இரங்கல் செய்தி - தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்
தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறையில் சேர்ந்து பல உயர் பொறுப்புகளில் பணியாற்றியவர்.
சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், துறையில் மிகச் சிறந்த பங்கினை ஆற்றியுள்ளார். குறிப்பாக சிறுகதைகளில் கரிசல் வாழ்வின் துயரங்களை வெளிப்படுத்தியவர்.
‘ஒரு ஜெருசலம்' ‘காடு’ ‘மூன்றாவது முகம்' ‘இரவுகள் உடைபடும்’ ஆகிய தொகுப்புகளையும், அனைத்து சிறுகதைகளையும் தொகுத்து ‘பா.செயப்பிரகாசம் கதைகள்’ வெளியிட்டவர்.
தீவிர இடதுசாரி இயக்கத்தில் இணைந்து ‘சூரியதீபன்’ என்ற பெயரில் ‘மன ஓசை' இதழின் ஆசிரியர் குழுவில் அங்கம் வகித்து, அந்த இதழை இலக்கியத் தரத்துடன் கொண்டு வந்தவர்.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர். சமீபத்தில் எட்டயபுரத்தில் நடந்த பாரதி விழாவில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் பா.செயப்பிரகாசத்தின் பணியினை கௌரவிக்கும் வகையில் தமிழக அரசு சிறப்பு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தார்.
இவரது மறைவு கரிசல் இலக்கியத்திற்கு ஓர் பேரிழப்பாகும். மறைந்த எழுத்தாளருக்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்
கருத்துகள்
கருத்துரையிடுக