பா.செயப்பிரகாசம் புத்தக கொடை
பா.செயப்பிரகாசம் தன் வாழ்நாளில் எழுதிய & படித்த பல லட்சம் மதிப்புள்ள பல ஆயிரக்கணக்கான புத்தகங்களை தோழமைகளுக்கும், நூலகங்களுக்கும் கொடையாக கொடுத்துள்ளார். அவையாவும் அவர் ஆவணபடுத்தவோ விளம்பரப்படுத்தவோ முயலவில்லை. அவர் வாழ்ந்த கடைசி மூன்று மாதங்களில் அவர் பதிவு செய்த புத்தக கொடை மட்டும் இங்கே ஆவனப்படுத்தப்பட்டுள்ளது.
நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை நூலகத்திற்கு நாவல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள் முதலான நூல்களை பா.செயப்பிரகாசம் இரண்டு தவணையாக ஆகஸ்ட் & செப்டம்பர் 2022ல் வழங்கினார்.
நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை நூலகத்திற்கு நாவல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள் முதலான நூல்களை பா.செயப்பிரகாசம் இரண்டு தவணையாக ஆகஸ்ட் & செப்டம்பர் 2022ல் வழங்கினார்.
28 ஆகஸ்ட் 2022 |
4 செப்டம்பர் 2022 |
10 செப்டம்பர் 2022 |
"தூத்துக்குடி மாவட்டம், நாகலாபுரத்தில் இயங்கும் அரசுக் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர்கள் முனுசாமி, சம்பத்குமார் ஆகியோர் விளாத்திகுளத்தில் என் இல்லம் வருகை தந்தனர். என் இல்லத்தில் உள்ள நூல்களை அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கினேன். அதனைப் பெற்றுக் கொண்ட பேராசிரியர் முனுசாமி, தமிழ்த் துறை நூலகத்திலேயே என்னுடைய நூல்கள் 'பா.செயப்பிரகாசம் பயன்பாட்டு நூலகம் என்ற தலைப்பில் நூல்கள் வாசிப்புக்கு பயன்படுத்தப்படும்' என்று தெரிவித்தார். மிக்க மகிழ்ச்சியும் பெருமிதமுமாக உணர்ந்தேன். பேராசிரியர்கள் முனுசாமி சம்பத்குமார் ஆகியோருக்கு என் நன்றிகள்." - பா.செயப்பிரகாசம்
பா.செயப்பிரகாசம் மறைந்த பின் அவர் வைத்திருந்த பல புத்தகங்கள் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு கொடை கொடுக்கப்பட்டது.
கருத்துகள்
கருத்துரையிடுக