“கவிஞனின் பணி கவிதை மட்டுமா? ஒரு போராட்டத்தை முன்னின்று நடத்தவும் வேண்டும்” - வியட்னாம் புரட்சியாளர் ஹோசிமின். “எழுத்தாளன் என்பவன் பழங்கால ஞானி போல் மனசாட்சியுடன் இயங்கவேண்டும்” - ஆப்பிரிக்க கென்ய எழுத்தாளர் கூகிவாதியாங்கோ. இவ்வாசகங்களின் சாட்சியாய் தமிழிலக்கியவாதிகளில் நான் கண்டவர் இருவர் - பாவலர் இன்குலாப், எழுத்தாளர் அஸ்வகோஷ் என்ற இராசேந்திரசோழன். எதுகை மோனைகளில் ‘அந்தர் பல்டி’ அடித்து, தனிமனிதத் துதிபாடும் எழுத்துக்களும், புராணப்புளுகுப் பேச்சுக்களும், வெட்டிப் பட்டிமன்றங்களும், மதியச் சாப்பாட்டுக்குப் பின்னான அரைத்தூக்க ஆராய்ச்சிகளும் கலை இலக்கியக் கொடியேற்றிப் பெருமிதம் கொண்டிருந்த நாட்களில் இவர்களுடைய வருகை நிகழ்ந்தது. ‘யாருக்கு கலை, இலக்கியம்? எந்த நோக்கத்திற்காக?’ என்ற திசைப் புறக்கணிப்புச் செய்து, ‘கலை கலைக்காக’ என்னும் கொள்கையில் மயிர் பிளக்கும் வாதங்களில் ஒரு பகுதியினர் மூழ்கிக் கொண்டிருக்கையில் இவர்கள் தோன்றினர். நிலம் பார்த்து நீர் வழங்கும் மழை மேகங்கள் போல் இவர்கள் பயணிப்பு நடந்தது. கவிதைகளில் தொடங்கினார் இன்குலாப்; கட்டுரை, பாடல், இதழியல் ஆசிரியர...
பா.செயப்பிரகாசத்தின் 51 ஆண்டு (1971 - 2022) கால படைப்பில் எழுதிய 141 சிறுகதைகள் 14 தொகுதிகளாகவும் மற்றும் 18 கட்டுரைத் தொகுப்புகள், 2 கவிதை தொகுப்புகள், 3 நாவல்கள், 2 மொழி பெயர்ப்பு நூல்கள், தொகுப்பாளராய் 15 நூல்கள் வெளிவந்துள்ளன. சிறுகதைத் தொகுப்புகள் 1. ஒரு ஜெருசலேம் - 1975, 1988 ஒரு ஜெருசலேம் (தாமரை இதழ், செப்டம்பர் 1972) அம்பலக்காரர் வீடு (டிசம்பர் 1972) குற்றம் (பா.செயப்பிரகாசத்தின் முதல் கதை, தாமரை 1971 மே மாத இதழில் வெளியானது.) பலிப் பூக்கள் கறுத்த சொப்னம் ஆறு நரகங்கள் (ஆகஸ்ட் 1973) புஞ்சைப் பறவைகள் இருளின் புத்ரிகள் (டிசம்பர் 1973) திறக்கப்படாத உள்ளங்கள் (மே 1973) வேரில்லா உயிர்கள் (நீலக்குயில் இதழ், ஜூன் 1974) சுயம்வரம் (1973) மூன்றாம் பிறையின் மரணம் (1974) பொய் மலரும் (1974) 2. காடு, 1978 காடு (ஜூன் 1977) இருளுக்கு அழைப்பவர்கள் (ஏப்ரல் 1977) கொசு வலைக்குள் தேனீக்கள் (1973) முதலைகள் (மார்ச் 1976) நிஜமான பாடல்கள் (நவம்பர் 1975) சரஸ்வதி மரணம் (மே 1977) இரவின் முடிவு (பிப்ரவரி 1976) குஷ்டரோகிகள் 1 , 2, 3 (1974) விடிகிற நேரங்கள் (செப...
நியூஸிலாந்து சங்கநாதம் தமிழ் ரேடியோ - 18 ஜனவரி 2013 பொங்கல் வாழ்த்து உரை மற்றும் தமிழ் மொழி, தமிழர் கலாச்சாரம், பொங்கல் கொண்டாட்டத்தின் பின்னணி பற்றி எழுத்தாளர் பா.செயப்பிரகாசம். வணக்கம். முதலில் நியூஸிலாந்து வாழ் தமிழர்களுக்கு எனது பொங்கல் வாழ்த்துக்கள். குறிப்பாய் தமிழ் கலை இலக்கிய வட்டத்தின் சங்கநாதம் வானொலி மூலமாக நாளை நடக்கவிருக்கும் பொங்கல் நிகழ்வுக்கு எனது வாழ்த்துக்கள். தமிழகத்தில் வாழும் ஒரு எழுத்தாளன் நான். எழுத்தாளன் என்பவன் முந்திய காலத்து ஞானிகள் போல சமூகத்தின் மனசாட்சியாக இயங்க வேண்டும் என்று கென்ய எழுத்தாளர் கூகி வா தியாங்கோ கூறுவார். தமிழ் சமூகத்தின் மனசாட்சியாய், தமிழகத்தின் மனச்சாட்சியாய் நான் உங்களுடன் இந்த பொங்கல் விழாவினை பகிர்ந்து கொள்ள விழைக்கிறேன். எந்த நாளில், எந்த சூழலில் நீங்கள் இந்த பொங்கல் திருநாளை எடுக்கிறீர்கள் என்பது மிக முக்கியமானது. நாம் ஒன்றும் இல்லை நமக்கென்று ஒன்றுமில்லை. ஏதிலிகளாய் உலக வீதிக்கு நடத்தப்பட்டுள்ளோம் நாம் என்றொரு நிலை இன்று இருக்கிறது. நமக்கென்று ஒரு காலம் இருந்தது. அது ஒரு காலம். அதுதான் பொங்கல் திருநாள், உழவர் திருநாள், அறு...
சிலரின் அறிவுத்துறைச் சாதனைகளைக் காட்டிலும், மனிதச் சாதனைகள் சமுதாயக் கணக்கில் பெரிதாக வரவு வைக்கப்படும். கன்னட எழுத்தாளர் சிவராம கரந்த 'யட்ச கானா' என்ற நாட்டார் கலையை அதன் வேரோடும் வேர் மணத்தோடும் மீட்டுருவாக்கம் செய்தார். 'யட்ச கானா' கூத்துக் கலையை தேடிய பயணத்தில், அவர் மக்களைக் கண்டடைந்தார். எதிர்பாராத பாறை வெடிப்பிலிருந்து, கைகளால் அடைக்க முடியாத வேகத்தில் ஊற்று பீறியடித்தது. அந்த மனித நேய ஊற்றில் நனைந்த உணர்வுகளால், கருத்துக்களால் இலக்கிய நதியின் கரைகளுக்கு அப்பாலுள்ளதாக கருதப்பட்ட சுற்றுச் சூழல் பாதுகபாப்பாளராக ஆனார் பின்னாளில். அருந்ததிராய்: புக்கர் பரிசு, அவர் இலக்கியத்திற்கு ஒரு தகுதியை மட்டும் தந்தது. நர்மதை அணைக்கட்டின் நிர்மானிப்பை எதிர்த்த மக்கள் போராட்டம், அவருக்கு எல்லாத் தகுதிகளையும் தந்தது. வங்க நாவலாசிரியர் மகாசுவேதா தேவியின் 1984ன் அம்மா நாவல் “கல்கத்தாவின் ஒரு முனையிலிருந்து மறுமனைக்கு இருபது வயது இளைஞன் செல்ல முடியாது. சென்று விட்டு உயிரோடு திரும்ப முடியாது: மேற்கு வங்கத்தில் பதினான்கு வயதிலிருந்து இரு...
கருத்துகள்
கருத்துரையிடுக