பா.செயப்பிரகாசத்தின் உடல் தான விருப்பம்

பா.செயப்பிரகாசம் இறப்பதற்கு முந்தைய மாதம் தன் உறவினர் & வழக்கறிஞருக்கு தன் உடல் தான விருப்பத்தை தெரிவுத்திருந்தார். அவரின் விருப்பப்படி அவர் உடல் தூத்துக்குடி அரச மருத்துவ மாணவர்களுக்காக 25 அக்டோபர் 2022 அன்று தானம் அளிக்கப்பட்டது.

***********************************************************************************

13 Sept 2022

அன்புள்ள அஜீ, 

அசையாச் சொத்துக்கள் எதுவுமில்லை; வங்கிக் கணக்கு இருக்கிறது. அதில் மாத ஓய்வூதியம் வருகிறது. அதை அசையும் சொத்து என எடுத்துக் கொள்ளலாம். உடலை மொத்தமாக அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பயில்வதற்காக வழங்கலாம். (இதயம் தவிர்த்து பிற உறுப்புகள்) கண்கள், காதுகள், கிட்னி, நுரை ஈரல், தோல் (skin) ஆகியவை சீரான இயக்கத்தில் உள்ளன. அவைகளை குறிப்பிட்டு வழங்கலாம். மருத்துவக் கல்லூரி Anotonomy department துறையில் அதற்கான படிவம் உள்ளது. அதை நிறைவு செய்து நான் அல்லது என் சார்பில் ஒருவர் ஒப்புதல் அளித்துக் கையெழுத்திட வேண்டும். அவர் நெருங்கிய உறவினராகவும் இருக்கலாம்.

மருத்துவ மைத்துனர் வெங்கடராமனையும் கலந்து ஆலோசியுங்கள்.

அன்புடன்

பா.செயப்பிரகாசம்

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

கரிசலின் வெக்கை உமிழும் கதைகள்..! - இரா.மோகன்ராஜன

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ

பா.செயப்பிரகாசம் நேர்காணல் - ஆல் இந்தியா ரேடியோ, புதுச்சேரி

அமுக்குப் பேய்

ஆளுமைகளுக்கு அஞ்சலி - பா.செயப்பிரகாசம் உரைகள் காணொளி