உலகத் தமிழர் பேரமைப்புக்கு கடிதம்

19 அக்டோபர் 2022

மதிப்பிற்குரிய ஐயா,

உலகத் தமிழர் பேரமைப்பின் ஆட்சிக்குழு உறுப்பினராக என்னை  நியமித்துள்ள 5-10-2022 நாளிட்ட தங்கள் கடிதம் கிடைத்தது. இக்கடிதம் சென்னையில் முன்பிருந்த எனது பழைய முகவரிக்கு அனுப்பப்பட்டு, திருப்பப்பட்டு நேற்று கிடைத்தது. நான் சென்னையிலிருந்து போது தலை சுற்றலாகி வழுக்கி விழுந்து  இடது  தொடை எலும்பு முறிவாகி, மருத்துவமனையில் சேர்த்து கொஞ்சம் குணமடைந்து, பூர்விக ஊருக்கு (விளாத்திகுளம்) வந்துவிட்டேன். இப்போதும் லேசு லேசாய் கொஞ்ச தூரமே நடக்க இயலும். என்னால் மற்றவர் போல் சாதாரணமாய் நடக்க இயலாது. மாடிப் படி ஏற இயலாது. எங்கும் பயணம் செய்ய இயலவில்லை.

இந்நிலையில் என்னை ஆட்சிக்குழு உறுப்பினராக நியமித்து, அதற்குரிய  பணிகளை ஆற்ற முடியுமா எனத் தெரியவில்லை. தங்கள் முடிவுக்கே விடுகிறேன். யோசனை செய்து முடிவெடுங்கள்.

அன்புடன்,

பா.செயப்பிரகாசம்.


தற்போதைய எனது முகவரி: 

பா.செயப்பிரகாசம்,  கீழ்த்தளம்,     

132, பிரதான சாலை, அம்பாள் நகர்,

விளாத்திகுளம் - 628 907,  தூத்துக்குடி (மாவட்டம்)

பேசி: 94440 90186.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

மலேயா கணபதி

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

நாம் எதிர்கொள்ளும் பண்பாட்டுச் சவால்கள்

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

பா.செயப்பிரகாசம் நூல்கள்