போராட்டக் களங்களின் சகபயணி
“கவிஞனின் பணி கவிதை மட்டுமா? ஒரு போராட்டத்தை முன்னின்று நடத்தவும் வேண்டும்” - வியட்னாம் புரட்சியாளர் ஹோசிமின். “எழுத்தாளன் என்பவன் பழங்கால ஞானி போல் மனசாட்சியுடன் இயங்கவேண்டும்” - ஆப்பிரிக்க கென்ய எழுத்தாளர் கூகிவாதியாங்கோ. இவ்வாசகங்களின் சாட்சியாய் தமிழிலக்கியவாதிகளில் நான் கண்டவர் இருவர் - பாவலர் இன்குலாப், எழுத்தாளர் அஸ்வகோஷ் என்ற இராசேந்திரசோழன். எதுகை மோனைகளில் ‘அந்தர் பல்டி’ அடித்து, தனிமனிதத் துதிபாடும் எழுத்துக்களும், புராணப்புளுகுப் பேச்சுக்களும், வெட்டிப் பட்டிமன்றங்களும், மதியச் சாப்பாட்டுக்குப் பின்னான அரைத்தூக்க ஆராய்ச்சிகளும் கலை இலக்கியக் கொடியேற்றிப் பெருமிதம் கொண்டிருந்த நாட்களில் இவர்களுடைய வருகை நிகழ்ந்தது. ‘யாருக்கு கலை, இலக்கியம்? எந்த நோக்கத்திற்காக?’ என்ற திசைப் புறக்கணிப்புச் செய்து, ‘கலை கலைக்காக’ என்னும் கொள்கையில் மயிர் பிளக்கும் வாதங்களில் ஒரு பகுதியினர் மூழ்கிக் கொண்டிருக்கையில் இவர்கள் தோன்றினர். நிலம் பார்த்து நீர் வழங்கும் மழை மேகங்கள் போல் இவர்கள் பயணிப்பு நடந்தது. கவிதைகளில் தொடங்கினார் இன்குலாப்; கட்டுரை, பாடல், இதழியல் ஆசிரியர...
கருத்துகள்
கருத்துரையிடுக