கிபி அரவிந்தன் ஒரு கனவின் மீதி - நூல் மதிப்புரை கடிதம்


அன்பு நிறைந்தவர்கட்கு

வணக்கம்!!

தாங்கள் அனுப்பிய 'கனவின் மீதி' எனும் கி.பி.அரவிந்தன் நினைவுத் தொகுப்பு நூல் கிடைக்கப் பெற்றேன். பெரும் சிரத்தையுடன் தொகுப்பையும் அதன் பின்னர் தங்களால் தொடரும் பரவலாக்க முயற்சிகளையும் காணும்போது நன்றியுடன் இணைய வலையில் கை குலுக்குகிறேன். சீரான தொகுப்பாக நூல் அமையப்பட்டிருக்கிறது. தனது இறுதிவரை நூல்களையும் - நூல் வாசிப்பையும் - நூல் தொகுக்கும் அழகியலையும் நேசித்த கிபி அரவிந்தனுக்கு 'நூலாகவே" நினைவுக்கல் பொறித்திருக்கிறீர்கள்.

வாசிப்பை நேசிக்கும் வாசகனாய் தங்களது முயற்சி மிகுந்த பாராட்டுதல்களுக்கு உரியது. 70 களின் கடைசியில் சுந்தர் எனும் 'கனவாளன்' தமிழ் நாட்டுக் கரையில் கால் ஊன்றி சுமார் பத்தாண்டுகள் தொடர்ந்த பாதச் சுவடுகளை தமிழக மண் கண்டிருப்பதை சுமார் இருபத்தைந்து ஆண்டுகளின் பின்னர் தங்களது எழுத்துத் தொகுப்பு பதிவு செய்துள்ளது.

கரிசனையுடன் தாங்களும், தங்களைப் போன்ற நட்பினரும் மேற்கொண்ட இத்தகைய அரிய செயலுக்கு எனது மனமார்ந்த பாராட்டையும் நன்றியையும் தெரிவிக்கிறேன்.

வாழ்க வளமுடன்!

அன்பன்
முகிலன், பிரான்ஸ்.
03-11-2015

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

மலேயா கணபதி

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?