வீர.வேலுச்சாமிக்கு கடிதம்

சென்னை,

22-03-2003

அன்பு நண்பருக்கு,

கடிதம்‌ வந்தது. இப்படி அவ்வப்போது தொடர்பு கொள்ளுங்கள்‌. நனவில்‌ உயிர்த்தெழுதல்‌ நிகழும்‌. 

அந்தக்‌ கதை நீண்டதாக இருந்ததால்‌, படைப்பாளிக்கு எல்லாமே முக்கியம்‌ தானே, வாசிப்பில்‌ விடுபட்டுத்‌ தெரிகிற இடங்களை வெட்டுங்கள்‌ என்று சொல்ல, ஏகத்துக்கும்‌ வெட்டி, இஷ்டத்துக்கு பகுதி பிரித்து என்னென்னமோ செய்து விட்டார்கள்‌. அதனால்‌ ஒரு எழவும்‌ புரியாது. புரியாததுக்கு எல்லாம்‌ இருக்கறதே ஒரு பெயர்‌ “பின்‌ நவீனத்துவம்‌”!

30-03-2003-ல்‌ கல்கி இதழில்‌ சாகித்ய அகாதமி பற்றி எனது நேர்காணல்‌ வருகிறது. சாகித்ய அகாதமியை எப்படி இந்துத்வா ஆக்கரமித்துவிட்டது என்று விளக்கியுள்ளேன்‌.

எனக்கென்னமோ பிரகாஷை ஒன்றுக்கும்‌ ஆகாமல்‌ செய்துவிட்டது போல்‌ தோன்றுகிறது. அவனுக்குள்‌ எப்பேர்ப்பட்ட கலைஞன்‌ இருக்கிறான்‌. வீர.வேலுச்சாமி என்ற ஆகாயமார்க்க நிழல்பட்டதால்‌ அவனுக்குள்‌ கருவுற்றது படைப்பாற்றல்‌. வந்தது வரட்டும்‌ என்று ஒரு நாவல்‌ எழுதச்‌ சொல்லுங்கள்‌ - வளமாய்‌ வெளிப்படும்‌.

நட்புடன்‌

பா.செயப்பிரகாசம்‌

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

மலேயா கணபதி

காலங்களினூடாக ஏழும்‌ குரல்‌

அமுக்குப் பேய்