பங்குப்பெற்ற நிகழ்வுகள் 2014 - இந்தியா

ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது - 02 ஆகஸ்ட் 2014 மாலை 4:00
ஜி.என்.செட்டி சாலை, சர் பிட்டி தியாகராயா கலையரங்கம், தி.நகர்



செந்தமிழ் அறக்கட்டளை நடத்தும் ஜெயந்தன் படைப்புகள் குறித்த கருத்தரங்கம், விருதுகள் வழங்கும் விழா.




தலைமை: நல்லி குப்புசாமி செட்டியார்;

பங்கேற்பு: திருப்பூர் கிருஷ்ணன், த.இந்திரஜித்; புகழேந்தி; நாகலட்சுமி ஜெயந்தன், இளம்பிறை; சுப்ரபாரதி மணியன்; பா.செயப்பிரகாசம்; சௌமா.இராசரெத்தினம்; கரு.இராசகோபாலன்; முமு.அஷ்ரஃப் அலி; மணவை தமிழ்மாணிக்கம்; தமிழ்மணவாளன்; கோ.நவமணி சுந்தரராசன்; தாழை நா.இளவழகன்; த.இந்திரஜித்; ஜெயந்தன் சீராளன்; கரு.இராசகோபாலன்;


கோ.கேசவனின் திறனாய்வாளுமை - நூல் வெளியீட்டு விழா

வரவேற்புரை: பேரா.திருமாவளவன்,
தலைமை: எழுத்தாளர் பா.செயப்பிரகாசம்

வெளியிடுபவர்: நீதியரசர் கே.சந்துரு
பெறுபவர்: தோழர் ராதாபாய் அவர்கள்

கருத்துரை:
பேரா.கோச்சடை,
பேரா. மணிகோ.பன்னீர் செல்வம்,
பேரா.கமலா கிருஷ்ணமூர்த்தி,
ஆசிரியர் தா.பாலு, (விழுப்புரம்)
எழுத்தாளர் கி.நடராசன்.

ஏற்புரை: ஜெ.கெங்காதரன்

நன்றியுரை: ஜெ.பா.தமிழ்

நாள்: 01-11-2014, சனிக்கிழமை, மாலை 5.00 மணி

இடம் : தமிழ் இணைய கல்விக் கழகம், அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகில், காந்தி மண்டபம் சாலை, கோட்டூர்புரம், சென்னை 600 025

நிகழ்ச்சி உரையை இங்கு காணலாம்.







மனித உரிமைப் போராளி வழக்கறிஞர் பி.வி. பக்தவச்சலம் 7-ஆம் ஆண்டு நினைவு ‘சமூகப் போராளி’ விருது வழங்குதல் – கருத்தரங்கம் - 20 செப்டம்பர் 2014


பி.வி.பி. அறக்கட்டளை, குழந்தைகள் உரிமைகளுக்காக செயல்படும் ‘துளிர்’ ஆகிய அமைப்புகள் சார்பில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பழங்குடி இருளர் மக்களுக்காக தொடர்ந்து போராடி வரும் பேராசிரியர் பிரபா.கல்விமணி இந்த ஆண்டுக்கான விருதினைப் பெற்றார். விருது வழங்கி, ‘குழந்தையைப் பாதுகாக்க தேவை ஒரு சமூகம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கை தொடங்கிவைத்த நீதிபதி அக்பர் அலி, அநீதிகளால் பாதிக்கப்படுகிறவர்கள் யாராக இருந்தாலும் அதை எதிர்த்து எத்தகைய இழப்பு வந்தாலும் போராடுகிற துணிவு ஒவ்வொருவருக்கும் தேவை என்றார்.



மூத்த வழக்கறிஞர் காந்தி வாழ்த்தி பேசினார். எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் விருதுக்குரியவரை அறிமுகப்படுத்தினார். அறக்கட்டளை நிர்வாக அறக்காவலர் மருத்துவர் பி.வி. வெங்கட்ராமன் வரவேற்றார்.


கருத்தரங்கில் ‘துளிர்’ அமைப்பின் நான்சி தாமஸ், வித்யா ரெட்டி, ‘வித்யாசாகர்’அமைப்பின் தீப்தீ பாட்டியா, பள்ளிக்கல்வித்துறை முன்னாள் இணைச்செயாளர் கிருஷ்ணன் ராமனுஜம் மருத்துவர் சுசித்ரா ராம்குமார் வழக்கறிஞர் பி.எஸ்.அஜிதா ஆகியோர் உறையாற்றினர். வழக்கறிஞர் சரவண வேலு தொகுத்தளித்தார், வ.செல்வம் நன்றி கூறினார்.



இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் 50ஆம் ஆண்டு - சென்னைக் கலந்தாய்வு

இந்தித் திணிப்புக்கு எதிரான 1965 மாணவர் போராட்டத்தின் 50 ஆம் நினைவு ஆண்டை ஒரு மொழி உரிமை ஆண்டாக அறிவித்துத், தொடர்ச்சியாகப் பல கோரிக்கை நிகழ்வுகளையும் போராட்டங்களையும் முன்னெடுக்கவேண்டும் என்று மொழி உரிமைச் செயல்பாட்டாளர்களும் இயக்கங்களும் நவம்பர் 30, 2014 ஞாயிறு அன்று ஒரு முயற்சியைத் தொடங்கியுள்ளன. மக்கள் இணையம் மற்றும் பன்மொழி இந்தியாவுக்கான இயக்கம் ஆகியவற்றின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் கூட்டத்தில் முதன்மை அமைப்புகளும் மொழி உரிமை ஆராய்ச்சியாளர்களும் செயல்பாட்டாளர்களும் கலந்துகொண்டார்கள்.

நிகழ்வில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் அதன் துணைப் பொதுச்செயலர் வேணுகோபால், அதன் தொழிலாளர் வாழ்வுரிமைச் சங்கத் தலைவர் சிவராமன். தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த வே.பாரதி, சீவானந்தம், மக்கள் இணையத்தின் சார்பில் அதன் அமைப்புச் செயலர் தாலின், தாண்டவமூர்த்தி, சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன், தமிழ்நாட்டுக் கல்வி இயக்கத்தின் திருமலை தமிழரசன், தமிழர் பண்பாட்டு நடுவத்தின் இராசுகுமார் பழனிசாமி, இந்திய மாணவர் இசுலாமிய இயக்கத்தின் சையத்து அபுதாகீர், பீர் முகமது, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் முத்து கார்த்திக்கு, கொற்றவை இலக்கியச் சங்கத்தின் இரா.. மருதுபாண்டியன், கச்சத்தீவு மீட்பு இயக்கத்தின் சீதையின் மைந்தன் ஆகியோர் அமைப்புகள் சார்பில் கலந்துகொண்டார்கள்.

முற்போக்கு எழுத்தாளரும் இந்தி எதிர்ப்புப்போராட்டத்தின் தளகர்த்தர்களில் ஒருவரான பா.செயப்பிரகாசம், ஆவணப்பட இயக்குநர் கோம்பை அன்வர், கணித்தமிழ் நிபுணர் மணி மணிவண்ணன், கனடாவிலிருந்து வருகை தந்திருந்த பேராசிரியர் இரா. செல்வகுமார், தமிழ் உரிமைச் செயல்பாட்டாடளரும் வழக்கறிஞருமான அங்கயற்கண்ணி, இதழாளர்கள் விட்ணுபுரம் சரவணன், இராதிகா சுதாகர், கெளரி, மின்மினி இதழின் ஆசிரியர் தேவிகாபுரம் சிவா, சமூகச் செயல்பாட்டாளர் முத்துராமன், சியார்சு, ஆற்றலரசு ஆகியோர் கலந்துகொண்டனர்.


புத்தக மதிப்புரையை இங்கு படிக்கலாம்.





கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

மலேயா கணபதி

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?