காலங்களினூடாக ஏழும் குரல்
சிலரின் அறிவுத்துறைச் சாதனைகளைக் காட்டிலும், மனிதச் சாதனைகள் சமுதாயக் கணக்கில் பெரிதாக வரவு வைக்கப்படும். கன்னட எழுத்தாளர் சிவராம கரந்த 'யட்ச கானா' என்ற நாட்டார் கலையை அதன் வேரோடும் வேர் மணத்தோடும் மீட்டுருவாக்கம் செய்தார். 'யட்ச கானா' கூத்துக் கலையை தேடிய பயணத்தில், அவர் மக்களைக் கண்டடைந்தார். எதிர்பாராத பாறை வெடிப்பிலிருந்து, கைகளால் அடைக்க முடியாத வேகத்தில் ஊற்று பீறியடித்தது. அந்த மனித நேய ஊற்றில் நனைந்த உணர்வுகளால், கருத்துக்களால் இலக்கிய நதியின் கரைகளுக்கு அப்பாலுள்ளதாக கருதப்பட்ட சுற்றுச் சூழல் பாதுகபாப்பாளராக ஆனார் பின்னாளில். அருந்ததிராய்: புக்கர் பரிசு, அவர் இலக்கியத்திற்கு ஒரு தகுதியை மட்டும் தந்தது. நர்மதை அணைக்கட்டின் நிர்மானிப்பை எதிர்த்த மக்கள் போராட்டம், அவருக்கு எல்லாத் தகுதிகளையும் தந்தது. வங்க நாவலாசிரியர் மகாசுவேதா தேவியின் 1984ன் அம்மா நாவல் “கல்கத்தாவின் ஒரு முனையிலிருந்து மறுமனைக்கு இருபது வயது இளைஞன் செல்ல முடியாது. சென்று விட்டு உயிரோடு திரும்ப முடியாது: மேற்கு வங்கத்தில் பதினான்கு வயதிலிருந்து இரு...
கருத்துகள்
கருத்துரையிடுக