பங்குப்பெற்ற நிகழ்வுகள் 2007 - இந்தியா

தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் – இரண்டாம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் - 11 பிப்ரவரி 2007

11.2.07 அன்று சென்னையிலுள்ள ‘இக்ஸா’ மையத்தில் முழுநாள் நிகழ்வாக நடந்தேறிய ‘தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்க இரண்டாம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் மூத்த மொழி பெயர்ப்பாளர்களான திரு ம.லெ.தங்கப்பா, திரு தியாகு, திரு எம்.எஸ். வெங்கடாசலம், திரு கே.எஸ்.சுப்பிரமணியன் ஆகியோர் நினைவுக் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

எழுத்தாளர் திரு பா.செயப்பிரகாசம், திரு கே.எஸ்.சுப்பிரமணியனுக்கு விருது வழங்குகிறார். அருகே திரு தியாகு


இஸ்லாமிய கலாச்சாரம் - கவிஞர் ஹெச்.ஜி.ரசூலின் படைப்பு குறித்த ஓர் உரையாடல் - 7 செப்டம்பர் 2007

இடம்: தேவநேய பாவாணர் நூலகக் கட்டிடம், எல்.எல்.ஏ பில்டிங், அண்ணாசாலை, சென்னை

நாள்: 07-09-2007, வெள்ளி மாலை 6.00 மணி

தலைமை: எழுத்தாளர் பா.செயப்பிரகாசம்

பங்கேற்பாளர்கள்:
  • சி.மகேந்திரன், தாமரை ஆசிரியர்
  • கவிஞர் இன்குலாப்
  • தோழியர் வ.கீதா
  • தோழியர் - டி. ஷெரீஃபா பேகம், ஸ்டெப்ஸ் புதுக்கோட்டை
  • எழுத்தாளர் அழகிய பெரியவன்
  • திரு.புனிதபாண்டியன், ஆசிரியர், தலித்முரசு
  • எழுத்தாளர் களந்தை பீர்முகமது
  • எழுத்தாளர் ஜாகிர்ராஜா
  • எழுத்தாலர் ஆதவன் தீட்சண்யா, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்
  • கவிஞர் மணிமுடி, தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றம்
  • கவிஞர் மனுஷ்யபுத்திரன், ஆசிரியர், உயிர்மை
ஒருங்கிணைப்பு: தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி, சென்னை.

எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் தலைமை வகித்து நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார். அவர் தனது தலைமை உரையில்
ஹெச்.ஜி.ரசூல் மீது ஊர் விலக்கம், மத விலக்கம் நிகழ்த்தப்பட்டுள்ளது. இன்றைய அதிகாரமையங்களை நோக்கி அவரது படைப்பு கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

இத்தனை இத்தனை ஆண் நபிகளுக்கு மத்தியில் ஏன் வாப்பா இல்லை ஒரு ஆண் நபி..? என தன் மைலாஞ்சி கவிதை நூலில் எழுதியதற்காக ஏற்கெனவே நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டார். இன்று தான் எழுதிய ஒரு கட்டுரைக்காக பழிவாங்கப்பட்டுள்ளார். அதிகாரங்களை கட்டமைத்து வைத்துள்ள ஜமாஅத் இத்தகையான மோசமான தீர்ப்பை வழங்கியுள்ளது என்றார்.



பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் வீரவணக்கம் ஊர்வலம் - 12 நவம்பர் 2007

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளுக்கு தமிழக அரசின் அனுமதி மறுப்பை மீறி வீரவணக்கம் ஊர்வலம் நடத்த முயன்ற ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட 346 தமிழின உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மன்றோ சிலை அருகே திங்கட்கிழமை மாலை 4:30 மணிக்கு பழ.நெடுமாறன், வைகோ உள்ளிட்டோர் தலைமையில் ம.தி.மு.க. தொண்டர்கள் குவிந்தனர். இதனையடுத்து முழக்கங்களை வைகோ எழுப்ப தொண்டர்களும் முழக்கமிட்டு ஊர்வலமாக நகர முயற்சித்தனர்.

அதன் பின்னர் வைகோ, பழ.நெடுமாறன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் செயலாளர் மணியரசன், ஓவியர் வீரசந்தானம், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் மற்றும் அங்கு திரண்டிருந்த ம.தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோரை காவல்துறையினர் மாலை 5:20 மணியளவில் கைது செய்தனர்.

அப்போது, இந்திய மத்திய அரசைக் கண்டித்தும் தமிழக காவல்துறையைக் கண்டித்தும் வைகோ முழக்கங்களை எழுப்ப திரண்டிருந்தோரும் உரத்த குரலில் அந்த முழக்கங்களை எழுப்பினர்.

விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தைச் சேர்ந்த திருமாறன், இராசேந்திர சோழன், கவிஞர் இன்குலாப், சந்திரேசன், மரு.சுந்தர், புதுவை அழகிரி, நா.வை.சொக்கலிங்கம், பொன்னிறைவன், கி.த.பச்சையப்பன், கா.பரந்தாமன், இரா.பத்மநாபன், கே.எஸ்.இராதாகிருஷ்ணன், இந்திய தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது, தமிழ்த் தேசப் பொதுவுடை மைக் கட்சி பொதுச் செயலாளர் மணியரசன், தமிழ்நாடு மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக்கட்சிப் பொதுச் செயலாளர் வே. ஆனைமுத்து, ம.தி.மு.க-வின் மாநில மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள், ம.தி.மு.க வழக்கறிஞர்கள், புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தொண்டர்கள் ஆகியோர் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

14 பெண்கள் உள்ளிட்ட கைது செய்யப்பட்ட 346 பேரும் இரவு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


பேராசிரியர் கல்யாணிக்கு விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் 'அம்பேத்கர் விருது', 14.04.2007 மாலை, சென்னைக் கோயம்பேடு சந்தைத் திடல் 

மனித உரிமைப் போராளி பேராசிரியர் கல்யாணிக்கு விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் 'அம்பேத்கர் விருது' வழங்கிக் கௌரவித்திருக்கிறது. இதுபோன்ற விருதை இந்தியாவிலேயே முதன்முறையாக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்புதான் வழங்குகிறது.

தமிழ்ப் புத்தாண்டு தினமான 14.04.2007 அன்று மாலை சென்னைக் கோயம்பேடு சந்தைத் திடலில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் விருது வழங்கப்பட்டது. விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன், எழுத்தாளர் சூரியதீபன், கவிஞர் இன்குலாப், சட்டப்பேரவை உறுப்பினர்கள் செல்வப் பெருந்தகை, ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு வாழ்த்தினர். தலித்துகளுக்காகப் போராடும் தலித் அல்லாத ஒருவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினரால் வழங்கப்படும் இவ்விருதினைப் பெறும் முதல் போராளி பேராசிரியர் கல்யாணி என்பது குறிப்பிடத்தக்கது.


ஈழக் கதவுகள் & அந்த கடைசிப் பெண்ணாக - நூல்கள் வெளியீட்டு விழா - 17-2-2007

நூல் வெளியீட்டு விழா செய்தியை இங்கு படிக்கலாம்.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

மலேயா கணபதி

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?