மக்களின் பேச்சு மொழி ஓசை ஒழுங்கு, லயம், இழுவை, இசைத்தன்மை எனப் பல இணைந்து வெளிப்படுகிறது. இந்த ஓசை ஒழுங்கு எதுகை, மோனையாய் சொற்பிரயோகங்களில் ஒலித்தது. “எண்ணைக்குடம் போட்டவளும் ஆத்தாடி அம்மாடி தண்ணிக்குடம் போட்டவளும் ஆத்தாடி அம்மாடி” சொலவமாக வெளிப்பட்டிருப்பினும், எதுகை,மோனையுடன் ஒரு கவிதையாக நிற்கிறது. இதன் மொழிப்பண்பு நோக்கி பேச்சோசைக் கவிதை எனச் சொல்லலாம். “அறுக்கமாட்டாதவன் இடுப்பில அறுத்தெட்டுப் பண்ணரிவாள்” இரண்டு சொலவடைகள் போதும் எடுத்துக்காட்டுக்கு. இணைவு, எதிர்வு (முரண்), லயம், ஓசை ஒழுங்கு என மக்களின் நா வழக்கிலுள்ள இவைகளிலிருந்து எழுத்து வடிவக் கவிதை எடுத்துக் கொள்கிறது. எடுத்துக் கொண்டது என்பதினும் கடன்வாங்கிக் கொண்டது என்ற வார்த்தை பொருத்தமாய் அமையும். கவிதை மரபு எல்லாக் காலத்திலும் ஏதேனும் ஒரு கூறினை நாட்டுப்புற வழக்காறு எனப்படும் வாய்மொழியிலிருந்து கடன் வாங்கிக் கொண்டிருக்கிறது. சங்க காலக் கவிதைக் கருவூலத்தில் எதுகை, மோனை என்ற ஓசை ஒழுங்கு பிரதானமாக இருக்கவில்லை; அதன் பின்னரான கவிதைகள் எதுகை மோனை என்ற ஆடை உடுத்திக்கொள்கின்றன. இதுவரை ஆடை அணியாதிருந்த கவிதை மரபுக்க...
கருத்துகள்
கருத்துரையிடுக