"இருளுக்கு அழைப்பவர்கள்” ஒரு பாவப்பட்ட மலை சாதிப் பெண்ணின் கதை
ஜனங்களாக. வனங்களைக் காக்கிறோம், புலிகளைக் காக்கிறோம், சந்தனமரங்களை, செம்மரங்களைக் காக்கிறோம் என்னும் போர்வையில் அரசு இயந்திரங்கள். இந்தியாவின் பாவப்பட்ட இவர்கள் மீது நடத்தும் அட்டூழியங்களை நாம் அறிவோம். வாச்சாத்தியில் இது அப்பட்டமாக நடந்தது. மலைகளில் கிடக்கும் அதன் விளைபொருட்களைச் சேகரித்து விற்பனைக்குக் கொண்டு செல்லும் மலைவாழ் மக்களின் மீது அவ்வப்போது வனத்துறை நடத்தும் தாக்குதல்களும், அதிலிருந்து அம்மக்கள் மீண்டு வருவதும் இயல்பானவைகள். பெரும்பாலும் சாட்சியமற்றவைகளாக நடத்தப்படும் இத்தாக்குதல்களிலிருந்து வனத்துறையினரும், போலீசாரும் மிக எளிதில் தப்பித்துச் செல்கின்றனர். பொன்னேரி என்னும் மலைக் கிராமத்தின் சண்முகமயிலுக்கு வனத்துறையினரால் நேர்ந்த கொடுமையும் (கற்பழிப்பு), நீதிமன்றத்தில் சண்முகமயிலை நோக்கிய நீதிபதியின் அறமற்ற, இயற்கைக்கு மாறான கேள்விகளும், நேரடி சாட்சியங்கள் இல்லாமையால் குற்றவாளிகள் இறுதியில் விடுவிக்கப்பட்டமையுமான காட்சிகளை மிகவும் அற்புதமாக தனது எழுத்தில் தனக்கேயுரிய பாணியில் வடித்திருப்பார் பா.செயப்பிரகாசம். கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி தருகிறேன் என்று நீதிமன்றம் அழை