கி.பி.அரவிந்தன் ஒரு கனவின் மீதி - நூல் அறிமுக நிகழ்வு, 2015
நோர்வே - 06.09.2015
‘கி.பி அரவிந்தன்: ஒருகனவின் மீதி’ – நோர்வேயில் நடந்த நூல் அறிமுகம்
காலம்: 06.09.2015 (ஞாயிறு)
நேரம்: மாலை 4 மணி
இடம்: Linderud பாடசாலை மண்டபம் - Statsråd Mathiesens vei 27, 0594 Oslo
‘கி.பி அரவிந்தன்:ஒருகனவின் மீதி’ எனும் நூல் ஈழப்போராட்ட முன்னோடி, கவிஞர், ஊடகவியலாளர், சிந்தனையாளர் எனத் தமிழ்ச் சூழலில் பன்முகப் பரிமாணங்களையும் வகிபாகத்தினையும் கொண்டிருந்த கி.பி அரவிந்தன் அவர்களின் நினைவுகளைத் தாங்கி தமிழகத்தில் உருவாக்கம் பெற்றுள்ளது.
இந்நூல் புலம்பெயர் நாடுகளில் முதன்முறையாக நோர்வேயில் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. தமிழ்3 வானொலியின் ஏற்பாட்டில் 06-09-15 ஒஸ்லோவில் இதன் அறிமுகநிகழ்வு இடம்பெற்றது.
ஆயுதப் போராட்டத்தை முன்மொழிந்து, அதில் துணிந்து இறங்கிய முன்னோடிகளில் ஒருவராக, தமிழீழ விடுதலைக்கான கருத்தியல் ரீதியான, சிந்தனை ரீதியான பங்களிப்பாளராக, தமிழின் முக்கிய இலக்கியப் படைப்பாளிகளில் ஒருவராக என மூன்று பெரும் இயங்குதளங்களில் அரவிந்தனது வகிபாகத்தைக் குறிப்பிடலாம்.
இம்மூன்று இயங்குதளங்களும் முறையே தாயகம், தமிழகம், புலம் என மூன்று வெவ்வேறு வாழ்விடங்களில், மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் அமையப்பெற்றதாகும். அதற்கேற்றாற்போல், தாயகம், தமிழகம், புகல் நாடுகளில் வாழும் அவரோடு பழகிய, வெவ்வேறு காலகட்டங்களில் அவரோடு பணிபுரிந்த, அவரை அறிந்த தோழர்கள், எழுத்தாளுமைகள், கல்வியாளர்கள், இலக்கியகர்த்தாக்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டு ஆளுமைகளின் கட்டுரைகளும், நினைவுப் பகிர்வுகளும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
அரவிந்தன் எனும் ஆளுமையின் கணிசமான பரிமாணங்களைக் காத்திரமாகப் பதிவுசெய்துள்ளது இந்நூல். கட்டுரைகள் நேர்த்தியான முறையில் தொகுக்கப்பட்டு, நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்தஎழுத்தாளரும் கவிஞருமான பா.செயப்பிரகாசம், எழுத்தாளர் ரவிக்குமார் ஆகியோர் தொகுத்துள்ள இந்நூலினை, மணற்கேணி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
இக்குறிப்பினை எழுதியவரின் தலைமையில் இடம்பெற்ற நூல் அறிமுக அரங்கில் எழுத்தாளரும் கவிஞருமான பா.செயப்பிரகாசம், கவிஞர் இளவாலை விஜயேந்திரன், கவிஞர் சோதியா (சிவதாஸ் சிவபாலசிங்கம்), எழுத்தாளர் குணா கவியழகன் மற்றும் கி.பி அரவிந்தனின் உடன்பிறந்த சகோதரர் அல்போன்ஸ் கிறிஸ்தோபர் ஆகியோர் கருத்துரைகளை ஆற்றியிருந்தனர்.
இந்நூலின் தொகுப்பாளர்களில் ஒருவரான எழுத்தாளரும் கவிஞருமான பா.செயப்பிரகாசம் அவர்கள் நூல் உருவாக்க முயற்சி, கட்டுரைகள் தொகுக்கப்பட்ட முறைமை பற்றிக் கூறுகையில் மணற்கேணி, காக்கைச் சிறகினிலே, உயிரெழுத்து ஆகிய இதழ்களில் வெளிவந்த கட்டுரைகள் அவ்விதழ்களிடம் அனுமதி பெற்று மீள்பதிப்புச் செய்யப்பட்டதோடு, பதிதாகப் பலரிடமிருந்து கேட்டுப்பெற்ற கட்டுரைகளும், நினைவுப் பதிவுகளும் இணைக்கப்பட்டுள்ளது என்றார்.
“ஒருபோராளி என்ற சொல்லுக்குத் தன்னைத் தகுதிப்படுத்திக் கொண்டவராகவே கி.பி.அரவிந்தன் எக்காலத்திலும் இருந்தார்” என்ற வகையில்,அத்தகைய போராளியின் நினைவுகளைத் தாங்கிய இந்நூலினைப் பதிப்பித்து வெளிக்கொணர்ந்தமை மகிழ்ச்சிக்குரியது என்பதோடு, அதனையொரு காலக்கடனாகத் தாம் கருதுவதாகவும் செயப்பிரகாசம் குறிப்பிட்டார்.
நன்றி: புதினப்பலகை
சுவிற்சர்லாந்து - 22 செப்டம்பர் 2015

கி.பி.அரவிந்தன் தமிழர் வாழ்வியலின் ஒரு குறியீடு - பேர்ண், சுவிற்சர்லாந்து - 22 செப்டம்பர் 2015
ஈழப் போராட்ட முன்னோடி, கவிஞர், ஊடகவியலாளர் கி.பி.அரவிந்தன் அவர்களின் மறைவை ஒட்டி அவரது நண்பர்கள், தோழர்களால் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நூலான கி.பி.அரவிந்தன் - ஒரு கனவின் மீதி அறிமுக நிகழ்வு அண்மையில் சுவிற்சர்லாந்து நாட்டின் தலைநகர் பேர்ணில் அமைந்துள்ள ஞானலிங்கேச்வரர் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.
சிவராம் நினைவு மன்றம் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் நூலின் தொகுப்பாசிரியர்களுள் ஒருவரும் முற்போக்கு எழுத்தாளருமான தோழர் பா. செயப்பிரகாசம் கலந்து கொண்டு நூலை வெளியிட்டு வைத்தார். முதற் பிரதியினை பிரான்ஸ் நாட்டைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் மன்றத்தின் பணிப்பாளரும் மனித உரிமைப் போராளியுமான ச.வி.கிருபாகரன் பெற்றுக் கொண்டார்.
ஊடகவியலாளர் சண் தவராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், இலக்கியவாதி நயினை சிறி அவர்கள் நூலை அறிமுகம் செய்து உரையாற்றினார். கி.பி.அரவிந்தனின் அரசியல் சிந்தனைகள் தொடர்பில் அரங்கச் செயற்பாட்டாளர் திருமதி சிவாஜினி தேவராஜா அவர்களும் கி.பி.அரவிந்தன் அவர்களுடனான தனது அறிமுகம் என்ற தலைப்பில் ச.வி.கிருபாகரன் அவர்களும் உரையாற்றினர்.
தோழர் பா.செயப்பிரகாசம் தனது சிறப்புரையில், கி.பி.அரவிந்தன் அவர்களின்போராட்ட வாழ்வு ஏனையோருக்கு முன்மாதிரியான ஒன்று எனக் குறிப்பிட்டதுடன், தான் ஒரு மனிதனாகவும், தமிழனாகவும், சர்வதேச மனிதனாகவும் இருப்பதாலேயே அரவிந்தன் தொடர்பான நூலை வெளியிட முன்வந்ததாகவும் குறிப்பிட்டார்.
நூலை அறிமுகம் செய்த நயினை சிறி, ஈழப் போராட்டத்தை ஆய்வு செய்ய முயலும் எவரும் கி.பி.அரவிந்தன் - ஒரு கனவின் மீதி என்ற நூலைத் தவிர்த்து விட்டு அத்தகைய ஆய்வை முழுமையாகச் செய்துவிட முடியாது என்றார்.
சிவாஜினி தேவராஜா தனது உரையில், கி.பி.அரவிந்தன் தமிழர் வாழ்வியலின் ஒரு குறியீடு, தனது அரசியல் அனுபவத்தை இலக்கியமாக மாற்றிய அவர் அதற்காக கவிதையைத் தேர்ந்தெடுத்தார் என்றார்.
நூல் அறிமுகத்தைத் தொடர்ந்து தோழர் பா. செயப்பிரகாசம் அவர்களுடனான கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலின் போது ஈழப் போராட்டத்தின் பின்னடைவு தொடர்பில் விஞ்ஞானபூர்வமான ஆய்வு நடாத்தப்பட வேண்டும் என்ற விடயம் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நன்றி: தமிழ்வின்

தஞ்சை - 25 அக்டோபர் 2015
தினமணி (தஞ்சை) - 28 அக்டோபர் 2015 |
கருத்துகள்
கருத்துரையிடுக