப் போராட்டத்தை முன்மொழிந்து, அதில் துணிந்து இறங்கிய முன்னோடிகளில் ஒருவராக, தமிழீழ விடுதலைக்கான கருத்தியல் ரீதியான, சிந்தனை ரீதியான பங்களிப்பாளராக, தமிழின் முக்கிய இலக்கியப் படைப்பாளிகளில் ஒருவராக என மூன்று பெரும் இயங்குதளங்களில் அரவிந்தனது வகிபாகத்தைக்  குறிப்பிடலாம்.

இம்மூன்று இயங்குதளங்களும் முறையே தாயகம், தமிழகம், புலம் என மூன்று வெவ்வேறு வாழ்விடங்களில், மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் அமையப்பெற்றதாகும். அதற்கேற்றாற்போல், தாயகம், தமிழகம், புகல் நாடுகளில் வாழும் அவரோடு பழகிய, வெவ்வேறு காலகட்டங்களில் அவரோடு பணிபுரிந்த, அவரை அறிந்த தோழர்கள், எழுத்தாளுமைகள், கல்வியாளர்கள், இலக்கியகர்த்தாக்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டு ஆளுமைகளின் கட்டுரைகளும், நினைவுப் பகிர்வுகளும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

அரவிந்தன் எனும் ஆளுமையின் கணிசமான பரிமாணங்களைக் காத்திரமாகப் பதிவுசெய்துள்ளது இந்நூல். கட்டுரைகள் நேர்த்தியான முறையில் தொகுக்கப்பட்டு, நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்தஎழுத்தாளரும் கவிஞருமான பா.செயப்பிரகாசம், எழுத்தாளர் ரவிக்குமார் ஆகியோர் தொகுத்துள்ள இந்நூலினை, மணற்கேணி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.


பா.செயப்பிரகாசம்

பா.செயப்பிரகாசம்

இக்குறிப்பினை எழுதியவரின் தலைமையில் இடம்பெற்ற நூல் அறிமுக அரங்கில் எழுத்தாளரும் கவிஞருமான பா.செயப்பிரகாசம், கவிஞர் இளவாலை விஜயேந்திரன், கவிஞர் சோதியா (சிவதாஸ் சிவபாலசிங்கம்), எழுத்தாளர் குணா கவியழகன் மற்றும் கி.பி அரவிந்தனின் உடன்பிறந்த சகோதரர் அல்போன்ஸ் கிறிஸ்தோபர்  ஆகியோர் கருத்துரைகளை ஆற்றியிருந்தனர்.

இந்நூலின் தொகுப்பாளர்களில் ஒருவரான எழுத்தாளரும் கவிஞருமான பா.செயப்பிரகாசம் அவர்கள் நூல் உருவாக்க முயற்சி, கட்டுரைகள் தொகுக்கப்பட்ட முறைமை பற்றிக் கூறுகையில் மணற்கேணி, காக்கைச் சிறகினிலே, உயிரெழுத்து ஆகிய இதழ்களில் வெளிவந்த கட்டுரைகள் அவ்விதழ்களிடம் அனுமதி பெற்று மீள்பதிப்புச் செய்யப்பட்டதோடு, பதிதாகப் பலரிடமிருந்து கேட்டுப்பெற்ற கட்டுரைகளும், நினைவுப் பதிவுகளும் இணைக்கப்பட்டுள்ளது என்றார்.


“ஒருபோராளி என்ற சொல்லுக்குத் தன்னைத் தகுதிப்படுத்திக் கொண்டவராகவே கி.பி.அரவிந்தன் எக்காலத்திலும் இருந்தார்” என்ற வகையில்,அத்தகைய போராளியின் நினைவுகளைத் தாங்கிய இந்நூலினைப் பதிப்பித்து வெளிக்கொணர்ந்தமை மகிழ்ச்சிக்குரியது என்பதோடு, அதனையொரு காலக்கடனாகத் தாம் கருதுவதாகவும் செயப்பிரகாசம் குறிப்பிட்டார்.

நன்றி: புதினப்பலகை



எழுத்தாளர் பா.செயப்பிரகாசத்துடன் (சூரியதீபன்) கிளிநொச்சியில் உரையாடல்

03 ஜனவரி 2019 வியாழக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு கனகராசா வீதி, திருநகர் வடக்கில் உள்ள கல்வி பண்பாட்டு அபிவிருத்தி நிறுவன (Little Aid) மண்டபத்தில் நடைபெறவுள்ளது. நிகழ்வில் "எழுத்தாளர் பிரபஞ்சன் எழுத்தும் வாழ்வும்",  "தமிழரின் அரசியலும் இலக்கியமும்"  ஆகிய தலைப்புகளில் உரைகளும் உரையாடலும் இடம்பெறும். ஆர்வமுள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.



மாவீரன் பண்டாரவன்னியன் – கண்ணகி நூல் வெளியீட்டு விழா - நோர்வே, 3-8-2015



பா.செயப்பிரகாசம்

பா.செயப்பிரகாசம்

பா.செயப்பிரகாசம்

நிகழ்ச்சி உரையை இங்கு காணலாம்.



ஆஸ்திரேலியா SBS ரேடியோ நேர்காணல் - 27 ஜனவரி 2013

நேர்காணல் இங்கு காணலாம்






’மானுடத்தின் தமிழ்க் கூடல்’ மாநாடு, 19-22 அக்டோபர்  2002 யாழ்ப்பாணம்

2002 ஈழத்தில் ’அமைதி ஒப்பந்த காலத்தின்’ போது, 19-22 அக்டோபரில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் விடுதலைப் புலிகளின் முன்னெடுப்பில் நான்கு நாட்கள் நடைபெற்ற ”மானுடத்தின் தமிழ்க்கூடல் மாநாட்டில்” பா.செயப்பிரகாசம் பங்கேற்றார். கவிஞர் இன்குலாப், ஓவியர் மருது, திரை இயக்குநர் புகழேந்தி, விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் - என ’சரிவிகித உணவுக் கலவை போல்’ ஐவர் பங்கேற்ற அந்நிகழ்வில் ஒவ்வொரு நாள் நிறைவிலும் ஒருவர் உரையாற்றினர். மூன்றாம் நாள் நிகழ்வில் இவருடைய உரை நிகழ்ந்தது. ’மானுடத்தின் தமிழ்க்கூடல்‘ மாநாட்டின் தொடர்ச்சியாய் ஈழத்தில் பத்து நாட்கள் மேற்கொண்ட பயண அனுபவங்களின் தொகுப்பாக ”ஈழக் கதவுகள்” என்னும் நூல் வெளியானது. 

2002 ஈழ பயண புகைப்படங்களை இங்கு காணலாம்.


பிரான்சில் நடைபெற்ற பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, 01.11.2018, லாக்கூர்நெவ் - பாரிஸ்



பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் 01.11.2018 வியாழக்கிழமை ஆத்மாக்கள் நாளில், பிரான்ஸ் லாக்கூர்நெவ் மாநகரசபையின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.


பொதுச்சுடரினை லாக்கூர்நெவ் தமிழ்ச் சங்க நிர்வாகி திருமதி நேசராசா சிவகுமாரி அவர்கள் ஏற்றிவைத்தர். ஈகைச்சுடரினை, பிரிகேடியார் தமிழ்ச் செல்வனின் துணைவியார் ஏற்றி மலர் மாலையை அணிவித்தார். கேணல் பரிதியின் நினைவுச் சின்னத்திற்கு அவரது புதல்வி மலர்மாலை அணிவித்தார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து சுடர் வணக்கமும், மலர் வணக்கமும் இடம் பெற்றது.

லாக்கூர்நெவ் நகரசபை உறுப்பினர் திரு. Couteau-Russel, பாராளுமன்ற உறுப்பினர் திருமதி Marie-George Buffet, தமிழகத்தில் இருந்து வருகை தந்திருந்த தமிழ் உணர்வாளர் திரு ஜெயப்பிரகாசம் மற்றும் தமிழர் இளையோர் அமைப்பைச் சேர்ந்தவர்களும் உரையாற்றினர்.


இறுதியாக 'நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்' பாடல் ஒலித்து, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் எனும் தாரக மந்திரம் முழங்க நிகழ்வுகள் நிறைவு பெற்றன.



மாவீரர் நாள், லண்டன், நவம்பர் 27, 2011

தமிழீழதேசத்தின் விடுதலைக்காக விதையாக வீழ்ந்த தேசப்புதல்வர்களை நினைவு செய்யும் மாவீரர் நாள் பிரித்தானியாவில் ஆறு இடங்களில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

மாவீரர் நாளில் தாயகத்தில் கடைப்பிடிக்கப்படும் நிகழ்வுகளின் வரிசைக்கிரமத்தில் இங்கும் நிகழ்வுகள் நடாத்தப்பட்டன. மாவீரரை நினைத்து மணிகள் ஒலிக்க ஒரு கணம் மௌனமாகி துயிலும் இல்லப் பாடலுக்கு ஒவ்வொருவரும் தமது கைகளில் மாவீரர் நினைவு தீபங்களை ஏந்திப்பிடித்து நின்றது உணர்வுகளின் உச்சமாகவே இருந்தது.




அதன் பின்னர் தமிழகத்திலிருந்து வருகை தந்திருக்கும் தமிழின உணர்வாளர்களும், தமிழீழ விடுதலைக்காக நீண்ட காலமாக குரல் எழுப்பி போராடி வருபவர்களுமாகிய திரு.மணியரசன், திரு.செயப்பிரகாசம் ஆகியோர் மாவீரர்களின் கனவுகளை நனவாக்குவதற்காக இனிவரும் காலங்களில் தமிழினம் என்ன செய்யவேண்டும் என்று உரையாற்றினார்கள். தமிழகத்திலிருந்து தமிழின உணர்வாளர்களும், தமிழீழ விடுதலைப் போராட்டத்துடனும் தமிழீழத் தேசிய தலைவருடனும் நெருக்கமாக பழகியவர்களுமான திரு.பழ.நெடுமாறன், திரு.வைகோ, உணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தன் ஆகியோர் வழங்கிய மாவீரர் நாள் செய்திகள் வெண்திரையில் காண்பிக்கப்பட்டது.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

மலேயா கணபதி

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?