பிரபலமான பதிவுகள்
இவர்கள் மகாத்மாக்கள் அல்ல - மயிலை பாலு
அந்தக் கடைசிப் பெண்ணாக - இலக்கிய ரசனைகளோடு இணைந்த அனுபவங்கள்
வீர.வேலுச்சாமி அஞ்சலி கடிதம்
சென்னை 8.7.2004 அன்புள்ள பிரகாஷ், அப்பா காலமாகிவிட்டார் என கி.ரா சொல்லித்தான் தெரிந்தது. நான்கு நாட்களாய் தொலைபேசியில் முயற்சி செய்தேன். “எல்லா வழித்தடங்களும் சுறுசுறுப்பாக இருக்கின்றன” என்ற பதிலே வந்தது. தொயந்தடியாய் என்ன கோளாறு என்று தெரியவில்லை. பிறகுதான் “நீத்தார் நினைவு' பத்திரிகை கிடைத்தது. கி.ரா கடிதத்தில் எழுதியிருந்தார், “கிட்டத்தட்ட எல்லாமே உதிர்ந்துகொண்டு வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். நாமும் எப்போ “பொத்”தென்று உதிர்ந்து விழப் போகிறோமோ தெரியல” நேற்று கந்தர்வன்; கொஞ்சம் முன்னால் கவிஞர் மீரா, இன்று அப்பா. இப்போதுதான் எழுதியது போலிருக்கிறது கந்தர்வனைப் பற்றி. மரணக் குறிப்பு எழுதி கணையாழி இதழில் வெளியாகி, முழுசாய் ஒரு மாசம் கூட முடியவில்லை. “வீர, வேலுச்சாமியை வாசித்திருக்கிறீர்களா? அற்புதமான கலைஞன். யதார்த்தம்னா என்னாங்கறத அவர்ட்டதான் தெரிஞ்சிக்கிறனும்” என்றார் கந்தர்வன். அவர்தான் அப்பாவைப் பற்றி முதலில் என்னிடம் சொன்னவர். பிறகு தான் வீர.வேலுச்சாமியை தாமரை இதழ் மூலம் கிரகிக்க ஆரம்பித்தேன். எழுதிய எழுத்தின் பச்சை காயாமலிருக்கிறபோதே,...
வீர.வேலுச்சாமிக்கு கடிதம்
சென்னை, 22-03-2003 அன்பு நண்பருக்கு, கடிதம் வந்தது. இப்படி அவ்வப்போது தொடர்பு கொள்ளுங்கள். நனவில் உயிர்த்தெழுதல் நிகழும். அந்தக் கதை நீண்டதாக இருந்ததால், படைப்பாளிக்கு எல்லாமே முக்கியம் தானே, வாசிப்பில் விடுபட்டுத் தெரிகிற இடங்களை வெட்டுங்கள் என்று சொல்ல, ஏகத்துக்கும் வெட்டி, இஷ்டத்துக்கு பகுதி பிரித்து என்னென்னமோ செய்து விட்டார்கள். அதனால் ஒரு எழவும் புரியாது. புரியாததுக்கு எல்லாம் இருக்கறதே ஒரு பெயர் “பின் நவீனத்துவம்”! 30-03-2003-ல் கல்கி இதழில் சாகித்ய அகாதமி பற்றி எனது நேர்காணல் வருகிறது. சாகித்ய அகாதமியை எப்படி இந்துத்வா ஆக்கரமித்துவிட்டது என்று விளக்கியுள்ளேன். எனக்கென்னமோ பிரகாஷை ஒன்றுக்கும் ஆகாமல் செய்துவிட்டது போல் தோன்றுகிறது. அவனுக்குள் எப்பேர்ப்பட்ட கலைஞன் இருக்கிறான். வீர.வேலுச்சாமி என்ற ஆகாயமார்க்க நிழல்பட்டதால் அவனுக்குள் கருவுற்றது படைப்பாற்றல். வந்தது வரட்டும் என்று ஒரு நாவல் எழுதச் சொல்லுங்கள் - வளமாய் வெளிப்படும். நட்புடன் பா.செயப்பிரகாசம்
கருத்துகள்
கருத்துரையிடுக