பொன்னீலன் ‘கரிசல்’ - நாவல்: நில வரைவியலும் நினைவுகளும்
(’பொன்னீலன் 80‘ நூலில் வெளியான கட்டுரையின் செழுமைப்படுத்திய வடிவம்) படைப்பாளிகளை நேரில் சந்தித்து அறிமுகமாவதினும் வாசிப்பு வழி அறிமுகம் எளிது, அநேகம் எழுத்தாளர்களின் படைப்புக்கள் வழி இது சாத்தியமாகிறது. கொள்ளைக்காரர்கள் – குறுநாவல் தாமரை இலக்கிய இதழில் வாசித்தேன்; வாசிப்பு மூலம் அவர் எனக்கு முதல் அறிமுகம். வாசித்து முடித்து அசை போடுகையில் சிறு சந்தேக மின்னல் கீறியது; கொள்ளைக்காரர் யார்? கதையில் வருகிற காவல்துறை மாந்தர்களா? கடத்தல் வியாபாரிகளா? கதை தந்த எழுத்தாளரா? கதை மாந்தர்களின் பேச்சும், கதை உரைப்புப் பாங்கும் மலையாளமும் தமிழும் பிசைந்து பிழிந்த மூலிகைச்சாறு போல வட்டார வழக்கான குமரி மொழியில் வெளிப்பட்டிருந்தது. வட்டார மக்களை உலுக்கி உன்மத்தம் பிடிக்கச் செய்து கொண்டிருந்த ‘அரிசிப் பிரச்சனை’. கதை காட்டிய உண்மையின் பக்கம்; மக்கள் பக்கம் நின்று அவர் வாதாட்டம் செய்த மொழி - கதையைப் படைத்த எழுத்தாளர் என்பது எனக்கு உறுதிப்பட்டது. ஒரு கைகுலுக்கள் செய்ய நினைத்தேன். படைப்பாளி அருகில் இல்லை. அது 1973 – மதுரை ‘ஹாலேஜ் ஹவுஸ்’ உணவக மாடி அரங்கத்தில் ‘புதிய மொட்டுகள்’ என்றொரு கதைத்தொகுப...
கருத்துகள்
கருத்துரையிடுக