விழுந்த இடம்

நேற்றிருந்தார்
இன்று இறப்பார்
இன்று இருப்பார்
நாளை இறப்பார்

சாவழுக நேரமில்லை
அடக்கம் செய்ய எவருமில்லை
விழுந்த இடம் நடுகல்
ஈழப் போராளிகளுக்கு

இன்றுவரை புரியாதது
ஈழ நெருப்பை
எத்தனை தலைவர்கள்
எத்தனை விதமாக
கையிலெடுக்க முடியுமென்பது

தலைவாசலில் நிற்கிறது
தேர்தல்

- சூரியதீபன் ("எதிர்க் காற்று" கவிதை தொகுப்பு)

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

படைப்பாளியும் படைப்பும்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ