ஊடறுவுக்கு வாழ்த்து
மகளிருக்கு இரு வடிவங்கள் உள்ளது; ஒன்று உடல் வடிவம். மற்றொன்று கருத்தியல் வடிவம். இவ்விரண்டின் இயக்கமும் நெறிப்பாடும் - எங்கிருந்து பிறந்தனவோ அந்த ஆணியல் சமுதாயத்தில் தங்கியுள்ளது. ‘இது எனது உடல்; இதன்மீது எனக்கு மட்டும் சுதந்திரம் உண்டு’ கோருகிற புதியவள் ஒருத்தி உருவாகி வருகிறாள். அந்தப் புள்ளியில் பழைய கருத்தியலை உடைத்து தனக்கான புதிய கருத்தியல் வடிவம் கொண்டு விடுகிறாள்.
இவ்வுலகப் பரப்பில் பாதிக்கு மேலாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களை இப் புதியவள்களாக கண்டெடுக்கும் முயசியின் பெயர் “ ஊடறு”.
அதே பொழுதில் எக்காரியமாயினும் அறம் பேணுதலை முதன்மையிடத்தில் கொண்டு ஊடறு இயங்குகிறது. 2014 சனவரி 3, 4 ஆகிய தேதிகளில் சென்னைப் பல்கலைக் கழக தமிழரங்கில் ஊடறுவின் ’பெண்கள் சந்திப்பும் தமிழ்த் துறையும்’ இணைந்து நடத்திய இரு நாள் கருத்தரங்கு சான்று.
’ஊடறு’-வின் முன்னெடுப்புகளுக்கு அதன் பத்தாண்டுகளின் நிறைவில் இன்னொரு தோழமையின் வாழ்த்துக்கள்.
நன்றி: ஊடறு - 1 ஜூலை 2015
கருத்துகள்
கருத்துரையிடுக