நனையாத கவிதைகள்

முழு ஆளை விழுங்கக்
காத்திருக்கிறது
வறண்ட நிலத்தில்
வாய்பிளந்த வெடிப்புகள்

தரைக்கு உள்ளேயும்
தலைக்கு மேலேயும் அனல்

தானாய் தனிக் கிணறு
பீய்ச்சியடிக்கிறது பம்ப்செட்;
தண்ணீர்த்தொட்டிப் பக்கம்
நல்லதொரு மயில்க் குஞ்சாய்
நனையாமல் தூங்கும்
என் கவிதைகள்

(சமூகத்தில் எல்லோர் மேலும் வீசியடிக்கிற காற்று இலக்கியவாதியையும் உணக்குகிறது. தன்னைச் சுற்றியும் தனக்குள்ளும் அதிர்வுகளைத் தருகிறது. இருந்தும் எந்த அதிர்வுகளும் தன் வீட்டு முற்றத்தில் விதைக்கப்படவில்லை என்றொரு பாவனை; வாழ்வைத் தனியாகவும், படைப்புலகத்தை தனியாகவும் பாதுகாத்துக் கொள்கிறவர்களுக்காக.)

- சூரியதீபன் ("எதிர்க் காற்று" கவிதை தொகுப்பு)

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

பா.செயப்பிரகாசம் நூல்கள்

நாம் எதிர்கொள்ளும் பண்பாட்டுச் சவால்கள்

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ