படைப்பாளியும் படைப்பும்
பா.செயப்பிரகாசம் அவர்களின் கதைகளை மதிப்பிட்டு எழுதும் வாய்ப்பு இருபதாண்டுகளுக்கு முன்பு (2000'ல்) எனக்குக் கிடைத்தது. பல முக்கியமான எழுத்தாளர்களின் படைப்புலகங்கள் குறித்துக் கலைஞன் பதிப்பகம் ஒரு வரிசையை ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி நான் பா.செ படைப்புலகம் எழுதினேன் - களந்தை பீர் முகம்மது. கரிசல் காட்டுக்காரரான பா.செயப்பிரகாசம் தனது முதல் கதையை எழுத, மதுரை மண்ணே கை நீட்டி அழைத்துள்ளது. பள்ளிப் படிப்பில் மனதில் ஆழமாய்த் தைத்த சம்பவம் ஒன்றின் மூலம் ‘குற்றம்’ என்ற முதல் கதை 1971-ல் வெளியானது. ‘தாமரை’ தான் முதல் கதையின் மேடை. அன்று துவங்கிய இலக்கியப் பயணம் இடையிலே சிறிது தடைப்பட்டு நின்று, மீண்டும் பழைய பிரவாகமாகவே பெருகிவிட்டது. தாமரை, மனஓசை இதழ்களில் இவரின் அதிகமான கதைகள் வெளியாகி, பரபரப்பையும் விவாதங்களையும் உண்டாக்கியுள்ளன. பாமரர்களின் சார்பான (தொய்வுறாத) படைப்பாளியான பா.செயப்பிரகாசமோ தமிழ்நாடு அரசின் செய்தித் துறையில் மிகமிக உயர்ந்த பதவி வரை முன்னேறிச் சென்று தன் தகுதிகளை, ஆளுமையை நிருபித்துக் கொண்டவர். ஆனால் இலக்கிய உலகில் இவர் அறியப்பட்டதெல்லாம் நாளது வரை ஒரு படைப்பாளியாகத்
கருத்துகள்
கருத்துரையிடுக