'ஒரு ஜெருசலேம்' சிறுகதை தொகுப்பு - ஆய்வு பேட்டி


நேர்காணல் செய்தவர்: பா.ஜான்சி வீரஓவு

நாள்‌: 24.04.2017


1. உங்களுக்கு சிறுகதை எழுதும்‌ ஆர்வம்‌ எப்படி வந்தது?

பள்ளி நூலகத்தில்‌ சிறுகதை, நாவல்‌, நாடகம்‌ முழுவதையும்‌ வாசித்த முதல்‌ மாணவன்‌. கல்லூரி வாழ்வில்‌ கவிதைகள்‌ தொடர்பான வாசிப்பும்‌ சமூக உணர்வுகளும்தான்‌ சிறுகதை எழுதுவதற்கானத்‌ தூண்டுதல்‌.


2. சிறுகதை எழுதுவதற்குக்‌ காரணமாக அமைந்தது எது?

நேர்மை, நியாயம்‌, மனதில்‌ போட்டு கொமைதல்‌ இதுவே மூலக்காரணமாக அமைந்தது.


3. உங்கள்‌ படைப்பின்‌ முதல்‌ வாசகர்‌?

நான்தான்‌.


4. உங்களதுப்‌ பணியினைத்‌ தங்களது படைப்பு பாதித்தது உண்டா?

இல்லை. புரட்சிக்கரமான கருத்துகளுக்கு மடங்கி போகும்போது சூரியதீபன்‌ எனும்‌ புனைப்பெயர்‌ பயன்படுத்த வேண்டியதாயிற்று.


5. உங்கள்‌ கதைக்களம்‌ எதைச்‌ சார்ந்தது?

கிராமம்‌, கிராமம்‌ சார்ந்த வாழ்க்கை, நகரம்‌, நகரம்‌ சார்ந்த வாழ்க்கை, அலுவலக வாழ்க்கையில்‌ எதிர்கொண்ட பிரச்சினைகளே கதைக்களமாக அமைந்தது.


6. உங்கள்‌ கல்லூரி வாழ்க்கை இனிமை மிகுந்ததா?

வறுமை மிகுந்தது.


7. படைப்பாளியின்‌ தனித்தன்மை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்‌?

சமகாலத்திற்கு ஏற்றாற்போல்‌ கருத்துகளை உருவாக்கியும்‌ கொள்கையோடும்‌ இலக்கியப்‌ போக்குகளை அவதானித்து இருக்க வேண்டும்‌.


8. உங்களின்‌ முதல்‌ படைப்பு வெளியிட்ட இதழ்‌ பற்றி...

முதல்‌ படைப்பு குற்றம்‌. வெளியிட்ட இதழ்‌ தாமரை (1971).


9. தங்களது சிறுகதை கவித்துவம்‌ மிகுந்ததாக உள்ளதே...

மொழியாக்கம்‌ செய்யப்பட்ட உலக நாவல்கள்‌, சிறுகதைகள்‌, மலையாள நாவல்கள்‌, வங்காள நாவல்கள்‌, உருதுக்கவிதைகள்‌ இவற்றோடு என்‌ தனிப்பட்ட சிந்தனைகளுமே காரணம்‌.


10. சிறுகதையில்‌ பெரும்பாலும்‌ பெண்களின்‌ துயரங்கள்‌ பற்றிப்‌ பேசப்படுகிறதே...

வங்காள நாவலாசிரியர்‌ சரத்‌ சந்திரர்‌ எழுதிய பெண்ணின்‌ அவலநிலை என்னும்‌ நாவலும், சமுதாயத்தில்‌ நிலவும்‌ யதார்த்தமான பெண்களின்‌ துயரங்களுமே காரணம்.


11. 'ஒரு ஜெருசலேம்‌' தொகுதியில்‌ உள்ள கதைகள்‌ கற்பனைக்‌ கதைகளா? நிஜ கதைகளா?

யதார்த்தங்களும்‌ புனைவுகளும்‌ இணைந்தது.


12. தற்போது எதைப்‌ பற்‌றி எழுதிக்கொண்டிருக்கிறீ்கள்‌?

'பள்ளிக்கூடம்‌' என்னும்‌ முதல்‌ நாவலும்‌, காக்கைச்‌ சிறகினிலே என்னும்‌ மாத இதழில்‌ வெளிவரும்‌ 'புத்தர்‌ ஏன்‌ நிர்வாணமாய்‌ ஓடினார்‌?' என்னும்‌ சிறுகதையும்‌.


13. மனிதநேயம்‌ பற்றி தங்கள்‌ கருத்து...

சமுதாயத்தின்‌ துயரத்தைக்‌ களைந்து ஓட்டுமொத்த குழுவிற்கு ஆதரவு தருவது.


14. தங்கள்‌ சிறுகதைக்கு கிடைத்த விருது பற்றி...

1975-இல்‌ கணையாழியில்‌ வெளிவந்த 'அக்கினி நட்சத்திரம்‌' என்ற சிறுகதைக்கு இலக்கியச்‌ சிந்தனை விருதும்‌, சிறந்த சிறுகதைக்கான விருதும்‌ கிடைத்தது.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ

நாம் எதிர்கொள்ளும் பண்பாட்டுச் சவால்கள்

மலேயா கணபதி

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?