சென்னை, 22-03-2003 அன்பு நண்பருக்கு, கடிதம் வந்தது. இப்படி அவ்வப்போது தொடர்பு கொள்ளுங்கள். நனவில் உயிர்த்தெழுதல் நிகழும். அந்தக் கதை நீண்டதாக இருந்ததால், படைப்பாளிக்கு எல்லாமே முக்கியம் தானே, வாசிப்பில் விடுபட்டுத் தெரிகிற இடங்களை வெட்டுங்கள் என்று சொல்ல, ஏகத்துக்கும் வெட்டி, இஷ்டத்துக்கு பகுதி பிரித்து என்னென்னமோ செய்து விட்டார்கள். அதனால் ஒரு எழவும் புரியாது. புரியாததுக்கு எல்லாம் இருக்கறதே ஒரு பெயர் “பின் நவீனத்துவம்”! 30-03-2003-ல் கல்கி இதழில் சாகித்ய அகாதமி பற்றி எனது நேர்காணல் வருகிறது. சாகித்ய அகாதமியை எப்படி இந்துத்வா ஆக்கரமித்துவிட்டது என்று விளக்கியுள்ளேன். எனக்கென்னமோ பிரகாஷை ஒன்றுக்கும் ஆகாமல் செய்துவிட்டது போல் தோன்றுகிறது. அவனுக்குள் எப்பேர்ப்பட்ட கலைஞன் இருக்கிறான். வீர.வேலுச்சாமி என்ற ஆகாயமார்க்க நிழல்பட்டதால் அவனுக்குள் கருவுற்றது படைப்பாற்றல். வந்தது வரட்டும் என்று ஒரு நாவல் எழுதச் சொல்லுங்கள் - வளமாய் வெளிப்படும். நட்புடன் பா.செயப்பிரகாசம்
சிலரின் அறிவுத்துறைச் சாதனைகளைக் காட்டிலும், மனிதச் சாதனைகள் சமுதாயக் கணக்கில் பெரிதாக வரவு வைக்கப்படும். கன்னட எழுத்தாளர் சிவராம கரந்த 'யட்ச கானா' என்ற நாட்டார் கலையை அதன் வேரோடும் வேர் மணத்தோடும் மீட்டுருவாக்கம் செய்தார். 'யட்ச கானா' கூத்துக் கலையை தேடிய பயணத்தில், அவர் மக்களைக் கண்டடைந்தார். எதிர்பாராத பாறை வெடிப்பிலிருந்து, கைகளால் அடைக்க முடியாத வேகத்தில் ஊற்று பீறியடித்தது. அந்த மனித நேய ஊற்றில் நனைந்த உணர்வுகளால், கருத்துக்களால் இலக்கிய நதியின் கரைகளுக்கு அப்பாலுள்ளதாக கருதப்பட்ட சுற்றுச் சூழல் பாதுகபாப்பாளராக ஆனார் பின்னாளில். அருந்ததிராய்: புக்கர் பரிசு, அவர் இலக்கியத்திற்கு ஒரு தகுதியை மட்டும் தந்தது. நர்மதை அணைக்கட்டின் நிர்மானிப்பை எதிர்த்த மக்கள் போராட்டம், அவருக்கு எல்லாத் தகுதிகளையும் தந்தது. வங்க நாவலாசிரியர் மகாசுவேதா தேவியின் 1984ன் அம்மா நாவல் “கல்கத்தாவின் ஒரு முனையிலிருந்து மறுமனைக்கு இருபது வயது இளைஞன் செல்ல முடியாது. சென்று விட்டு உயிரோடு திரும்ப முடியாது: மேற்கு வங்கத்தில் பதினான்கு வயதிலிருந்து இரு...
1948-இல் பாரதி பாடல்கள் நாட்டுடைமையாயின. குஜராத் சேட் ஒருவர் தனிப்பட்ட சொத்தாக வைத்திருந்த அதை, திரைப்பட அதிபர் ஏ.வி.மெய்யப்ப செட்டியார் வாங்கி உரிமை பெற்றிருந்தார். தனியருவரின் சொத்தாக அந்த இலக்கியச் செல்வம் பாதுகாக்கப்படக் கூடாது என எழுத்தாளர்கள் வல்லிக்கண்ணன், நாரண துரைக்கண்ணன், கவிஞர் திருலோக சீதாராம், ஜீவா போன்றோரைக் கொண்ட 'பாரதி விடுதலைக் கழகம்' நாட்டுடைமையாக்க வேண்டுமென்ற கருத்தை மக்களிடம் உருவாக்கியது. அதில் தோழர் ஜீவாவின் பணி முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ்நாடெங்கணும் சென்று பரப்புரை செய்து அப்போது தமிழக முதல்வராயிருந்த ஓமந்தூர் ராமசாமியைச் சந்தித்து நாட்டுடைமையாக்கிடும் வேண்டுகோளை முன்வைத்த பாரதி விடுதலைக் கழகம் போல் "பெரியார் விடுதலைக் கழகம்" உருவாகும் காலம் வந்துவிட்டதா? பெரியார் திடலிலிருந்து பெரியாரை விடுதலை செய்யும் காலம், உண்மையில் உருவாகிவிட்டது என்றே தோன்றுகிறது. அரசியல் தலைவர்கள், கலைஞர்கள், இலக்கியவாதிகள், வழிகாட்டிகள் அனைவரும் தனது, தமது என்று சுருக்கிக்கொள்ளாது, மானுட விடுதலை நோக்கி வாழ்வதினால், அவர்களுடைய கருத்துகளும் சமூகத்தின் பொதுச் சொத...
கருத்துகள்
கருத்துரையிடுக