ஜெயந்தன் - நினைக்கப்படும்
மதுரை வடக்கு மாசி வீதியில் பேரா.துளசிராமசாமியின் ‘அரூசா’ அச்சகத்தின் படியில் அவர் நின்று கொண்டிருந்தார். நிஜ நாடக இயக்கம் பேரா.மு.ராமசாமியின் ‘விழிகள்’ மாத இதழும் அச்சாகியதால் மு.ரா.வும் இருந்தார். மதுரையில் கோயில்களுக்கும் சாமி வலங்களுக்கும் குறைவில்லை. முன் மாலையை லேசாய் அசைத்துத் தள்ளியபடி இரவு பின்னால் மெதுவாக வந்தது. அது குளிர்காலமில்லை. கோடைகாலம். மதுரைக் கோடையில் இரவு அப்படித்தான் ஆடி அசைந்து வரும். ‘பெட்ரோமாக்ஸ்’ – விளக்கு வெளிச்சத்தில் வடக்கு மாசி வீதியில், கிழக்கிலிருந்து மேற்காக ‘அம்மன்’ சப்பரத்தில் வந்து கொண்டிருந்தாள். ஒவ்வொருவரது கைகளும் கன்னங்களும் இதற்காகவே இருப்பது போல் கூப்புவதும் கன்னத்தில் போடுவதுமாய் இருந்தார்கள். “எவ்வளவு பெரிய தேர். எத்தனை பெரிய கூட்டம். இவ்வளவு பெரிய தேரில் அம்மன் உரு மட்டும் கண்ணுக்குத் தெரியலே. இந்த மனுசப்பயல்களைப் பார்த்து பயந்து ஒரு மூலையில் ஒடுங்கி உக்காந்திட்டா போல” - அவர் பேசினார். கூட்டத்திலிருந்து அவர் பேச்சு விலகியதாய்க் காணப்பட்டது. எதுவொன்றையும் பொதுப்புத்திப் பார்வையிலல்லாமல் புதிய கோணமாய் வெளிப்படுத்தும் திறன் கொண்டி...
கருத்துகள்
கருத்துரையிடுக