மலேயா கணபதி
முதுபெரும் பொதுவுடமைக் கட்சித் தோழர் கே.டி.கே.தங்கமணி மலேசியாவில் பல்வேறு பிரச்சாரக் கூட்டங்களை முடித்துக் கொண்டு, இந்தியாவுக்குக் கப்பல் ஏறுகிறார். கப்பல் ஏறுகிற நேரத்தில் அவர் முன்னே ஆயுதம் தாங்கிய தோழர்கள் செவ்வணக்கம் செலுத்தி விடை தருகின்றனர். செவ்வணக்கத்தை ஏற்றுக் கெண்டு “நீங்கள் யார்” எனக் கேட்கிறார் கே.டி.கே. அதற்கு அவர்கள் பதில் “தங்கள் பாதுகாப்புப் பணிக்காக, மலேயா கம்யூனிஸ்டு கட்சி நியமித்த கொரில்லாக்கள்". ஒரு தோழரின் உயிர், உடல் அகில உலகத்துக்கு மட்டுமல்ல, நான்கு கோடித் தமிழர்களுக்கும் பத்திரமாக திருப்பி ஒப்படைக்கிற, இந்த பாதுகாப்புக் கவசத்தின் சூத்ரதாரி கணபதி. தீண்டாமை என்பது ஓட்டுவார் ஒட்டி நோய். காசம் (சயரோகம்), சொறி, சிரங்கு, படை போன்ற நோய்களுக்கு இந்தக் குணம் உண்டு. தமிழ்நாட்டிலிருந்து மலேயா, சிங்கப்புர், ரங்கூன் சென்ற தமிழர்கள், தங்களுடன் இந்த தீண்டாமை நோயையும் இடுக்கி கொண்டு சென்றார்கள். தமிழகத் தேநீர்க் கடைகளில் தனித் தம்ளர்கள் என்றால் மலேயாவில் தனித் தகர டப்பாக்கள். தாழ்த்தப்பட்ட மக்களின் கண்ணீரின் உப்பு,...
கருத்துகள்
கருத்துரையிடுக