மூங்கிலும் பாம்பும்


மூங்கில் புதரின் அடியில் ஒரு பாம்புப் புற்று இருந்தது. பாம்புகள், மூங்கில் வழியே மேலேறி, பறவைகளைக் கடித்துக் கொன்றது. கூடுகள் பாழானது. பறவைகளின் சோக ஓலங்களால் காடு நிரம்பியது.

அவ்வழியே வந்து ஒரு பாடகன் மூங்கிலில் குழல் செய்து, அந்தச் சோகத்தை இசைத்தான். துயர இசை, காற்றுப்போல் எல்லா இடங்களிலும் இழைந்து கொண்டிருந்தது.

ஊர் மக்களை இசை இழுத்து வந்தது. அவ்வழியே சென்றவர்களையும் நிற்க வைத்தது, 'என்ன' என்று விசாரிக்க வைத்தது. ஆடுகள் ஒட்டி வந்த இடையன் சொன்னான் "மூங்கிலால் புல்லாங்குழல் மட்டுமல்ல: ஆயுதமும் செய்வோம்."

அவர்கள் மூங்கிலை வெட்டித் தறித்து, கூர்மையாக்கி, ஆயுதமாகப் பிடித்துக் கொண்டார்கள். புற்றின் வாய்களில் திணித்து விஷக் கூட்டத்தைத் தீர்த்துக் கட்டினார்கள்.

- சீன உருவகக் கதை
- ஆங்கிலத்திலிருந்து: சூரியதீபன்
- மனஓசை

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

மலேயா கணபதி

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌