அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க விடமாட்டோம் - செயற்பாட்டாளர்கள் கையெழுத்திட்டு எதிர்ப்பு பதிவு


அண்ணா பல்கலைக் கழக நிர்வாகமே! தமிழகத்தின் பெருமைக்குரிய அண்ணா பல்கலைக் கழகத்தை இரண்டாகப் பிரித்துச் சீரழிக்கும் முயற்சியை நிறுத்து!

மத்திய அரசே! “உயர் சிறப்புப் பல்கலைக் கழகங்கள் (Institution of Eminence – IoE) என இந்திய அளவில் 20 பல்கலைக் கழகங்களை மட்டும் அறிவித்து மற்ற நூற்றுக் கணக்கான பல்கலைக் கழகங்களில் படிக்க நேரும் ஏழை எளிய மாணவர்களை இரண்டாம் தர மூன்றாம் தர மக்களாக ஆக்கும் கொடுமையை நிறுத்து!

மத்திய அரசே! இப்படி உயர்கல்வி நிறுவனங்களைத் தரம் பிரித்து ஏற்றத் தாழ்வான மூன்றடுக்கு நிலை ஏற்படுத்துவதைக் கைவிடு!

மாநில அரசே! இன்னும் கல்வி என்பது மத்திய – மாநிலப் பட்டியலில்தான் உள்ளது என்பதை மறவாதே! மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசைச் சூரப்பா போன்ற துணைவேந்தர்கள் அவமானப் படுத்துவதையும், தமிழக மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்கு உள்ளாக்குவதையும் உறுதியாக எதிர்த்து நில்!

பெற்றோர்களே! பொதுமக்களே! ஆசிரியர்களே! மாணவர்களே! பெருமைக்குரிய அண்ணா பல்கலைக் கழகம் இவ்வாறு இரண்டாகப் பிரிக்கப்படுவதை உறுதியாக நின்று எதிர்ப்பீர்!. அண்ணா பல்கலைக்கழகத்தைக் காப்போம்” என்று தெரிவித்துள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க விடமாட்டோம் என 70-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், செயற்பாட்டாளர்கள் கையெழுத்திட்டு தங்களின் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர்.

  1. முனைவர் மு. அனந்தகிருஷ்ணன், மேனாள் துணைவேந்தர், அண்ணா பல்கலைக்கழகம்
  2. முனைவர் வே. வசந்தி தேவி, மேனாள் துணைவேந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
  3. முனைவர் ச. சீ. ராஜகோபாலன், மேனாள் ஆட்சிமன்ற உறுப்பினர், சென்னை பல்கலைக்கழகம்
  4. பேராசிரியர் அனில் சட்கோபால், மேனாள் தலைவர், கல்வியியல் துறை, தில்லி பல்கலைக்கழகம்
  5. நீதி அரசர் அரிபரந்தாமன், உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு), சென்னை
  6. முன்னைவர். எஃப்.டி.ஞானம், முன்னாள் பேராசிரியர், அண்ணா பல்கலைக் கழகம்
  7. பு.பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு, பொதுச் செயலாளர், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை
  8. மருத்துவர் சீ.ச.ரெக்ஸ் சற்குணம், மேனாள் இயக்குநர் மற்றும் கண்காணிப்பாளர், குழந்தை மருத்துவ நிறுவனம் மற்றும் அரசு குழந்தைகள் மருத்துவமனை, எழும்பூர், சென்னை
  9. பேராசிரியர் சோ. மோகனா, மேனாள் தலைவர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
  10. பேராசிரியர் ச. மாடசாமி, கல்வியாளர் – எழுத்தாளர்
  11. முனைவர் பி. இரத்தினசபாபதி, ஆற்றுநர், தமிழக கல்வி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம்
  12. திரு. ஐ.பி.கனகசுந்தரம், மேனாள் முதல்வர், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம், திரூர்
  13. முனைவர் ப. முருகையன், மேனாள் முதல்வர், சிவந்தி கல்வியியல் கல்லூரி, குன்றத்தூர்
  14. முனைவர் வாசு அறிவழகன், ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைந்த இந்திய மக்கள் மன்றம்
  15. பேராசிரியர் K. இராஜூ, ஆசிரியர், “புதிய ஆசிரியன்” மாத இதழ்
  16. பேரா.வீ.அரசு, மேநாள் தமிழ்த் துறைத் தலைவர், சென்னை பல்கலைக் கழகம்
  17. பேரா. பா.கல்விமணி, கல்வி மேம்பாட்டுக் கழகம், திண்டிவனம்
  18. பேரா சு. இராமசுப்பிரமணியன், முன்னாள் அரசு கல்லூரிப் பேராசிரியர், அறிவியல் எழுத்தாளர்
  19. பேரா. எஸ்.சங்கரலிங்கம், முன்னாள் அரசு கல்லூரிப் பேராசிரியர், சென்னை
  20. கண்ணன், மாணவர் தலைவர், SFI
  21. சேகர் கோவிந்தசாமி, முதுநிலை பொறியியல் ஆலோசகர், சென்னை
  22. மு.சிவகுருநாதன், கல்வியாளர், திருவாரூர்
  23. கோ.சுகுமாரன், மனித உரிமைச் செயற்பாட்டாளர், புதுச்சேரி
  24. முருகப்பன், நகரக் கல்வி மேம்பாட்டுக் குழு, திண்டிவனம்
  25. இரா காமராசு, தமிழ்தேசியசிந்தனையாளர், பாப்பாநாடு, தஞ்சாவூர்
  26. முகம்மது சிராஜுதீன், நூல் வெளியீட்டாளர், சென்னை
  27. முனைவர் இரா. முரளி, மாநில அமைப்பாளர், தமிழ்நாடு உயர்கல்வி பாதுகாப்பு இயக்கம், மதுரை
  28. ஜெ.கிருஷ்ணமூர்த்தி, செயலர். பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம்
  29. பேரா. சே.கோச்சடை. மேநாள் அரசு கல்லூரிப் பேராசிரியர், காரைக்குடி
  30. பேரா. சங்கர சுப்பிரமணியம், தலைவர், முன்னாள் அரசு கல்லூரி ஆசிரியர் மன்றம், சேலம்
  31. பேரா. மு.திருமாவளவன், மேநாள் முதல்வர், அரசு கல்லூரி, வியாசர்பாடி
  32. தினேஷ் சீரங்கராஜ், மாநில செயலாளர், அனைத்திந்திய மாணவர் மன்றம், AISF
  33. த.கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர், புரட்சிகர மாணவர் இயக்கம்
  34. அப்துல் ரஹ்மான், மாணவர் தலைவர், கேம்பஸ் ஃஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, தமிழ்நாடு
  35. சு.பொ.அகத்தியலிங்கம், மார்க்சிஸ்ட் கட்சி, பெங்களூரு
  36. ஞா.தியாகராஜன் MA, மதுரை
  37. அ.லியாகத் அலி கலீமுல்லாஹ், எழுத்தாளர், கோட்டகுப்பம், புதுச்சேரி
  38. மரு.ச.இராசேந்திரன், சென்னை
  39. பொதியவெற்பன். கவிஞர், எழுத்தாளர், கோவை
  40. எஸ்.கே. நவ்ஃபல், மனித உரிமைச் செயல்பாட்டாளர், கோவை
  41. முனைவர் ரவீந்திரன் ஸ்ரீராமசந்திரன், பேராசிரியர் மானுடவியல் துறை, அசோகா பல்கலைக்கழகம்
  42. சுபகுணராஜன், எழுத்தாளர், பதிப்பாளர், சென்னை
  43. மீனா, ஆசிரியை, திருவண்ணாமலை
  44. அ.மகபூப் பாட்சா, மேலாண்மை அறங்காவலர், சோக்கோ அறக்கட்டளை, மதுரை
  45. மணலி அப்துல் காதர், சமூக செயற்பாட்டாளர்,திருத்துறைப்பூண்டி
  46. ப.விஜயலட்சுமி, முன்னாள் இயற்பியல் பேராசிரியை. கும்பகோணம்
  47. எஸ்.ராமன், பொதுச்செயலாளர், காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம், வேலூர் கோட்டம்
  48. அ.கமருதீன், வழக்கறிஞர், திருச்சி
  49. ௭ஸ்.௭ரோணிமுஸ், கல்வியாளர், திருச்சி
  50. ந.செயச்சந்திரன், கல்லூரி நூலகர்(ஓய்வு) திருச்சிராப்பள்ளி
  51. சுரேஷ் குமார் சுந்தர், தமிழ்த்தேச முன்னணி, திருச்சி
  52. ஞா.தியாகராஜன் MA. மதுரை
  53. எஸ்.சுகுபாலா, அகில இந்திய ஜனநாயக மாணவர் சங்கம், AIDSO
  54. த.பால அமுதன் மாநில அமைப்பாளர், அகில இந்திய மாணவர் கழகம், AISA
  55. பேரா. P. விஜயகுமார், Indian School of Social Sciences, Madurai Chapter
  56. பேரா. பொன்னுராஜ் வழித்துணைராமன், மதுரை
  57. சுவாமிநாதன் ராமன், காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கம், பொதுச் செயலாளர், வேலூர்
  58. ஸ்வகீன் எரோனிமஸ், கல்வியாளர், திருச்சி
  59. பீட்டர் துரை ராஜ், சிந்தனையாளர் பேரவை, பல்லாவரம்
  60. ராஜேந்திரன் ஷண்முகம், ௭ஸ். ௭ரோணிமுஸ், கல்வியாளர், திருச்சி
  61. செந்தில்குமார், முன்னாள் மாணவர் கிண்டி பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர்
  62. இரா. செங்குட்டுவன், முதல்வர் (பொ), மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், ஆடுதுறை. தஞ்சாவூர் மாவட்டம்
  63. ச.பாண்டியன், பன்மை சமூக ,கலை, இலக்கிய ஆய்வு வட்டம் , திருத்துறைப்பூண்டி
  64. க.முரளி, தகவல் தொழில்நுட்பத் துறை, சென்னை
  65. பரிமளா, President, Forum for IT-ITES Employees, Tamilnadu
  66. ஸ்ரீராம் கிருஷ்ணன் , சமூக ஆர்வலர் , சென்னை
  67. அ.பசுபதி, பெரம்பூர், புதுக்கோட்டை மாவட்டம்
  68. ஜெ. உமா மகேஸ்வரன், கணினி மென்பொருள் பொறியாளர், பரமக்குடி
  69. அருள்மொழி. வழக்கறிஞர், சென்னை
  70. டாக்டர் அரச முருகுபாண்டியன், பேராசிரியர் (ஓய்வு), தரங்கம்பாடி TBML கல்லூரி, பள்ளத்தூர்
  71. டாக்டர் சந்திர மோகன் ,முன்னாள் முதல்வர், சேவுகன் அண்ணாமலை கல்லூரி தேவகோட்டை
  72. முனைவர். விஜய் ஈனோக், காருண்யா பல்கலைக் கழகம், கோவை
  73. மணிமாறன், ஆசிரியர், திருவாரூர்
  74. சகா. சசிக்குமார், ஆசிரியர், desamtoday.com
  75. அ.ஆலம். தமுமுக வழக்கறிஞர் அணி, திருச்சி
  76. சுரேஷ், தமிழ் தேச மக்கள் முன்னணி, திருச்சி
  77. பா.செயப்பிரகாசம், எழுத்தாளர், புதுச்சேரி
  78. இரா.தமிழ்க்கனல், இதழியலாளர், சென்னை

ஆகியோர் கையெழுத்திட்டு எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர். 

- அக்டோபர் 2020

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

"இருளுக்கு அழைப்பவர்கள்” ஒரு பாவப்பட்ட மலை சாதிப் பெண்ணின் கதை

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ

பா.செயப்பிரகாசம் நூல்கள்

பா.செயப்பிரகாசம் அஞ்சலி - ச.தமிழ்ச்செல்வன்

ஒரு இந்திய மரணம்‌ - சில படிப்பினைகள்