தமிழக அரசியல் கட்சித் தலைவர்களுக்கு குவைத் வாழ் தமிழர்களின் அன்புக் கோரிக்கை

27-08-2011

பெறுநர்:
மருத்துவர் இராமதாசு, புரட்சிப்புயல் வைகோ, பழ.நெடுமாறன், எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன், செந்தமிழன் சீமான், தோழர்.தியாகு, பெ.மணியரசன், கொளத்தூர் மணி, மருத்துவர்.கிருட்டிணசாமி, ஜனாப்.ஜவாகிருல்லா, ஜனாப்.எசு.எம்.பாக்கர், தோழர்.ஜி.இராமகிருட்டிணன், தோழர்.தா.பாண்டியன், தோழர். நல்லக்கண்ணு, பொன்.இராதாகிருட்டிணன், கி.வீரமணி, வே.ஆனைமுத்து, அரிமாவளவன், சுப.வீரபாண்டியன், கண.குறிஞ்சி, பா.செயபிரகாசம், அமரந்தா, திருமுருகன், தமிழரைக் காப்போம் (சேவ் தமிழ்சு)..


வணக்கம்,

தமிழகத்தின் அனைத்துப் போராட்டங்களிலும் பல்வகைகளிலும் தங்களின் பங்களிப்புக்களை புலம் பெயர்ந்து வாழும் நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருவதோடு, இயன்ற அளவில் நாங்களும் பங்குகொண்டு வருகிறோம். அந்த வகையில், தமிழ்ச் சொந்தங்கள் மூவரின் விடுதலைக்கான தங்களின் போராட்டங்களை ஆதரிக்கும் அதே வேளையில், இக்கட்டான சூழ்நிலையை எட்டியிருக்கும் இவ்வேளையில், தாங்கள் அனைவரும் ஒரே இடத்தில், ஒரே மேடையில் அனைத்துத் தமிழ் உறவுகளையும் இணைத்துக்கொண்டு, சென்னையிலோ அல்லது வேலூர் கோட்டை முன்பாகவோ சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர வேண்டுமென, புலம் பெயர்ந்து வாழும் தமிழ்ச் சொந்தங்களின் சார்பில் வேண்டுகோள் வைக்கின்றோம். தொடர்ந்து, தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் இப்போராட்டத்தில் பங்கெடுப்பதோடு, பணிக்குச் செல்லாமல் புறக்கணித்தல், கடையடைப்பு, அமைதி ஊர்வலங்கள், உண்ணாவிரதம் என அனைத்துவிதமான அறவழிப் போராட்டங்களையும் முன்னெடுத்து, மூவரின் விடுதலையை உறுதிசெய்யக் கோருகிறோம்.

புலம்பெயர்ந்து வாழும் நாங்கள், என்றென்றும் தங்கள் போராட்டங்களை ஆதரிப்பதோடு இயன்ற அளவில் பங்காற்றுவோம் என்கிற உறுதிமொழியையும் இவ்வேளையில் தெரிவித்துக்கொள்கிறோம். ஊணுமில்லை உறக்கமுமில்லை, எம்மினச்சொந்தங்கள் விடுதலையாகும் வரை….

தமிழ்நாடன்,
மூன்று தமிழர்கள் விடுதலைக் கூட்டமைப்பு,

குவைத் கைபேசி: 00965-66852906,
thamizhnadan@gmail.com

குறிப்பு: புலம்பெயர் உறவுகளே!, மூவரின் தூக்குத்தண்டனையை நிறுத்தக்கோரி ஒரே மேடையில் அனைத்துத் தமிழகத் தலைவர்களும் உண்ணாவிரதம் இருக்க வலியுறுத்துங்கள், தமிழக முதல்வரை ஒன்றாகச் சென்று முறையிடக் கூறுங்கள். ஒவ்வொரு நொடிகளும் விலைமதிக்க முடியாதவை. ஒன்பதாம் தேதி தூக்கு என்று அறிவித்து அதற்கு முன்பே திடீரென தூக்கிலிட இந்திய வல்லாதிக்கம் முயல்கிறது. காலம் தாழ்த்தாதீர்கள்.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

மலேயா கணபதி

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?