எழுத்தாளர் பா.செயப்பிரகாசத்திற்கு எதிரான ஜெயமோகனின் அவதூறுக்கு அனைத்து தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிஞர்களின் கண்டன அறிக்கை


07 ஜூன் 2020
தமிழின் முதுபெரும் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் மீது தனது இணையப் பக்கத்தில் ஜெயமோகன் செய்துள்ள துல்லியத் தாக்குதல் மிக மோசமானது, உள்நோக்கமுடையது. தமிழின் கலை இலக்கியப் பண்பாட்டுச் சூழலில் காத்திரமான பங்களிப்பு செய்துள்ள அவரை, ஒரு அநாமதேயக் கடிதம் மூலம் அவதூறு செய்யவும், சிறுமைப்படுத்தவும் ஜெயமோகன் மேற்கொண்டுள்ள இழிசெயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.



கரிசல் இலக்கியத்தில் வேர்பதித்து எழுத்தைத் தொடங்கினாலும், எல்லைகள் கடந்த சமதர்ம சமுதாயம் நோக்கி கிளை பரப்பியவர் பா.செயப்பிரகாசம். ஏறத்தாழ 135 சிறுகதைகள், பள்ளிக்கூடம், மணல் என்னும் இரு நாவல்கள், மூன்று குறு நாவல்கள், இரு கவிதைத் தொகுப்புகள், பதினான்கு கட்டுரை நூல்கள், இலக்கிய, சமுதாய அரங்குகளில் உரைகள் எனத் தொடர்ந்து இயங்கி வருகிறவர். சமீபத்திய‌ அவருடைய மணல் நாவல் வரை அவருடைய எந்த ஒரு எழுத்தும், உரையும் செயல்பாடுகளும் சாதிய உணர்வைத் தூண்டியதாக சின்னனஞ்சிறு கறுப்புப் புள்ளி அடையாளமும் கொண்டதில்லை; ஆனால் சாதிக்கொடுமைகளைச் சாடிய அவருடைய எழுத்துகள் கணக்கற்றவை. அவருடைய பள்ளிக்கூடம், மணல் ஆகிய இருநாவல்களுக்கும் சாதியத்தை எதிர்த்த அடிநாதம்தான் பேசுபொருள். பொருளியல், வாழ்வியல் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுத்தும் சிறுமைகள் பேசும் அவருடைய கதைகளின் ஆற்றலை எந்த ஒரு தேர்ந்த வாசகனும் உணர்ந்து கொள்ளமுடியும். அவர் தனது எழுத்துகளை என்றும் வணிகமாக்கியதில்லை.

1965 இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போரில் மாணவப் போராளியாய் முன்னின்று, தமிழகம் முழுமையும் போராட்டத்தை எடுத்துச் சென்றதால், இந்திய தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிருந்த பத்து மாணவர் தலைவர்களில் ஒருவர். தமிழ்த் தேசியம், ஈழம், மார்கசீயம், பெரியாரியம், அம்பேத்காரியம் குறித்த எழுத்துகளில் சமரசம் இல்லாப் போராளி. இலக்கியம், களப்போராட்டம் எனத் தொடர்ந்து பல தளங்களிலும் இயங்கி வருபவர். இப்படிப்பட்ட தமிழ் ஆளுமை மீது ஜெயமோகன் கோபப்படுவதும், பழி தூற்றுவதும் நமக்கு ஒன்றும் ஆச்சரியம் அளிக்கவில்லை. தொடர்ந்த தனது பேச்சுகளின் மூலமாக, எழுத்துகளின் மூலமாக சர்ச்சைகளை உருவாக்கி, தமிழ் அறிவுச்சூழலில் தான் ஒரு பேசுபொருளாக இருக்கவேண்டும் என்ற முனைப்பில் தனது பிம்பத்தைக் கட்டமைத்துக் கொண்டு வருகிறவர் ஜெயமோகன்.

தமிழ் அறிவுச்சூழலுக்கு மிகவும் அபாயகரமானது இந்தத் தொற்று நோய், இந்தப் போக்கு என்னும் ஒட்டுவாரொட்டி நோய் தமிழ் இலக்கிய, அறிவுச் சூழலில் கேடு பயப்பதும் கூட‌. ஜெயமோகனின் சமதர்மச் சிந்தனை எதிர்க்குரல், மார்க்சிய எதிர்ப்பு என்பது நாம் அறிந்த ஒன்று. அதற்கான எதிர்வினையைப் பல்வேறு தளங்களில் மிக அமைதியாக ஆற்றி வருகிறோம். எந்த ஆதாரங்களுமில்லாது, ஒரு அநாமதேயம் எழுதியதாக தனிநபர் மீதான வன்மம், அவதூறு என்பவை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கண்டனம் செய்யப்படவேண்டிய ஒன்று. அது சமூக அக்கறையுள்ள கலை, இலக்கிய, அறிவுச் சூழல், இடதுசாரிச் சிந்தனைகள், இயக்கங்கள், எழுத்துகள், செயற்பாடுகள் அனைத்தின் மீதான அவதூறு என்பதால் ஜெயமோகனுக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கிறோம்.

கண்டன அறிக்கைக்கு ஒப்புதல் தெரிவித்திருக்கும் எழுத்தாள‌ர்கள், கலைஞர்கள், அறிஞர்கள்:

எஸ்.வி.ராஜதுரை, எழுத்தாளர்
கோவை ஞானி, எழுத்தாளர்
பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்
தோழர் தியாகு, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
இரவிக்குமார்,எழுத்தாளர், நாடாளுமன்ற உறுப்பினர்,
ச. தமிழ்ச்செல்வன், கௌரவத் தலைவர், த.மு.எ.க.ச.
ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர், த.மு.எ.க.ச
சு.ராமச்சந்திரன், மாநிலப் பொருளாளர், த.மு.எ.க.ச.
சி.சொக்கலிங்கம், மாநிலத் தலைவர், க.இ.பெருமன்றம்,
இரா.காமராசு, பொதுச்செயலாளர், . க.இ. பெருமன்றம்
ப.பா.ரமணி, மாநிலப் பொருளாளர், க.இ. பெருமன்றம்
எல்லை சிவகுமார், க.இ.பெருமன்றம், புதுச்சேரி,
பேராசிரியர் வீ.அரசு
சிகரம் செந்தில்நாதன், வழக்கறிஞர்
மீ. தா.பாண்டியன், தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம்
பொதியவெற்பன், எழுத்தாளர்,
கண.குறிஞ்சி, சமூகச் செயற்பாட்டாளர்,
செ.சண்முகசுந்தரம், தஞ்சை இலக்கியவட்டம்
பொ.வேல்சாமி, ஆய்வாளர், எழுத்தாளர்
முனைவர் ராமசாமி, முன்னாள் துணைவேந்தர்
பேராசிரியர் சரஸ்வதி
பேராசிசிரியர் கல்விமணி, சமூகச்செயற்பாட்டாளர்
பேராசிரியர் சிவகுமார்
பேராசிரியர் கோச்சடை
பேராசிரியர் க.பஞ்சாங்கம்
தோழர் பிரேம், கவிஞர், எழுத்தாளர்
பேராசிரியர் பா.மதிவாணன்
பேராசிரியர் அரச முருகுபாண்டியன்
பேராசிரியர் சு.மாதவன்
பேராசிரியர் பி.பாலசுப்பிரமணியம்
பேராசிரியர் பாரதிபுத்ரன்
யமுனா ராஜேந்திரன், விமர்சகர், எழுத்தாளர்
கண்ணன், காலச்சுவடு பதிப்பகம்
சைலஜா, வம்சி பதிப்பகம், எழுத்தாளர்
மு.வேடியப்பன்,டிஸ்கவரி புக் பேலஸ்,
பிரளயன், நாடகவியலாளர்
பேரா.பார்த்திப ராஜா, நாடகவியலாளர்
பெருமாள் முருகன், எழுத்தாளர்
நா.விச்வநாதன், எழுத்தாளர்
ஆயிஷா நடராஜன், எழுத்தாளர்
பசு.கவுதமன், எழுத்தாளர்
அமரந்தா, எழுத்தாளர்
சுகுமாரன், ஆசிரியர், காலச்சுவடு
களந்தை பீர்முகமது, இணை ஆசிரியர், காலச்சுவடு,
வி.முத்தையா, ஆசிரியர், காக்கைச் சிறகினிலே,
க.சந்திரசேகரன், பொறுப்பசிரியர், காக்கைச் சிறகினிலே,
இரா.எட்வின், எழுத்தாளர், காக்கைச் சிறகினிலே,
கவிஞர் அறிவுமதி
மயிலை பாலு, ஊடகவியலாளர்
பி.என்.எஸ்.பாண்டியன், ஊடகவியலாளர்
மகேஷ், ஊடகவியலாளர்
மு.பாலசுப்ரமணியம், துணைத்தலைவர்,
புதுவைத் தமிழ்ச் சங்கம்.
அழகியபெரியவன், எழுத்தாளர்
அன்பாதவன், எழுத்தாளர்
எஸ்.வி.வேணுகோபால், சமூகச் செயற்பாட்டாளர்,
பி.எஸ்.அஜிதா, வழக்குரைஞர்
வாசுகி பெரியார், சமூகச் செயற்பாட்டாளர்,
மணவை ஆ. தமிழ்மணி, வழக்குரைஞர்
கவிஞர் மாலதிமைத்ரி
கவிஞர் சுகிர்தராணி,
கவின்மலர், எழுத்தாளர்
திருமிகு. மணிமொழி, எழுத்தாளர், வழக்குரைஞர்
ம.ஆ.சிநேகா, வழக்குரைஞர், சமூகச் செயற்பாட்டாளர்
நவீனா, எழுத்தாளர்
ஜமாலன், எழுத்தாளர்
புஷ்பராணி, எழுத்தாளர்
இரா. முருகவேள், எழுத்தாளர்,
லஷ்மி சரவணக்குமார், எழுத்தாளர்
அப்பணசாமி, எழுத்தாளர்
இரா.மோகன்ராஜன், எழுத்தாளர்
பாட்டாளி, எழுத்தாளர்
சுதீர் செந்தில், ஆசிரியர் உயிர் எழுத்து
முகுந்தன் கந்தையா, எழுத்தாளர், பாரீஸ்,பிரான்ஸ்,
சண். தவராஜா, எழுத்தாளர், சுவிட்சர்லாந்து,
குணா கவியழகன், எழுத்தாளர்,நெதர்லேந்து,
ரூபன் சிவராஜா, எழுத்தாளர், நோர்வே
கலா மோகன், எழுத்தாளர், பாரீஸ்,பிரான்ஸ்,
கார்வண்ணன், இலக்கியச் செயற்பாட்டாளர், பாரீஸ், பிரான்ஸ்,
ச.மிக்கேல்தாஸ், தென்மோடிக் கூத்துக் கலைஞர்,கனடா,
ச.ஜெயராஜா, தென்மோடிக் கூத்துக் கலைஞர், நோர்வே,
கவிஞர்இரா.தெ. முத்து, எழுத்தாளர்
நாறும்பூநாதன், எழுத்தாளர்
மணிமாறன், எழுத்தாளர்
தங்க.செங்கதிர், ஆசிரியர், மானுடம் இதழ்
த.ம.பிரகாஷ், ஆசிரியர், உழைப்பவர் ஆயுதம்
நீலகண்டன், கருப்புப் பிரதிகள்
பாரதிநாதன், எழுத்தாளர்
புலியூர் முருகேசன், எழுத்தாளர்
தளவாய் சுந்தரம், ஊடகவியலாளர்
சுகுணா திவாகர், ஊடகவியலாளர்
மரு.ஆமினா இன்குலாப், இன்குலாப் அறக்கட்டளை
எஸ்.கே.கங்கா, எழுத்தாளர்
கடங்கநேரியான், கவிஞர்
சம்சுதீன் ஹீரா, எழுத்தாளர்
எச்.பீர்முகம்மது, எழுத்தாளர்
வி.உ.இளவேனில், கவிஞர்
ஏர் மகாராசன், ஆய்வாளர், மக்கள் தமிழ் ஆய்வரண்
கருப்பு கருணா, எழுத்தாளர்,
கருப்பு அன்பரசன், எழுத்தாளர்,
சுந்தர், பதிப்பாளர்
லஷ்மி சிவக்குமார், எழுத்தாளர்
அண்டனூர் சுரா, எழுத்தாளர்
மு.சிவகுருநாதன், கல்வியாளர்,
அகிலா கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர்
வெ.ஜீவக்குமார், வழக்கறிஞர்
களப்பிரன், கவிஞர்
துவாரகா சாமிநாதன், கவிஞர்
முஜிபுர் ரஹ்மான், எழுத்தாளர்
துரை குணா, எழுத்தாளர்
குமரன்தாஸ், எழுத்தாளர்
புதியமாதவி சங்கரன், எழுத்தாளர்
கதிர்நம்பி, தொ.ப வாசகர் வட்டம்
வே.சங்கர்ராம் , நாடகவியலாளர்.
கவிஞர் நந்தலாலா.
திருப்பூர் குணா, பொன்னுலகம் பதிப்பகம்
தமிழ்நதி, எழுத்தாளர்
ஆர்.பாலகிருஷ்ணன், மொழிபெயர்ப்பாளர், விமர்சகர்
கவிஞர் இரவி குமாரசாமி
பிர்தவ் ராஜகுமாரன், எழுத்தாளர்
வெளி ரங்கராஜன், நாடகவியலாளர்
கவிவளநாடன்
முத்தையா நமச்சிவாயம்
கே. ஜீவபாரதி, எழுத்தாளர்
கி.வே. பொன்னையன், தற்சார்பு விவசாயிகள் சங்கம்
அய்யாவு ஜெயராமன்
டிராட்ஸ்கி மருது, ஓவியர்
ஆனந்தகுமார், சுற்றுச்சூழல் ஆர்வலர்
குரு, இணை இயக்குநர், திரைத்துறை
பத்மநாதன் ரஞ்சனி, பெண்ணியச் செயற்பாட்டாளர்
மு. புஷ்பராஜன், எழுத்தாளர்
கவிஞர் ஜெயதேவன்
உமா மோகன், எழுத்தாளர்
நிலவுமொழி செந்தாமரை, வழக்கறிஞர்
செந்தில்குமார் குலவை
விஜய் எம்.குமார்
உலகநாதன் கண்ணையா
நா.ராமச்சந்திரன், எழுத்தாளர்
கே.தினகரன், இணை இயக்குநர்
கு.ப.குப
சாளை பசீர்
மணலி அப்துல்காதர்
யாழினி முனுசாமி
எம்.அரியநாயகம், நாடக நேசர்
நாகு அன்பழகன், எழுத்தாளர்
ரஞ்சகுமார், சோமபாலா
முஸ்டீன் இஸ்மாயில்
இரவி கார்த்திகேயன்
ரவீந்திரன் நடேசன்
கரண் பிரபா
ப.கவிதா, பத்திரிகையாளர்
கௌதம சித்தார்த்தன், எழுத்தாளர்
புகழேந்தி, ஓவியர்
ஜி.குப்புசாமி, மொழிபெயர்ப்பாளர்
சுப்ரபாரதி மணியன், எழுத்தாளர்
இராசேந்திரசோழன், எழுத்தாளர்
மணி மதிவாணன்
கவிஞர் கலாப்ரியா
இளஞ்சேரல் ராமமூர்த்தி
வெ. ஜீவகிரிதரன், வழக்கறிஞர்
சுனந்தா சுரேஷ்
கான் மஜித்
பேராசிரியர் கருணாநிதி
பேராசிரியர் செல்வி மனிதி
பேராசிரியர் சிவக்குமார்
கவிஞர் இக்பால்
சிவன், ஓவியர்
அபிமானி, எழுத்தாளர்
திருநாவுக்கரசு, நண்பர்கள் தோட்டம்
ஷாஹிதா, எழுத்தாளர்
உக்கிரபாண்டி, எழுத்தாளர்
கவிஞர் பானுபாரதி
தமயந்தி, எழுத்தாளர், நார்வே
சிவக்குமார் மோகனன், திரைத் துறை
ஜா.மாதவராஜ், எழுத்தாளர்
கவிஞர் நா.முத்துநிலவன்
ஜெயகாந்தன் சார்வாகன், மொழிபெயர்ப்பாளர்
அ.குமரேசன், ஊடகவியலாளர்
தெ.மதுசூதனன், எழுத்தாளர், யாழ்ப்பாணம்
காலபைரவன், எழுத்தாளர்
கு.அ.தமிழ்மொழி, எழுத்தாளர்
புதுவைத் தமிழ்நெஞ்சன், செயலர், புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகம்



ஜெயமோகனுக்கு எழுத்தாளர்கள் கண்டனம்
எழுத்தாளர் ஜெயமோகன் அவருடைய இணையதளத்தில், ‘ஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்’ என்ற தலைப்பில் ஒரு அநாமதேயக் கடிதத்தைப் பிரசுரித்திருந்தார்.

இடதுசாரி இயக்கங்கள் மீதும், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் மீதும் அந்தக் கடிதம் கடும் விமர்சனத்தை வைத்திருக்கிறது. எவ்வித ஆதாரமும் உண்மையும் இல்லாத இந்தத் கடிதத்தின் வழியாக ஜெயமோகன் வன்மத்தை வெளிப்படுத்துகிறார் என்று கடுமையாக எதிர்வினையாற்றி, பொதுவெளிக்கு விவாதத்தைக் கொண்டுவந்தார் பா.செயப்பிரகாசம்.

ஜெயமோகனின் இந்தச் செயல் தமிழக அறிவிஜீவிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பெயர் குறிப்பிடாமல் அவதூறுகள் நிரம்பிய கடிதத்தைப் பிரசுரித்திருப்பதற்கு ஜெயமோகனே பொறுப்பு என்றும், இந்தக் காரியத்தை அவர் எப்போதும் செய்துவருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கண்டித்து, தமிழகத்தின் நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் கண்டனக் கடித்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறார்கள்.

- இந்து தமிழ் (07 ஜூன் 2020)


எழுத்தாளா் ஜெயமோகனின் வலைதள பதிவு: முன்னாள் எம்எல்ஏ கண்டனம்

எழுத்தாளா் ஜெயமோகனின் வலைதள பக்கத்தில் ‘ஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்’ என்ற தலைப்பில் வெளியான பதிவில் எழுத்தாளா் பா. ஜெயப்பிரகாசம் குறித்த பதிவு தவறானது என முன்னாள் எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து விளாத்திகுளம் முன்னாள் எம்எல்ஏவும், கரிசல் வாசகா் வட்ட ஒருங்கிணைப்பாளருமான ஜீ.வி.மாா்க்கண்டேயன் வெளியிட்ட அறிக்கை: கடந்த மே 29ஆம் தேதி எழுத்தாளா் ஜெயமோகனின் வலைதள பக்கத்தில் வாசகா் கடிதம் என்ற பகுதியில் பெயா் குறிப்பிடாமல் ஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம் என்ற தலைப்பில் ஒரு பதிவு வெளியாகியுள்ளது.
அதில் எழுத்தாளா் பா. ஜெயப்பிரகாசம் மீதான விமா்சனம் முற்றிலும் அறமற்ாக உள்ளது. பா. ஜெயப்பிரகாசம் பள்ளியிலும், கல்லூரியிலும் படிக்கும் போதே மொழிக்காக சிறை சென்ற மாணவா் தலைவா். பல மொழிகளில் புலமையானவராக இருந்த போதும், தமிழை ஆழமாக நேசிப்பவா். அடித்தட்டு மக்கள் குறித்தும், அவா்களது உரிமைகள், கருத்துகள் குறித்தும் எழுதி வருபவா். என்றுமே அவா் பண்ணை முதலாளிகள், ஜாதி, மத அடையாளங்கள் பக்கம் இருந்ததில்லை.

எங்கெல்லாம் தீா்க்கப்படாத பிரச்னைகள் இருக்கிறதோ அங்கெல்லாம் அந்த பிரச்னைகளுக்கு தனது கருத்துகளை ஆழமாகவும், அழுத்தமாகவும் சொல்லக்கூடிய படைப்பாளி. அவா் மீது எவ்வித முகாந்திரமும் இல்லாமல் அவதூறான கருத்துகளை பதிவிட்ட ஜெயமோகனின் செயல் அறமற்றது, கண்டனத்துக்குரியது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- தினமணி 07 June 2020



கலை இலக்கியப் பெருமன்றம் (முக நூல் - 4 ஜூன் 2020)
எழுத்தாளர் ஜெயமோகனுக்குக் கண்டனம்

தமிழகத்தின் முன்னோடி இலக்கிய ஆளுமைகளுள் ஒருவரும் கரிசல் மண்ணிலிருந்து உருவான எழுத்தாளருமான பா. செயப்பிரகாசம் குறித்து தன்னுடைய இணையதளத்தில் அவதூறு செய்திருக்கும் ஜெயமோகனுக்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கண்டனத்தைப் பதிவு செய்துகொள்கிறது.

“ஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்” என்னும் தலைப்பிலான
அந்தக் கடிதம் இடதுசாரிகள் மீதான வன்மத்தை செலுத்துவது என்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டது.

இந்தப் பதிவின் ஒரு பகுதி தோழர் பா. செயப்பிரகாசம் அவர்களைத் திட்டமிட்டு குறிவைத்து அவதூறு செய்கிறது.

தனக்கு வந்தக் கடிதத்தை அப்படியே பதிவேற்றம் செய்துள்ளேன் என்று ஜெயமோகன் இந்தக் கடிதத்தை நியாயம் செய்யலாம். ஜெயமோகன் சொல்வது போல் அவருக்கு வந்தக் கடிதமாக அது இருந்தால்கூட அதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களின் உண்மைத்தன்மையைக் குறித்து ஆராயாமல் அதை அப்படியே பிரசுரிக்கலாமா?
ஜெயமோகனின் இந்தப் பதிவேற்றம் என்பது இடதுசாரிகள், முற்போக் காளர்கள் அந்தத் தளத்தில் இயங்கக் கூடிய எழுத்தாளர்கள், கலைஞர்கள்மீது அவர் கொண்டிருக்கும் காழ்ப்பின் வெளிப்பாடு என்பதைத்தான் உணர்த்தி நிற்கிறது.

தனிமனித ஆளுமைகள் மீது அவதூறு பரப்பும் ஜெயமோகனின் இத்தகையச் செயலை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வன்மையாகக் கண்டனம் செய்கிறது.

ஜெயமோகன் போன்ற அவதூறுபரப்பி குறித்து தோழர் பா. செயப்பிரகாசம் அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் துணை நிற்கும்.

நியாயங்களுடன் எப்போதும் உடன் நிற்போம்

சி.சொக்கலிங்கம், மாநிலத் தலைவர்
இரா.காமராசு, மாநிலப் பொதுச்செயலாளர்
ப.பா.ரமணி, மாநிலப் பொருளாளர்


எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் மீதான ஜெயமோகனின் அவதூறு கண்டனத்துக்குரியது - எச்.ஹாமீம் முஸ்தபா

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

"இருளுக்கு அழைப்பவர்கள்” ஒரு பாவப்பட்ட மலை சாதிப் பெண்ணின் கதை

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ

பா.செயப்பிரகாசம் நூல்கள்

பா.செயப்பிரகாசம் அஞ்சலி - ச.தமிழ்ச்செல்வன்

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்