பங்குப்பெற்ற நிகழ்வுகள் 2006 - இந்தியா

அன்ரன் பாலசிங்கத்துக்கு சென்னையில் இரங்கல் கூட்டம் - செவ்வாய்க்கிழமை, 19 டிசம்பர் 2006

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவாசிரியருமான "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்துக்கு இரங்கல் தெரிவித்து சென்னையில் செவ்வாய்க்கிழமை, 19 டிசம்பர் 2006 அன்று கூட்டம் நடைபெற்றது. தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் "தேசத்தின் குரல்" மறைவு குறித்த இரங்கல் கூட்டம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள உலகத்தமிழர் பேரமைப்பு அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் குழுவின் ஒருங்கிணைப்பாளரும் தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவருமான பழ.நெடுமாறன், தமிழ்த் தேச பொது உடமை கட்சியைச் சேர்ந்த மணியரசன், புத்தக வெளியீட்டாளர் சச்சிதானந்தம், பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள், கவிஞர் காசியானந்தன் மற்றும் பலர் உரையாற்றினர்.

இந்நிகழ்வில் ஓவியர் சந்தானம், எழுத்தாளர் ஜெயபிரகாசம், தமிழக மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த குணசீலன், சட்டத்தரணி தமித்த லட்சுமி, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பத்திரிகையாளர் பகவான்சிங், வணிகர் சங்கத்தைச் சேர்ந்த சந்திரேசன் ஆகியோரும் "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்தைப் புகழ்ந்து உரையாற்றினர். ஓவியர் புகழேந்தி நன்றி தெரிவித்தார்.

நிகழ்வின் இறுதியில், "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்தைப் பற்றி காசியானந்தன் எழுதிய பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. முன்னதாக தேசத்தின் குரலின் உருவப்படத்தை பழ.நெடுமாறன் திறந்து வைத்தார்.




கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

மலேயா கணபதி

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?