அன்புள்ள பஞ்சுவுக்கு



7 டிசம்பர் 2012

அன்புள்ள பஞ்சுவுக்கு,
ஆஸ்திரேலியா நலமாக வந்தடைந்தேன். பருவநிலை இதமாக உள்ளது.

கையோடு காலச் சுவடு எடுத்து வந்தேன். தங்களின் மதுரை நிகழ்வின் பேச்சுச் சுருக்கம் வாசித்தேன். சுய தரிசனம் தெளிவாகக் கிடைத்துள்ளது. அதனூடாகவே விமர்சனமும் வெளிப்படக் கிடைத்தது. காலச்சுவடு மூலம் வெளிப்பத்தப்படும் எந்தப் பொருளும் கருத்தும் கவனத்தில் கொள்ளப்படும் என்பதை நயமான தன்மையில் காட்டியுள்ளீர்கள். மட்டுமல்ல, பல நேரங்களில் விவாதத்திற்குரியதாகவும் ஆக்கப்படும் எனவும் கவனப்படுத்தியிருக்கிறீர்கள். தமிழ்க் கலை இலக்கியச் சூழலின் உள் செயல்படும் அரசியல் பற்றியும் சுய அனுபவங்களிலிருந்தே சுட்டிக் காட்டியுள்ளிர்கள். ஒவ்வொருவர் வாழ்வின் இலக்கிய முயற்சிகளும் ஒவ்வொரு வகையாகவே தொடங்கும். அதற்கென்று பொதுத் தன்மை என இருப்பதில்லை. இருக்க வேண்டுமென்பதும் இல்லை. தங்களின் உரையில் இது மையம் கொண்டுள்ளது.

வாழ்த்துக்கள்.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

போராட்டக் களங்களின் சகபயணி

பா.செயப்பிரகாசம் நூல்கள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌