பா.செயப்பிரகாசம் இரங்கல் கூட்டம், விளாத்திகுளம் - 25 அக்டோபர் 2022

கரிசல்காட்டு எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் அவர்கள் 23.10.2022 அன்று காலமானார். அன்னாரது உடல் தூத்துக்குடி மருத்துவமனை மாணவர்கள் மருத்துவ பயிற்சிக்கு தானம் செய்வதற்கு முன்பாக, 25.10.2022 செவ்வாய்க்கிழமை நண்பகல் 12:00 மணியளவில் விளாத்திகுளம் அம்பாள் நகரில் (பா.செயப்பிரகாசம் அவர்கள் வசித்த இல்லத்திற்கு அருகில்) இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

பலதரப்பட்ட ஆற்றல்கள்‌ கலந்து கொண்ட இரங்கல்‌ கூட்டத்தில் தமுஎகச தலைவர்‌ ச.தமிழ்ச்செல்வன்‌, தமிழ்நாடு கலை இலக்கியப்‌ பெருமன்றத்‌ தலைவர்‌ மருத்துவர்‌ அறம்‌, செயலாளர்‌ காமராஜ்‌, எழுத்தாளர்‌ இராகுலதாசன்‌, தமிழக மக்கள்‌ பண்பாட்டுக்‌ கழகம்‌ தலைவர்‌ மீ.த.பாண்டியன்‌, திமுக விளாத்திகுளம்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ மார்கண்டேயன், நந்தகோபால் ஐ.ஏ.எஸ், மருத்துவர் வெங்கட்ராமன், வழக்கறிஞர் அஜிதா, மகன் சூரியதீபன், எழுத்தாளர்‌ கோணங்கி, இலக்கிய விமர்சகர்‌ ந.முருகேசபாண்டியன்‌, பா.செ.வுடன்‌ மனஓசை இதழில்‌ இணைந்து இயங்கிய வசந்தன்‌, இகக (மா-லெ) விடுதலை மாநிலக்குழுத்‌ தோழர்‌ அ.சிம்சன்‌, மக்கள்‌ கல்வி இயக்கம்‌ பேராசிரியர்‌ கோச்சடை சேவுகன், கதவு ஆசிரியர்‌ மதி கண்ணன்‌ உள்ளிட்டோர்‌ உரையாற்றினர். இரங்கல்‌ கூட்டத்தை முனைவர் சம்பத்குமார் தொகுத்தார்.

தோழர்‌ பா.செ எப்படி கரிசல்‌ இலக்கியவாதியாக, புரட்சிகர மா-லெ இயக்கத்தின்‌ சிந்தனையாளராக, மண்ணையும்‌ மக்களையும்‌ நேசித்த மனிதாபிமானியாக, ஈழ ஆதரவாளராக, மொழிப்‌ போராட்டக்‌ களப்போராளியாக, அனைத்து முற்போக்கு இடதுசாரிக்‌ கலை இலக்கியப்‌ படைப்பாளிகளுடன்‌ இணக்கமானவராக, மென்மையான உரையாளராக இயங்கியதை அனைவரும் நினைவு கூர்ந்தனர்‌.

தமுஎகச தலைவர் ச.தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தலைவர் மருத்துவர் அறம், பொதுச்செயலாளர் தோழர் காமராஜ், தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம் தலைவர் மீ.த.பாண்டியன், கதவு ஆசிரியர்‌ மதி கண்ணன் உள்ளிட்டோர் செங்கோடி போர்த்தி செவ்வணக்க முழக்கங்களுடன் தூத்துக்குடி மருத்துவமனைக்கு பா.செயப்பிரகாசம் உடலை வழி அனுப்பி வைத்தனர்.





















எழுத்தாளர்‌ இராகுலதாசன்‌



வழக்கறிஞர் அஜிதா

எழுத்தாளர் கோச்சடை சேவுகன்


தமுஎகச தலைவர்‌ ச.தமிழ்ச்செல்வன்‌

தமுஎகச தலைவர்‌ ச.தமிழ்ச்செல்வன்‌

நந்தகோபால் ஐ.ஏ.எஸ்

திமுக விளாத்திகுளம்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ மார்கண்டேயன்

தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம் தலைவர் மீ.த.பாண்டியன்

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

மலேயா கணபதி

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

நாட்டுடைமை ஆவாரா பெரியார்?