எழுதிய கை

கண்ணுக்குத் தெரியாமல்
சடசடக்கிறது மழை
இரவு
காதுகளில் இசை.

கொடிபோல் மேலேறி
வேர்போல் கீழோடும்
அலையாய் உச்சி தாவி
நதியாய் உள்ளடங்கும்;
ஏற்ற இறக்கமாய்
இசைப் பிர்காக்கள்.

புழுக்கம் பெருகி
முத்து முத்தாய் வியர்த்து
மூளைக்குள் ஊழி.
சிந்தனை வெப்பம் தணித்து
தண்ணீர் புரள அடிக்கும்
எழுத்து மழை.

- சூரியதீபன், நதியோடு பேசுவேன் (2003)

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

படைப்பாளியும் படைப்பும்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ